சோப்பு நுரை

கை கழுவும் போது சோப்பு நுரை நீர்க்குழாயின் முனையில் பட்டுவிட்டால் கவனமாக சோப்பு நுரை போகும் வரை அதையும் கழுவி விடும் வழக்கம் கொண்டவன், இப்போதெல்லாம் சோப்பு நுரையை நீர்க்குழாயின் திருகு நாதாங்கி, கதவின் கைப்படி என எல்லாவற்றிலும் படட்டுமென  தடவி விடுகிறேன் சிரத்தையாக. கொரோனா காலம்! – பரமன் பச்சைமுத்துசென்னை09.04.2020 Facebook.com/ParamanPage

Uncategorized

ஒரு வார்த்தையில் அடைத்து விட முடிவதா உணர்வு!

‘டைட்டானிக் பாபு ஆர் ஏ புரம் நியூஸ்பேப்பர்’ செல்லிடப்பேசியின் தொடுதிரையில் ‘காண்டாக்ட்ஸ்’ஸில் ‘ஆர்ஏ புரம் நியூஸ்பேப்பர்’ என்று டைப் செய்து தேடுகிறேன். புதிதாக ஒரு மனிதரின் எண்ணை  செல்லிடப்பேசியில் சேர்க்கும்போது, தேடும்போது எளிதாக இருக்கும் என்பதற்காக அவருக்கு ஒரு அடையாளத்தையும் சேர்த்து பதிவது நம் இயல்புதானே. ‘உமா ப்ரியாஸ் ஃப்ரண்ட்’ ‘ராஜேந்திரன் எலக்ட்ரிகல்ஸ்’ ‘வாணிஸ்ரீ கெமிஸ்ட்ரி… (READ MORE)

Self Help

என் சினிமா விமர்சனத்தை தினமலர் வெளியிட்டுள்ளது

‘அயலூர் சினிமா’ என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள ‘ஐயப்பனும் கோஷியும்’ திரைவிமர்சனத்தை, தினமலர் இன்று வெளியிட்டுள்ளது. தினமலர் திருச்சி – தஞ்சை – நாகை – வேலூர் – திருவண்ணாமலை – ஈரோடு – புதுக்கோட்டை – நாகை பதிப்புகளில் இது வெளியாகி உள்ளது. வாழ்க! – பரமன் பச்சைமுத்து

Uncategorized

wp-15860251707551544230341540481640.jpg

‘நாலாவது சார்’ – தி ஜானகிராமன்

‘பொட்டமாரி’ ‘ஆத்தா சார்’ ‘அக்கா சார்’ என்று கேலி பேசும் தன் பள்ளியின் நாலாவது சாரை நாயகனாகப் பார்க்கிறான் சின்னஞ்சிறு முத்தப்பன். நாலாவது சாரின் கை விரல்கள் பட்டால் தென்னை ஓலைகளில் பொம்மைகளில் கிளி உருவாகும், பாம்பு நாக்கை நீட்டிக் கொண்டு கண்ணை உருட்டிக் கொண்டு எழும். ‘கொண்ணுப்புடுவேன் கொண்ணு’ என்றே மூணாவது சாரும் இரண்டாவது… (READ MORE)

பொரி கடலை

,

தகப்பன் மனசு

‘அப்பா, டெல் மீ ஈஃப் திஸ் ஈஸ் டூ லைட். ஈஃப் த டேஸ்ட் ஈஸ் நாட் ஓக்கே, கிவ் இட் டு மீ, ஐ வில் ட்ரிங்க்’ ‘அது எப்படி இருந்தாலும் நான் குடிப்பேன் செல்லமே, நீ போட்டங்கறதுக்காகவே!’ மகள்கள் என்றதும் ஊற்று பெருக்கிறது தகப்பன்களுக்கு ##குவாரன்டைன்-நேர-களிப்புகள் பரமன் பச்சைமுத்து 04.04.2020

Uncategorized

டேய் வானரங்களா…

டேய் வானரங்களா…   அன்பழகன் சார் கால்களை மடித்து சம்மணமிட்டு உட்கார்ந்து ‘உலகம் யாவையும் தாமுளவாக்கலும்…’ என்று தொடங்கினால், ஊரே அடங்கிக் கேட்கும்.  அப்படித்தான் ஒவ்வொரு நாளும் தொடங்குவார் அவர். அதுவும் ‘அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே!’ என்று அந்தக் குரலில் அவர் முடிக்கும்போது ஏழாவது படிக்கும் சிறுவனான நான் சொக்கிக் போயிருப்பேன். மார்கழி… (READ MORE)

பொரி கடலை

புதிய வானம் காட்டும்

தினமலர் ஆசிரியர் குழுவிலிருந்து அழைப்பு. …. ‘பரமன் சார்.. கொரோனா பிரச்சினைல, ஏஜென்ட்ஸ் சப்ளிமெண்ட் பேப்பரே வேணாங்கறாங்க. ஞாயிறு மலர்லேருந்து எல்லாத்தையும் சுருக்கி ரெண்டு பக்கமாக்கி மெயின் எடிஷன்லே பிரிண்ட் பண்ணிடறோம்.  நீங்க நல்லா எழுதுவீங்க. இப்ப நிலைமைல பெரிய கட்டுரை வேண்டாம், போட முடியாது. சின்னதா வேணும். டைனி ஆர்ட்டிக்கிள்.  கொரோனா பத்தி் வேணவே… (READ MORE)

Uncategorized

இறை நம்பிக்கையென்பது…

இறை நம்பிக்கை என்பதுஇதைக் கொடு அதைக் கொடு என்பதல்ல, கொடுத்ததை முதலில் ஏற்றுக் கொள்வது. இறைவன் மிகப் பெரியவன்! – பரமன் பச்சைமுத்து #Faith #Gratefulness #QuarantineTime #Malarchi #StayPositive #BeInTouchWithPositivity

Spirituality

விழிப்புணர்வோடு வெல்லுவோம் கொரோனாவை! :
பரமன் பச்சைமுத்து

ஹாங்காங்கில் பல ஆண்டுகள் வசித்து விட்டு இப்போது சென்னை திருவான்மியூரில்  வசிக்கும் தொழில் முனைவரான நண்பர் முத்து ரகுபதி, இன்றும் முகத்தைத் துடைக்க புறங்கையையே பயன்படுத்துகிறார்.  உள்ளங்கையை முகத்துக் கொண்டு செல்வதேயில்லை. அனிச்சை செயலாகவே அடிக்கடி கையைக் கழுவுகிறாராம்.  சார்ஸ் வைரஸ் தொற்று வந்த போது ஹாங்காங்கே எதிர்த்துப் போராடிய போது கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

விவசாயப் பொருட்களுக்கு தடை விலக்கல் – நல்ல செய்தி!

இன்று விவசாயப் பொருட்களுக்கு தடை விலக்கல் செய்திருக்கிறது அரசு. மிக மிக நல்ல செய்தி.  தர்ப்பூசணிப் பழங்களை, வெள்ளரிக்காய்களை இனி மனம் நொந்து வீதியில் கொட்ட மாட்டார்கள் விவசாயிகள். தவிர, தோட்டங்களில் விளைவது மக்களுக்குத் தொடர்ந்து சென்றால்தான் விவசாய உற்பத்தியாளர்கள் நுகரும் பொது மக்கள் என இருபுறங்களிலும் தொடர்ந்த சீரான இயக்கம் இருக்கும். பொருட்களும் கிடைக்கும்… (READ MORE)

Uncategorized

கப சுரக் குடிநீர் – கொரோனாவிற்கு

…… குத்தாலிங்கம்: பரமன், ஆக்னஸிடமிருந்து கேள்வி வந்திருக்கிறது. பதில் வேண்டும். Agnes Batch 47: I have got one (Kaba Sura Kudi neer). Please guide how to make the medicinal drink.….. பரமன்: கப சுர குடிநீர் என்பது சித்த மருத்துவத்தில் தரப்படும் முக்கிய மருந்து (கஷாயம்). நில வேம்பு… (READ MORE)

Uncategorized

, , ,

‘ஐயப்பனும் கோஷியும்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

அயலூர் சினிமா:   ‘ஐயப்பனும் கோஷியும்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து   இரு மருங்கிலும் அடர் காடுகளைக் கொண்ட நெடிய மலைப்பாதையின் இரவு இருட்டை தன் முகப்பு விளக்கின் வெளிச்சம் கொண்டு ஓரளவிற்குக் கிழித்துக் கொண்டு விரைகிறது நல்ல வசதிகள் கொண்ட ஒரு கார். ‘குமரா, தூக்கம் வந்தா சொல்லு. நான்… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

TCM

இரண்டும் கைகோர்த்து இணைந்து செயல்பட வேண்டும் இப்போது – பரமன் பச்சைமுத்து

  பீஜிங்கிலிருந்து சாங் யாங்ஃபேய், வுஹானிலிருந்து வு யோங் (wuyong@chinadaily.com.cn) ஆகிய பத்திரிக்கையாளர்கள் எழுதி சீன தினசரியான ‘சைனா டெய்லி’யில் வெளியான ஒரு கட்டுரை நம் கவனத்தைக் கவருகிறது. ……. “   ….கொரோனா புயலின் மையப் பகுதியான வுஹானில் உள்ள லேய்ஷென்ஷான் மருத்துவமனையிலிருந்து கொரோனா நோய்த் தாக்குதலிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய 16 பேரில் 6… (READ MORE)

Politics, பொரி கடலை

, , , , ,

அடுத்தவரின் நிலையை புரிந்து ஒத்துழைத்து உயர வேண்டிய நேரமிது – பரமன் பச்சைமுத்து

சீனா கையூன்றி எழுந்து இப்போது இயங்கத்தொடங்கிவிட்ட வேளையில் கிட்டத்தட்ட மொத்த உலகமும் முடங்கிக் கிடக்கிறது. இந்திய நாடு மொத்தமாய் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது. மருத்துவர்களும், காவல்துறை மற்றும் அரசுப் பணியாளர்களும் வெளியில் தங்களைத் தந்து மற்றவர்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மூன்று வாரங்கள் வீட்டுக்குள் இருங்கள், வீட்டு வாசலில் லக்ஷ்மணன் ரேகை இருப்பதாகக் கருதி அதைத் தாண்டி… (READ MORE)

Politics, Self Help

மயிலாடுதுறை – மலர்ச்சி – பிஸினஸ் முதல்வன்

மலர்ச்சி வணக்கம். சுகாதாரத்துறையும் அரசும் எடுத்து வரும் கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து ஒரு பொறுப்புள்ள குடிமகனாக நடந்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளோரையும் காத்திட வேண்டிய தருணமிது என்பதால், *மயிலாடுதுறையில் மார்ச் 29 அன்று நடைபெற இருந்த ‘பிசினஸ் முதல்வன்’ மலர்ச்சி பயிலரங்க நிகழ்ச்சி, 95% பாஸ்கள் விற்று விட்ட போதிலும், தேதி குறிப்பிடப்படாமல்… (READ MORE)

Paraman's Program

, , , , , , , ,

இந்தியா இரண்டு நிமிட கைதட்டல் – 22 மார்ச்

ஐந்தாக மூன்று நிமிடம் இருக்கையிலேயே கைதட்டத் தொடங்கிவிட்டனர் இங்கு பக்கத்து குடியிருப்பில். கைதட்டுங்கடான்னா, மாட்டுப் பொங்கல் கொண்டாடற மாதிரி, தட்டு கரண்டி வச்சி தட்றானுவோ இங்க சிட்டியில! நம்ம பழக்கத்துல வாய் உடனே ‘பொங்கலோ பொங்கல்… மாட்டுப் பொங கள்!’ன்னு கத்துது! 😀👏👏

Uncategorized

பசிப்பதும் பசி போக்குவதும் நன்று

சூர்ய நமஸ்காரம் போன்ற வயிற்றைப் பிழிந்து நிமிர்த்தும் சில ஆசனங்களை இரண்டு சுற்று செய்து முடிக்கும் போதே வயிறு கபகபவென்று பசிக்கும். வெறும் வயிற்றில் ஒரே மூச்சில்ல்லாமல் நிதானமாக ஒரு சிறு செம்புத் தண்ணீரை உறிஞ்சும் பழக்கம் கொண்டவன் நான். ஹெல்த் பாஸ்கட் நிறுவனரும், மலர்ச்சி மாணவருமான திருமதி சுதா கதிரவன் ‘வெறும் வயிற்றில் இதைக்… (READ MORE)

பொரி கடலை

நல்ல படங்கள் சொல்லுங்களேன்.

கேள்வி: கொரோனோ வைரஸ் பிரச்சினையால் வீட்டில் அடைந்து கிடைக்கிறோம். நெட்ஃபிலிக்ஸ், அமேசான் ப்ரைமில் பார்க்க நல்ல படங்கள் சொல்லுங்களேன். இது வரை வளர்ச்சியில் வி-டாக்கீஸில் சொல்லப்பட்டப் படங்களை பார்த்துவிட்டோம். பரமன்: சமீபத்தில் நான் பார்த்த நல்ல படங்கள் சிலவற்றை சொல்கிறேன். (இந்தப் படங்களின் பட்டியலை இப்போது நான் தந்தாலும், இந்த இதழ் அச்சாகி வெளிவரும் போது மார்ச் 31 ஆகியிருக்கும்…. (READ MORE)

Uncategorized

என் குரங்காசனக் காரணம்…

வள்ளியம்மைப் பாட்டி நல்ல உயரமும் திடகாத்திரமான உடலமைப்பும் கொண்டவர். உழவு தவிர நெல் விதை விதைத்தல்,  நடவு, களை பறித்தல், அறுவடை, உளுந்து – பயிறு விதைத்தல், உளுத்தஞ்செடி பிடுங்குதல் என எல்லா வேலைகளிலும் ஆட்களோடு சேர்ந்து தானும் இறங்கிச் செய்பவர். அறுவடை முடிந்த கோடை கால வயல்களில் மாடுகளைக் கூட்டிப் போய் மேய விடுபவர்…. (READ MORE)

Manakkudi Manithargal, Spirituality, பொரி கடலை

, , , , , , , , ,

மருத்துவமனையில் புத்தகம்

காலையில் மருத்துவமனை வார்டின் உள்ளே நுழைகிறேன். நேற்று முன் தினம் அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடல் நலம் தேறி வரும் அம்மா மருத்துவமனை கவுன் அணிந்து பெட்டில் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருக்கிறார்.  நின்று கவனிக்கிறேன். சித்தி சொல்கிறார், ‘நேத்தி சித்தப்பா வச்சுட்டுப் போச்சி இல்ல, அந்த புக்!’ என்ன புத்தகம் என்று பார்க்கிறேன்…. (READ MORE)

Uncategorized

ரஜினி சொல்லியிருக்கலாம்

ரஜினி நிறைய சிந்தித்திருக்கிறார், வியூகம் செய்தார், கள ஆய்வு செய்தார் என்பதெல்லாம் சரி.  தனது திட்டங்களை, ஆசைகளை சொன்னதெல்லாம் நன்று. ஆனால், வரவில்லை என்றால் ‘வர மாட்டேன்!’ என்று தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும். நேரடியாக ‘இதான் மேட்டரு!’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்க வேண்டும். ‘மக்கள்கிட்ட எழுச்சி வரணும், இல்லன்னா இது சாத்தியம் இல்ல!’ என்பதெல்லாம் சரியில்லை…. (READ MORE)

Uncategorized

,

நாளை ஊடகங்களை அழைத்திருக்கிறார் ரஜினி.

இன்றைய தினமணி முதல் பக்கத்தில் முக்கிய அரைபக்கத்திற்கு ரஜினி பற்றிய செய்திக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது.  எம்ஜிஆருக்கு அன்று கட்சி தொடங்க ஏற்பட்ட தர்மசங்கடங்களையும் இன்று ரஜினிக்கு உள்ள தர்மசங்கடங்களையும் ஒப்பிட்டு விரிகிறது அந்தக் கட்டுரை. ஊடகங்கள் பரபரக்கின்றன. ரஜினி கட்சி தொடங்கினால் பாமாக, ஜி கே வாசன் ஆகியோர் அவர் பக்கம் இறங்குவர் என்பதற்காகவே, ஜிகே… (READ MORE)

Politics

, ,

wp-15836895900933147889544007306507.jpg

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஒரு நாயகன், அவனுக்கு ஒரு நண்பன், அவன் மனதை ஈர்க்கும் ஒரு நாயகி, அவளுக்கு ஓர் தோழி. ஆண்கள் இரண்டு பேருக்கும் இந்த வேலை, பெண்களுக்கு அந்த வேலை என்று தொடங்கும் ஒரு திரைப்படத்தில், பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவைப் பார்த்துப் பழகிய ரசிகர் ஒருவரால், அடுத்தடுத்து என்னென்ன நடக்கும் என்ன காட்சிகள் வருமென ஓரளவிற்கு… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , , , , , ,

திருமணம் என்னும் நிக்கா

‘பரமன் சார் உங்கள பள்ளிவாசல்ல பாத்ததில அவ்ளோ சந்தோஷம் எங்களுக்கு!’ ‘நீங்க ?’ ‘நான் அப்ளைடு சைக்காலஜி டீச்சர். உங்கள் வீடியோக்களை பாத்திருக்கேன்’… புரசை கார்டன் ஆயிஷா இல்லத்து ‘வலிமா நிக்கா’விற்காக அழைப்பின் பேரில் புரசைவாக்கம் பள்ளிவாசல் சென்றிருந்தேன்.  பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் உறவினர்களும் ஊர்ப்பெரியோர்களும் அங்கீகரிக்கும் மத குருமார்களும் மௌலானக்களும் நிரம்பி வழிந்த… (READ MORE)

Uncategorized

2வது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை

அமரர்கீழமணக்குடி மு. பச்சைமுத்து அவர்களின் நினைவாகமு. பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக மிருகசீரிடம் நட்சத்திரமான இன்று 03. 03. 2020ல், சென்னை வடபழனியில் சிவன் கோவில் 300 பேருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. இறைவனுக்கு நன்றி! பரமன் பச்சைமுத்து 05.03.2020

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , ,

wp-15830787348501990811816643332254.jpg

பெரிய பழுவேட்டரையர் சரத்குமாருடன்…

‘பொன்னியின் செல்வனுக்காக காத்திருக்கிறோம்! சுந்தர சோழனா உங்களை பாக்க!’ கைகளை பற்றிய படியே பதில் சொன்னார், ‘சுந்தர சோழரா பண்றது அமிதாப் பச்சன். நான் பெரிய பழுவேட்டரையர்!’ ‘ஓ… ஆகா, பெரிய பழுவேட்டரையரா?! இன்னும் சிறப்பான வீரமான பாத்திரமாச்சே. நந்தினியின் கணவர் வேறு!’ ‘ஆமா…ம், அதுக்காகத்தான் இவ்ளோ உடற்பயிற்சி!’ என் ஒரு கை அவரது வலக்கையைப்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , , ,

மலையாளக் கரையிலிருந்து பறம்புநில பாரியின் கதை

நிலம் கொள்ள பொன் கொள்ள புகழ் பெருக்க படை கொண்டு இயற்கையை அழித்தவர்கள் தமிழ் மூவேந்தர்கள் என்று சு.வெங்கடேசன் எழுதிய போது சோழக்காதலர்கள் அதிர்ந்து போயினர். ஆயினும் பறம்பின் பாரியை தோழமையின் கபிலரை குறிஞ்சி நில இயற்கையில் அவர் நனைத்துக் கொடுத்த விதம் நெஞ்சில் இறங்கி நின்றது (இன்னும் நிற்கிறது!). ராபர்ட் டௌனி ஜூனியரின் உருவத்தில்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , ,

பூமி சுழலவே செய்யும். நாள்கள் கழியவே செய்யும்.

உள்ளுணர்வு அலாரம் எழுப்ப துயிலெழுபவனுக்கு செல்லிடப்பேசியில் அடிக்கும் வெளி அலாரம் இரண்டாம் கட்ட ஏற்பாடே.  செல்லிடப்பேசி அலறியபோதும் கண் திறக்க இயலவில்லை இன்று. உடம்பு கொதிக்கிறது. ‘இன்னும் சில நிமிடங்கள் கொடேன்!’ என்று கண்களும் உடலும் கெஞ்சுகின்றன.  ‘ஐயப்பா ஸ்கூல்ல ப்ரோக்ராம் இருக்கு, கோட் அயர்ன் பண்ணனும். உடற்பயிற்சி, ஓஎம்ஆர் ட்ராஃபிக்…’ என அறிவு முணுமுணுத்தது…. (READ MORE)

Uncategorized

வியக்கிறேன்

‘அப்பா… அங்க பாரு, ஃப்ளைட் நிக்குது!’ விமான நிலைய வாயிலிலிருந்து ஓடுதளத்திற்கு பேருந்தில் வரும் போது, கண்ணாடியின் வழியே தூரத்தில் நிற்கும் விமானமொன்றைப் பார்த்து பரவசப்பட்டு கூச்சலிடுகிறான் சிறுவன். மொத்த பேருந்தும் புன்னகைக்கிறது. ‘அப்பா… அங்க பாரு கபாலி ஃப்ளைட்!’ ஸ்பைஸ்ஜெட் விமானமொன்றைப் பார்த்துக் கூவுகிறான். ‘அப்பா, நம்ம போற ட்ரூஜெட் எப்பப்பா வரும்?’ பேருந்து… (READ MORE)

Uncategorized

கங்கை கொண்ட சோழபுரம்

வணக்கம் பாலா. உண்மையாகவும் இருக்கலாம், பின்னே வந்தவர் தன் பார்வையில் பட்டதை ‘இதுதான் நிஜம்!’ என்று பரப்பியுமிருக்கலாம். பெருவுடையார் கோவில் ராஜராஜனின் ஆட்சியின் 25ஆம் ஆண்டின் 275ஆம் நாளில் கட்டி முடிக்கப்பட்டது. ராஜேந்திரனுக்கு அப்போது இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. சோழப்படை தலைவனாகவே ராஜேந்திரன் இருந்தான். இருவரும் ஒன்றாக 25 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். கி.பி. 1014ல்… (READ MORE)

Uncategorized

wp-15815138552624968990881890515864.jpg

ஏவிசிசி பாலிடெக்னிக் – 91 பேட்ச் – அப்டேட்:

மலர்ச்சி மாணவரும் புதுச்சேரியின் பிரபல தொழில்முனைவோருமான முத்துக்குமரனின் ‘சிவா பிரிண்ட்ஸ்’ புதிய அலுவலகத்தைத் திறந்து வைப்பதற்காக பயணித்துக் கொண்டிருந்த போதே, நப்பின்னையிடமிருந்து அழைப்பு, அவரும் ஜெகதீஸ்வரியும் விழாவிற்கு வருவதாக. ‘யாரோ ஒருவரின் அலுவலகத்திறப்பு விழா!’ ‘நான் அழைக்கப்படவில்லை, எதற்குப் போக வேண்டும்?’ என்ற திசையில் சிந்திக்காமல், ‘என் க்ளாஸ்மேட்டப் பாக்கப் போறேன்!’ என்ற ஒரே முடிவில்… (READ MORE)

AVCCP

ஆ….!

‘வயின்ஷாங் ஹா!’ ‘தம்பீ, என்னாட சொல்றே!’ ‘அம்மா… இந்த ஊர் பாஷையில மாலை வணக்கம்ன்னு அர்த்தம்மா. ஃபோன எடுத்தாலே ‘வயின்ஷாங் ஹா, வைன்ஷாங் ஹா’ன்னு சொல்லி சொல்லி பழகி, உன்கிட்டயும் அப்படியே பேச்சுல வந்துருச்சிம்மா!’ ‘பொண்ணு பாத்திட்டுருக்கோம் தம்பீ. கும்பகோணம் போற வழியில நாச்சியார் கோயிலுக்கு முன்னால உள்ள போனா இருக்காம் ஒரு ஊரு. அங்கேருந்து… (READ MORE)

ஆ...!

, ,

பெரு நகர காவல் துறைக்கு மலர்ச்சி வணக்கம்!

நகரின் உள்ளே நுழையும் வாகனங்களின் பதிவு எண்ணைப் படமெடுக்குமளவிற்கும்,விதி மீறல் வாகனங்களைக் கண்டறியும் வகையிலும் துல்லியமாகப் படமெடுக்கும் நவீன கேமராக்களை நந்தனம் சிக்னல் போன்ற இடங்களில் நிறுவி கலக்குகிறது பெருநகர காவல் துறை. விதிகளை மீறும் வாகனங்களை தானாகவே படமெடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் வசதிகள் கொண்டவையாம் இந்த கேமராக்கள்.  சபாஷ்! இது போன்ற மிகத்… (READ MORE)

பொரி கடலை

, , ,

wp-15811451877651185453074450219831.jpg

இளநீர்… இளநீர்!

இலங்கையின் கொழும்பு நகரில் கிடைக்கும் இளநீர், சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கிடைக்கும் மலேசியா இளநீர், தானே புயலுக்கு முன் கிடைத்த புதுச்சேரி இளநீர்,  தமிழகத்தின் பிற ஊர்களுக்கு அனுப்பப்பட்டு சில தினங்கள் கழித்துப் பருகப்படும் பொள்ளாச்சி இளநீர்,  பறித்த அன்றே குடிக்கும் போது ‘சுருக்’ என்று இருக்கும் பொள்ளாச்சி இளநீர் என ஒவ்வொரு இளநீரும் ஒவ்வொரு… (READ MORE)

பொரி கடலை

, , ,

கஃபே உடுப்பி ருச்சி

ஓர் உணவகத்தின் உள்ளே நிகழும் சிறு சிறு வெளிப்பாடுகளே போதுமானதாக இருக்கிறது, நம்மை கண்டு கொள்ள. இடப்பறம்: ‘மாவு இப்பத்தான் அரைக்கறாங்களா?’ சீருடையணிந்த பணியாளர் வருவதைக் கண்டு அவரிடம், ‘பூரி சுட்டுக் குடுக்கனும். நேரம் ஆவும் சரி. இட்லிக்கு என்னா? ஒரு இட்லி ஏன் இவ்ளோ நேரம்! இத்தனைப் பேர் வேலை பாக்கறீங்க, ஒரு இட்லிக்கு… (READ MORE)

Uncategorized

மு. பச்சைமுத்து அறக்கட்டளை – முதல் அன்னதானம்

அமரர் கீழமணக்குடி மு. பச்சைமுத்து  அவர்களின் நினைவாகமு. பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக மிருகசீரிடம் நட்சத்திரமான 05.02.2020 அன்று,  சென்னை வடபழனியில் சிவன் கோவில் தெருவில் 300 பேருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. இறைவனுக்கு நன்றி! முதல் அன்னதானம் 05.02.2020

மு பச்சைமுத்து அறக்கட்டளை

காலத்திற்கேற்ப…

பெரியாரின் கொள்கையிலிருந்து பிரிந்து அரசியல் இயக்கமாக உருவான அன்றிலிருந்து திமுகவின் வரலாற்றிலேயே இது நடந்ததில்லை என்கிறார்கள். இறைமறுப்பு, பகுத்தறிவு என்பதே கொள்கையாகக் கொண்டதால் இதுவரை நடந்த 9 மாநாடுகளிலும் கொடியேற்றித் தொடங்குவதே தொடக்கமாக இருந்தது. இப்போது திருச்சியில் நடந்த 10வது மாநாடு இதுவரை எப்போதும் இல்லாத முறையில் குத்து விளக்கு ஏற்றப்பட்டு மங்கள இசை ஒலிக்கப்பட்டு… (READ MORE)

Uncategorized

wp-15801816657922380032534699239519.jpg

காகங்களின் மொழி

‘கா… கா…. கா…. கா….’ ‘அத்தை ஏன் இப்படி கத்துது அது? சாப்பாடு வச்சாச்சா?’ ‘தோ வைக்கறேன்!’ – அத்தை ‘கா… க்க்கா…’ ‘யேய்… சாதம் வச்சாச்சில்ல, நீ சாப்டேன். எல்லாரையும் கத்திக் கூப்பிடறியா!’ ‘ஏங்க நான் கிளம்பறேன்!’ மனைவி ‘க்கா… க்ரகா…கா’ ‘சோறு வைக்கலன்னு கத்தனே. இப்பதான் சோறு வச்சாச்சே, நீ சாப்டேன். ஏன்… (READ MORE)

Uncategorized

கை கொடுக்க வேண்டும் நாம்…

‘பரமன்… என் காலேஜ்மேட் எல்ஸா லீனா பத்து மாடி கட்டடத்திலிருந்து குதிச்சி தற்கொலை பண்ணிகிட்டாளாம். இப்பதான் நியூஸ்ல பாத்தேன். ஃபீலிங் பேட். டிப்ரஷன்ல இருந்தா, ட்ரீட்மெண்ட்ல இருந்தா, கணவனோட இல்ல, ஒரு குழந்தை வேற இருக்கு!  மலர்ச்சி அவளுக்குக் கெடைச்சிருந்தா, வாழ்க்கையே வேறய இருந்திருக்கும், எழுந்து நின்னு நிறைய செஞ்சிருப்பா!’ மலரவள் ஒருவரிடமிருந்து சற்று முன்… (READ MORE)

Uncategorized

மலர்ச்சி தினம் 2020

திருவண்ணாமலை, புதுச்சேரி, வேலூர், சேலம், பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை என பல இடங்களிலிருந்தும் வந்து குவிந்திருந்த மலரவர்களின் உண்மையான கொண்டாட்டங்களால் ‘மலர்ச்சி தினம் 2020’ மிகச் சிறப்பாக நடந்தேறியது ( 22.01.2020) ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே ஜனவரி 22ல் மலர்ச்சியைத் தொடங்கி வைத்த தந்தையை நினைத்து கொஞ்சம் நான் தடுமாற, நான் தடுமாறுவதை உணர்ந்து… (READ MORE)

Uncategorized

பாராயணத் திரட்டு – மு. பச்சைமுத்து அறக்கட்டளை

மு. பச்சைமுத்து அறக்கட்டளையின் அடுத்த செயல் வடிவம்: வில்லுப்பாட்டு, கதாகாலட்சபம், பக்தி இலக்கிய பேருரை, வழக்காடு மன்றம், கதைப்பாட்டு என்று பல வகைகளில் அப்பா சைவ மணம் பரப்பி பணி செய்திருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் அவர் தொடர்ந்து பயணித்தது செய்தது ‘தமிழ் முறைப்படி இறைவனை தொழும் பணி’யே. வீடு குடிபுகுதல், கோவில் குடமுழுக்கு, மணி விழா,… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

பெரும் நன்றி…

கலகலவென்று கதைத்துக் கொண்டு கஞ்சியின் கடைசி மிடறு குடித்தவர் அப்படியே உறைந்து சுய நினைவு இழந்தார் என்ற செய்தி கேட்டு ஊருக்குப் புறப்பட்டேன்.  புதுச்சேரியில் மருத்துவமனையில் வைத்து சில மணி நேரங்கள் போராடினோம். தந்தையின் அருகில் நின்று கதறுவதைத் தவிர இறைவனை வேண்டுவதைத் தவிர வேறெதுவும் இயலவில்லை அத்தருணங்களில்.  உடல் விட்டு உயிர் பிரிந்த அவ்வேளையில்… (READ MORE)

Uncategorized

அமாவாசை என்பது

‘அமாவாசை’ என்பது ஒரு வார்த்தை, மாதாமாதம் வரும் ஒரு நாள், நிலவு இல்லாத நாள்… தந்தையை இழக்கும் வரை நீத்தாரை நினைக்கிறேன். பரமன் பச்சைமுத்து சென்னை 24.01.2020 –

Uncategorized

wp-1579605832923815546854747414146.jpg

‘சித்திரம் பேசுகிறேன்…’ – பரமன் பச்சைமுத்து : மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ் புதிய நூல்

முன்னுரை ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா…’ இந்தச் சொற்றொடரைக் கேட்காமல் வளர்ந்த குழந்தைகளே இருக்காது போன தலைமுறை வரையில். தாத்தாக்களும் பாட்டிகளும் மாமாக்களும் அத்தைகளும் என கதைசொல்லிகளாலேயே கதைகள் சொல்லப்பட்டே கதைகளாலேயே வளர்க்கப்பட்டது நம் சமூகம். கதைகளாலே மனவளப்படுத்தப்பட்டு நெறிப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது நம் சமூகம். ‘ஒரு பாட்டி வடை சுட்டாங்க, ஒரு காக்கா பாத்துச்சாம்’, ‘ஒரு… (READ MORE)

Paraman's Book

, , , , , , , , , , , , , , , , , ,

wp-15793510869645133351545504007296.jpg

வீட்டுக்கு வந்த சாரைப் பாம்புக் குட்டி

பாம்புகள் என்றதும் என்ன தோணும் உங்களுக்கு? ‘வீட்டுக்குள்ள வந்துது, அடிச்சித் தூக்கிட்டோம்!’  நீண்ட கழியொன்றின் நுனியில் ஒரு பாம்புக் குட்டியை மாட்டித் தூக்கிக் கொண்டு வந்தார் எதிர் வீட்டு முருகதாஸ்.  ‘என்ன பாம்பு இது?’ ‘சாரை, குட்டி!’ தெருவில் தரையில் கிடத்தப்பட்டது பாம்பு. ‘செத்துப் போச்சி, தூக்கிப் போட வேண்டியதுதான்!’ ‘ஆமாம், செத்திடுச்சி!’ ‘திடீர்னு இப்படி… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , , , ,

wp-15789334671788644114339697143521.jpg

‘உறுதியோடு உயர்வோம்’ : பரமன் பச்சைமுத்து : ஜீரோ டிகிரி பப்ளிஷிங்

My 11th book ‘Uruthiyodu Uyarvom’ from Zero Degree Publishing ‘உறுதியோடு உயர்வோம்’ – பரமன் பச்சைமுத்து : ஜீரோ டிகிரி பப்ளிஷிங் #UruthiyoduUyarvom #ZeroDegree #ZeroDegreePublishing #AuthorParaman #ParamanPachaimuthu #Malarchi #Inspring #SelfHelp #SelfHelpBook #Growth #Motivational #MotivationalBook

Paraman's Book

, , , , , , , , ,

திருவண்ணாமலை மலர்ச்சி மாணவர்களுக்கு…

திருவண்ணாமலை மலர்ச்சி மாணவர்களுக்கு, மன்னிக்கவும். இன்று மாலை உங்களுக்கு வளர்ச்சிப்பாதை வகுப்பு எடுத்திருக்க வேண்டும். சிவாகமப்படி மரபு செய்யும் வழக்கம் கொண்ட குடும்பத்தில் சிவலோக பதவி அடைந்தவரை நல்லடக்கம் செய்து விட்டு அடுத்த நாள் சமாதி பூசை செய்து விட்டால், அடுத்த வேலைகளில் ஈடுபடலாம். தீட்டு என்பதெல்லாம் இல்லை. என் பாட்டி இறந்து சிவாகம முறைப்படி… (READ MORE)

Uncategorized

20170507_184158.jpg

தந்தையை இழந்த தனயனாக

வந்தால் செல்வர் என்பது வாழ்வின் பெரும் விதி, நிலையாமை விதியே வாழ்வின் நிலைத்த விதி என்பதையெல்லாம் அறிவு ஏற்றுக் கொள்கிறது. வீட்டின் ஒவ்வொரு இடமும், தோட்டத்தின் ஒவ்வொரு செடியும் மரமும் தந்தையை நினைவு படுத்துகின்றன, கையறு நிலையில் கண்ணீர் பெருக்கவே செய்கிறது. சென்னை – புதுவை – திருவண்ணாமலை – வேலூர் – மயிலாடுதுறை –… (READ MORE)

Uncategorized

, , , ,

IMG_20200105_215119_469.jpg

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை விழாவில்…

ஒரு நாள் அல்ல, ஒவ்வொரு முறையும் வாழ்வின் வேறுவேறு அத்தியாயங்களில் என்னை நெகிழ வைக்கிறார் நடிகர் சூர்யா. அகரம் அறக்கட்டளையோடு கொஞ்சோண்டு தொடர்பு ( மாணவர்களுக்கு சில பயிற்சி வகுப்புகள் எடுத்துள்ளேன்) உள்ளவன் என்பதால் ஓரளவு தெரியும், தனது சினிமா சங்கதிகளை கொஞ்சம் கூட உள்ளே கொண்டுவராமல் அறக்கட்டளையின் நிறுவனராகவே இருப்பார், நடப்பார் என்று. இன்று… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

wp-15776884945251779575029260195958.jpg

ஏவிசிசிபி அலுமினி மீட் – நிறைவுப் பகுதி

*AVCC Polytechnic 91 Batch Alumni Meet’* (முந்தைய பதிவுகளின் தொடர்ச்சி ) *நிறைவுப் பகுதி:* கொஞ்சம் எடை கூடியதைத் தவிர உருவத்தில் வேறு மாற்றம் இல்லாத மீன்சுருட்டி *அமிர்தலிங்கம்*, அளவாக அழகாக பகிர்ந்தார். பெரும் கட்டுமான நிறுவனமான ‘மார்க்’கில் உயர்மட்ட நிர்வாகியாக இருக்கும் அமிர்தலிங்கம் பொறியியல் படிக்கும் மகள், ப்ளஸ் டூ படிக்கும் மகன்… (READ MORE)

AVCCP

, , , ,

wp-15776884948816429448680821513489.jpg

ஏவிசிசிபி அலுமினி மீட் – குறிப்பு 3

AVCC Polytechnic 91 Batch Alumni Meet’ (முந்தைய பதிவுகளின் தொடர்ச்சி ) குறிப்பு – 3: டிஎஸ்ஏ தொடங்கி நகரில் பல பேருக்கு கடன் தந்து அதிலிருந்து மாறி கட்டுமான நிறுவனம் நடத்தும் தன் கதையை சந்திரமௌலி நறுக்கென்று கூறியது சிறப்பு. கல்லூரி வகுப்புகளில் எப்பவும் எழுந்து கேள்வி கேட்கும் மௌலி கண்ணில் வந்து… (READ MORE)

AVCCP

, , , ,

wp-15776884944681882161469791835393.jpg

ஏவிசிசிபி அலுமினி மீட் – குறிப்பு 2

AVCC Polytechnic 91 Batch Alumni Meet’ குறிப்பு – 2: பத்தாம் வகுப்பே படித்த பெண்கள் பத்தாம் வகுப்பு முடித்த பல – பன்னிரண்டாம் வகுப்பு முடித்த சில ஆண்கள் என்றளவிலேயே பக்குவம் கொண்ட சிறு பிள்ளைகளாக இருந்த நாங்கள், ‘இருபத்தியெட்டு ஆண்டுகள் கழித்து முதல் முறையாக சந்திக்கிறோம்!’ என்ற நிலையில் இந்த எண்ணமே… (READ MORE)

AVCCP

, , , ,

wp-15776884944169090575625827339882.jpg

ஏவிசிசிபி அலுமினி் மீட் – பகுதி 1

‘AVCC Polytechnic 91 Batch Alumni Meet’ ஏதோ ஓர் இடத்தில் புள்ளி வைத்து இதைத் தொடங்கி வைத்த ஜி கே வனிதாவிற்கும், முரளிப்பிரகாஷுக்கும் எங்களது நன்றிகள்! திருவாரூரிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும், சென்னையிலிருந்தும் என பல மைல்கள் பயணித்து வந்த தோழிகளுக்கும், அவர்களை கொண்டு வந்து விட்ட அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும் நன்றிகள். நாளை அதிகாலை பெங்களூருக்குவுக்கு… (READ MORE)

AVCCP, Uncategorized

, , , ,

முதியவரும் பதின்மரும்

‘ஃபேனைப் போட்டுகிட்டு தலையை சீவாங்கதிங்கன்னு சொன்னா கேக்கறதில்ல. வீடு முழுக்க முடி. சொன்னா அதுக்கு ஒரு வியாக்யானம் பேசுவாளுங்க. எல்லாம் பெரிய மேதாவிங்க!’ 😀 பதின்ம வயதுப் பெண்களும் முதிய பெண்மணியும் வீட்டிலிருந்தால், வீடு நிறைந்து விடுகிறது. நிறைய புன்னகைக்க சிரித்து மகிழ முடிகிறது. வாழ்க்கை உன்னதமானது 😀 – பரமன் பச்சைமுத்து சென்னை 17.12…. (READ MORE)

Uncategorized

எனது பதினோறாவது நூல்

கொண்டாடும் தருணமிது எனக்கு! நான் ஓர் எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ளுமளவிற்கு இன்னும் வரவில்லை, ஆனால் அதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறேன், இறையருளால். இந்தப் பயணத்தில் ஒரு மைல் கல் இது என எண்ணுகிறேன். இன்று, என் பதினோராவது நூலை முழுதாக முடித்து அவர்களது வடிவில் அச்சேற்ற பதிப்பகத்தாரிடம் தந்துவிட்டேன். என்னைப் பொறுத்தவரை பெரு மகிழ்ச்சியூட்டும்… (READ MORE)

Uncategorized

இன்று நடந்த வளர்ச்சிப்பாதை பலரது பல நாளைய கேள்விகளுக்கு விடை பகன்றது,

கடைசி வரிசையில் இருந்த அருண் சுப்பு ரங்கன், பாலகிருஷ்ணன், ஹரிஹரன், தேவநாதன் எல்லாம் வெகு தூரத்தில் இருப்பது போல ‘அரங்கு நிறைந்த’ வளர்ச்சிப் பாதை இன்று மாலை, புதுச்சேரியில். சிதம்பரத்திலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும், விழுப்புரத்திலிருந்தும், சென்னையிலிருந்தும் மலரவர்கள் கூடியிருந்தனர். வள்ளி விலாஸ் ரமேஷ், சதீஷ் (விநாயக முருகன் பேக்கரி), வெங்கட லட்சுமி, சூர்யா என்டர்ப்ரைஸ்ஸ் ரமேஷ், நித்யரமா… (READ MORE)

Uncategorized

தானாய் நடைபெறும் சுவாசம்

உடலை உற்றுக் கவனிப்பதில் ஒன்று புரிகிறது. நம்மால் உணரமுடியா அதிசயங்கள் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்தேறுகின்றன. நாசியின் வழியே உள் நுழைந்து உடலியக்கத்திற்கு உறுதுணையாய் நிற்கும் காற்று ஓர் அதிசயம். அதைக் கொண்டு உடல் செயல்படும் விதம் ஓர் அதிசயம். மூச்சுப் பயிற்சியில் காற்றை இழுத்தல் – நிரப்பி நிறுத்தல் – வெளியேற்றுதல் தாண்டி – வெற்றிடத்தை… (READ MORE)

Uncategorized

சென்னை சிறந்த நிலையில்

மழை, மழைக்குப் பின்பான மஞ்சள் வெய்யில், ஏரி குளங்களில் நீர், பச்சைப் பசேலென்று கிளர்ந்து நிற்கும் மரங்கள், மகிழ்ச்சியாய் வட்டமிடும் பறவைகள், கட்டுக்குள் வளி மாசு, மின் விசிறி கூடத் தேவையில்லா தட்பவெப்பம் என சிறந்த கார்த்திகை சென்னையில்! வாழ்க! 09.12.2019

Uncategorized

இந்தூரில் தொடங்கிய அதிசயம் இந்தியாவெங்கும் நிகழட்டும்!

அதிசயங்கள் பல நேரங்களில் சாமானியர்களால் நிகழ்த்தப் படுகின்றன. ஒரு மாவட்ட ஆட்சியரும் அவரது அத்தனை ஊழியர்களும், நகரின் மாநகராட்சி ஆனையரும் அவரது அனைத்துப் பணியாளர்களும் வாரத்தில் ஒரு நாள் தங்களது வாகனங்களைப் பயன்படுத்தாமல் அரசுப் பேருந்தில் மட்டுமே பயணிப்போம் என்று முடிவெடுத்து செயல்படுத்தினால் எப்படியிருக்கும்! மக்களும் இணைவார்கள்தானே! மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் வாரத்தில் வெள்ளிக்கிழமைதோரும்… (READ MORE)

Uncategorized

, ,

அந்தக் கையை தொட்டுப் பாக்கணும், இப்படிக் கொடுங்களேன்

நாம் அசந்து போய் நிமர்ந்து பார்க்கும் ஆளுமைகளை சட்டென்று அருகில் நிறுத்தி வியப்பிலாழ்த்தி விடுகிறது வாழ்க்கை. சுஜாதா, வண்ணதாசன், நாஞ்சில் நாடன், வாலி, வைரமுத்து, எஸ் ராமகிருஷ்ணன், சிட்னி ஷெல்டன் (ரா கி ரங்கராஜன் வழியே) என பலரை எனக்கு முதல் அறிமுகம் செய்து வைத்ததற்காக குமுதத்திற்கும் விகடனுக்கும் நான் பெரும் நன்றிக் கடன்பட்டவன். அப்படி… (READ MORE)

Uncategorized

சென்னை மழை மனிதர்கள்

சென்னையில் பெய்யும் கனமழையால் அரும்பாக்கத்தின் பாஞ்சாலி அம்மன் கோவில் பின்புறமுள்ள தாழ்வான பகுதியில் தெருக்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வெளியேறவே முடியாத மக்களை மனதில் கொண்டு இன்று அதிகாலையில் வீடுவீடாகச் சென்று பால் பாக்கெட், சேமியா / ரவை பாக்கெட்டுகள் / காய்கறி அத்தியாவசிய பொருட்களை வழங்கிய பெயர் தெரியாத அந்தத் தன்னார்வத் தொண்டர்களுக்கு… மலர்ச்சி வணக்கம்…. (READ MORE)

Uncategorized

சிங்கத்தின் கோட்டையில்..

கடல் மட்டத்திலிருந்து 4320 அடி உயரத்தில் இருக்கும் இந்த மலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் வந்து ஏறுவதற்குக் காரணம், முக்கிய நிகழ்வுகள் திருப்புமுனைகள் நடந்த வரலாற்றுச் சின்னமிது என்பதால் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மலையேற்றத்தைப் போலல்லாமல் எவ்வளவு ஏறினாலும் உடல் நடுங்கினாலும் மூச்சிறைத்தாலும் வியர்க்கவே வியர்க்காத வெப்ப நிலை, இந்த உயர்ந்த மலையைச் சுற்றி எல்லா… (READ MORE)

Uncategorized

யோகாவைத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்

‘யோகப் பயிற்சியை தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!’ என்று நான் அடிக்கடி சொல்வதற்குக் காரணம் அது மதமோ கடவுளோ தந்தது எனும் பொருள் கொண்டு அல்ல, அது கொடுக்கும் உணர்வையும் ஏற்படுத்தும் மாற்றத்தையும் கண்டு அசந்து சொல்வது அது. நாள் தவறாது தினம் யோகப்பயிற்சி செய்யும் தந்தையைப் பார்த்தே வளர்ந்தவனாகையால், அதன் பால் கொண்ட ஈர்ப்பு… (READ MORE)

Uncategorized

images.jpeg

ஷாருக்கான் நேர்காணல் நன்று

‘நான் டெல்லிப் பையன். என் அம்மாவிற்கு மூன்று பெண்கள் அப்புறம் நான். இவர்களுக்கு யாருமில்லையேயென்று என்னை அம்மா தத்துக்கொடுத்து விட்டார்கள். நான் பெங்களூருக்கு அனுப்பப்பட்டேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாவிற்கு ஏக்கம் வர நான் திரும்பவும் அழைக்கப்பட்டேன்’ ‘வரிசையாப் படங்கள் எல்லாம் ஊத்திகிச்சி. அதான் ரொம்ப நாளாவே படமே பண்ணாம சும்மா இருக்காரு!’ என்று உலகம்… (READ MORE)

பொரி கடலை

, ,

சன்னல்கொத்தி

இரண்டு நாட்களுக்கு முன்பு என் பால்கனிக்கு வெளியே மாமரக்கிளையை கொத்திய மரங்கொத்தி, இன்று காலை என் அடுக்கக் குடியிருப்பின் மூன்றாம் தளத்து வீடொன்றின் சன்னலைக் கொத்தியது. ‘அப்பா… அப்பா, அங்க பாரு!’ என்று என் மகள் அன்று காட்டிய போது மாட்டாத அந்த மஞ்சள் அழகி, இன்று காலை ஓட்டப்பயிற்சி முடித்துவிட்டு வந்து பாதாம் மரத்தடியில்… (READ MORE)

Uncategorized

பாலாறு

தமிழகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கிலோ மீட்டர் அளவு அகலம் கொண்ட ஓர் ஆற்றைக் கடக்கிறோமென்றால், அதிக பட்ச வாய்ப்பு அது பாலாறாக இருக்கலாம். சென்னைக்கும் – இடைக்கழிநாடு, காத்தான்கடை மரக்காணம் பகுதிக்கும் இடையே எப்போதும் மணல்வெளியாகவே காட்சி தரும் பாலாற்றில் இன்று நீர் இருப்பதைக் கண்டு இறங்கி விட்டேன். ஆந்திரத்திலிருந்து வந்து ஓடும்… (READ MORE)

Uncategorized

போட்றா டிக்கெட்ட…

இவ்வளவு ஆண்டுகள் எல்லாம் பார்த்த பிறகும் செய்த பிறகும், சாலையோரத்தில் பஸ் நிறுத்தத்தின் அருகில் பதற்றத்தோடு நிற்கும் ஆட்களோடு வரிசையில் நின்று நகர்ந்து நகர்ந்து இண்டர்வ்யூக்குப் போனால் எப்படியிருக்கும்? ….. அமெரிக்க விசாவிற்காக, சென்னை அண்ணா மேம்பாலத்தின் அருகில் கிட்டத்தட்ட சஃபையர் தியேட்டர் பஸ் நிறுத்தத்தையும் தாண்டிய நீண்ட வரிசையில் வெய்யில் பனி மழை பாராமல்… (READ MORE)

Uncategorized

images-58562385580449821885..jpg

‘பிகில்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

தந்தையின் கனவை தன் வழியே நிறைவேற்ற முடியாமல் சூழலால் தவற விட்ட தனயன் அதே கனவை போராடி தனது மக்களின் வழியே நிறைவேற்றினால், போடுறா ‘பிகில்’! தோல்வி நிலையில் அடி மட்டத்தில் கிடக்கும் ஒரு விளையாட்டு அணியை வழி நடத்த ஒருவர் வருகிறார், நல்லது செய்ய வரும் அவருக்கு கீழே அணியிலும் எதிர்ப்பு மேலே கமிட்டியிலும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

67393670338997342621667302.jpg

‘வீடுகளெல்லாம் வீடுகளல்ல…’ அல்லது ‘வீடெனப்படுவது யாதெனின்…’ – ‘கும்பளாங்கி நைட்ஸ்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

‘அயலூர் சினிமா’: திறந்த வானத்தின் அடியில் பரந்த ஏரி அதன் மூலையில் தரை வழிப்பாதையே இல்லாத சுற்றிலும் நீர்சூழ் வீடு. அந்த வீட்டிலிருந்து வெளியே பால் வாங்கப் போக வேண்டுமென்றாலும் பள்ளிக்குப் போக வேண்டுமென்றாலும் அல்லது அந்த வீட்டிற்கு எவர் போவதென்றாலும் படகில் பயணித்தே போக வேண்டும். பால் பொழியும் நிலவும், பகல் மஞ்சள் வெய்யிலும்,… (READ MORE)

Manakkudi Talkies

, ,

மகளிர் கால்பந்து படம்

மகளிர் ஹாக்கியை மையமாக வைத்து பின்னப்பட்ட ஒரு கதையில் பயிற்சியாளராக ஷாருக்கான் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சக்தே’. அதே கதையை மகளிர் ஹாக்கிக்குப் பதில் மகளிர் கால்பந்தாக மாற்றி, பயிற்சியாளராக வருபவருக்கு சில ஆக்‌ஷன் மசாலா சங்கதிகள் சேர்த்து அரைத்து, கூடவே சில கிளை கதையொன்றையையும் பின்னி வைத்தால்… அது ‘பிகில்’ ஆக… (READ MORE)

Uncategorized

தண்ணீர் தேங்கி நின்றால்

தண்ணீர் தேங்கி நிற்கிறதென்றும் சூழலை ஒழுங்காக வைத்திருக்கவில்லையென்பதாலும் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப் பட்டிருக்கிறது ஒரு பள்ளிக்கு. ‘தண்ணீர் தேங்கியுள்ளது’ என்று சென்ற ஆண்டு இப்படி டெங்கு அபராதங்கள் விதித்த சில நாட்களில் மழை வந்து ஊரே தண்ணீர்க்காடாகி கிடந்தது, ‘உங்களுக்கு யாரு இப்ப அபராதம் போடறது?’ என்று மக்கள் நினைக்கும் படியானது. அபராதம்… (READ MORE)

Uncategorized

ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் தி.நகர்

நான் ஓர் ஆசிரியன், வாழ்வியல் பயிற்சியாளன். வளர்ச்சியைக் கண்டுபிடித்து நல்லதைக் கண்டுபிடித்து அடுத்தவர்க்கு விருது வழங்கி மகிழ்வித்து மகிழ்பவன். விருது வழங்கப்படும் எத்தனையோ விழாக்களில் விருதாளர்களையும் அங்கம் வகிப்போரையும் ஊக்கப்படுத்தி வாழ்க்கையை நோக்கி நகர வைக்க உரை நிகழ்த்துபவன். கலந்து கொள்ளும் இடங்களில் உரையாற்றி முடிந்ததும் அவர்கள் பெயரும் எனது பெயரும் பொறித்த ‘ஷீல்டு’ நினைவுப்… (READ MORE)

Uncategorized

இழந்ததை நினைத்து அல்ல, கிடைத்ததை நினைத்து…

08.20க்கு என் விமானம், 07.20க்கு நான் விமான நிலையத்தில் இருக்க வேண்டும். எனக்கு முந்தைய பேச்ணாளர்களால் நிகழ்ச்சி தாமதமாகி நான் என் மலர்ச்சி உரையை முடிப்பதும் குறித்த நேரம் தாண்டிப் போனது. நிகழ்ச்சி முடித்து என்னைக் காரிலேற்ற லீ மெரீடியனிலேயே 07.05 ஆகிவிட்டதால் அடித்துப் பிடித்து ஓட்டி வந்தார் டிரைவர். ஓடி வந்து போர்டிங் பாஸ்… (READ MORE)

Uncategorized

ஊருக்கே ஆரூடம் சொல்பவருக்கு, உலக நிதர்சனம் சொல்ல வேண்டியிருந்தது

‘இருவது நிமிஷத்துல நாலு பேருட்ட நாலு வாட்டி சொல்லிட்டேன். அதுக்கப்புறந்தான் தண்ணி தர்றீங்க. வந்து உக்காந்த உடனே தண்ணி வைக்கனும். அதுதான் சர்வீஸு. சாப்பாடு நல்லாருக்கு. காப்பி அருமை. ஆனா, தண்ணி தர மாட்றீங்க. முதல்ல ஒரு க்ளாஸ் தண்ணி தரனும்! முதல்ல தண்டி தம்ளர்ல…’ ஒரு வரியில் வெளிப்படுத்த வேண்டிய இந்த சங்கதியை ஒன்பதே… (READ MORE)

Uncategorized

தமிழ் தமிழகப் பற்று!

சீன அதிபர் ஜீ ஜின் பிங்கின் இந்திய வருகையை சென்னையையொட்டிய மாமல்லபுரத்தில் நடத்துவதன் மூலம் ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்க முயல்கிறார் பிரதமர் மோடி. வழக்கமாக தில்லியில் நடைபெறும் இத்தகைய சந்திப்புகள் தெற்கே தமிழகத்தில் நிகழ்த்தப்படுவதற்கு இரு காரணங்கள். ஒன்று – சீன அதிபர் தில்லியில் இறங்கியதும் அவர் இந்தியாவில் இருக்கும் நாட்களில் தலாய்… (READ MORE)

Uncategorized

எப்போதும் vs எப்போதாவது

திருவண்ணாமலைக்கு பயணித்த வழியில் தேநீருக்கு இறங்கிய திண்டிவனம் நெடுஞ்சாலைத் தேநீர் கடையில் எவரோ ஒருவர் அடுத்தவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ‘ஏ… ஒரு மாசம்… ஒரு மாசம் ஃபுல்லா எதுவும் தொட மாட்டோம் பாத்துக்க. பொரட்டாசி மாதம்! முழு சுத்தமா இருப்பமே நாங்க!’ ‘நாங்க கூடத்தான், சபரிமலைக்கு மாலை போடும் போது!’ …. ‘எப்பவுமே எல்லா மாசமுமே… (READ MORE)

Uncategorized

images-24355356548042766525..jpg

‘அசுரன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

கொண்ட குடும்பத்திற்காகத் தன்னைத் தந்து அடங்கி ஒடுங்கி வாழும் நெல்லைச் சீமை மனிதனொருவனின் வாழ்வில் ஏற்படும் சில சம்பவங்களால் குடும்பமே குலைந்து போக, உணர்ச்சிப் கொந்தளிப்புகளுக்கிடையே கைப்பிடித்து ஓடி ஓடி குடும்பத்தைக் காத்து நிற்கும் அவனது கதையை ரத்தமும் சதையுமாக ஒரு நேர்த்தியான கதை சொல்லி அருமையாக சொன்னால் – ‘அசுரன்’ கொடுத்த விதத்தில் பொறி… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

அளவில்லாமல் அடாவடி செய்யும் ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள்! : பரமன் பச்சைமுத்து 

திருச்சியில் உள்ள ஒரு நகைக் கடையொன்றில் இரவில் கன்னம் வைத்து கொள்ளை நடந்துள்ளது என்ற ஒரு செய்தி படங்களோடு முதலில் கட்செவியஞ்சலிலும் ஊடகங்களிலும் அடுத்த நாள் செய்தித் தாள்களிலும் வந்தன. முகமூடியணிந்த கொள்ளையர்களின் கண்காணிப்புக் கேமரா படங்கள், துளையிட்ட சுவரின் படம் என எல்லாமே வெளியாகி பெருமளவில் பகிரப்பட்டன. அடுத்த நாள் கடையின் உரிமையாளர் சென்னையிலிருந்து… (READ MORE)

Uncategorized

தினம் காமராஜர்

எப்போதும் காமராஜரைப் பற்றியே பேசுபவனுக்கும் எண்ணுபவனுக்கும் காமராஜர் தினம் இல்லை,… ‘தினம் காமராஜர்!’ பெருந்தலைவருக்கு மலர்ச்சி வணக்கம்! – பரமன் பச்சைமுத்து 02.10.2019

Uncategorized

வாஞ்சி மணியாச்சி

நூற்றியெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே ரயில்நிலையத்தில்தான் புரட்சி செய்தான் வாஞ்சி.திருநெல்வேலியிலிருந்து கொடைக்கானலுக்கு முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்த பிரித்தானிய கலெக்டர் ஆஷ்ஷை, இதே மணியாச்சி ரயில் நிலைய மேடையில் உலாத்தியபடியே கவனித்து துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்றான் புரட்சியாளன் வாஞ்சி.வெகுகாலத்திற்குப் பிறகு மணியாச்சி ரயில் நிலையத்தை ‘வாஞ்சி மணியாச்சி’ என்று பெயர் மாற்றம் செய்ய… (READ MORE)

Uncategorized

இனி, துரைசிங்கத்தின் வசனங்கள் வராது; தூத்துக்குடி என்றால் சொல்வதற்கு நினைப்பதற்கு நிறைய நல்ல சங்கதிகள் இருக்கிறது எனக்கு.

தூத்துக்குடியில் இறங்கிக் கால் வைக்கும் போது… உலகின் மிகச் சிறந்த உப்பு உற்பத்தியாகும் இடம், வ.உ.சியின் சுதேசிக் கப்பல், கிரேக்க தாலமி குறிப்புகள், எரித்ரேயன் பெரிப்லஸ், ஆதிச்ச நல்லூர், மார்க்கோ போலோ குறிப்பிட்டிருந்த முத்துக் குளித்தல், ஆதிகுடி மக்களான வலையர் குல மக்கள், டச்சுக்காரர்கள், கிழக்கிந்திய கம்பெனி, பரதவர்கள் வணங்கும் பனிமயமாதா, அனுமனை சீதையைத் தேட… (READ MORE)

Uncategorized

நடிகர் விஜய்யின் அப்பா, ஆளுஞர் தமிழிசை அவர்களோடு பயணித்தத் தருணங்கள்

நேற்று இரவு மலர்ச்சி பட்டமளிப்பு விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் பற்றி ஒரு குறிப்பை சொல்லிவிட்டு, அதிகாலை தூத்துக்குடி விமானத்தில் ஏறி அமர்ந்தால், எனக்கு முன்னிருக்கையில் மேதகு ஆளுநர் – தெலுங்கானா திருமதி தமிழிசை சௌந்த்தரராஜன் அவர்கள். உள்ளே நுழைந்த உடனேயே குட்மானிங் மேடம், யு ஆர் இன்ஸ்பயரிங்!’ என்று நான் சொன்னதை புன்னகைத்து தலையசைத்து ஏற்றுக்… (READ MORE)

Uncategorized

நன்றாக இருக்கிறது திரும்பிப் பார்க்க

‘திருவண்ணாமலை அரசுக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன் நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. ‘மகளிர் தின விழா’வில் பேச வந்திருந்தார் பரமன் பச்சைமுத்து அவர்கள். உடன் பணிபுரிந்த பெண் ஒருவர் பரமனிடமே ‘பரமன், எப்ப நான் உன்னை சேல்ஸ்ல ஜெயிக்க முடியும்?’னு கேட்டாராம். ‘நீ முடிவு பண்ற அன்னைக்கு!’ என்று பரமன் பதில் சொன்னாராம். இது நிகழ்ச்சியில்… (READ MORE)

Uncategorized

பொதினா புளித் துவையல்

உணவில் உயிர்ச்சத்து இருக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வப்போது அரைத்த துவையல்களை சட்னிகளை வழித்துச் சுவைப்பவன் நான். அப்படியொரு துவையலோடு வந்திருந்த என் வீட்டு மதிய உணவை இன்று பிரித்த போது உடனிருந்த சில அன்பர்களோடு பகிர நேர்ந்தது. ‘ஐயோ… சூப்பரா இருக்கே! இது என்ன துவையல் பரமன்?’ என்பது அனைவரின் பொதுக் கேள்வியாக இருந்தது. அவர்களுக்குப்… (READ MORE)

Uncategorized

images4896631818316080130.jpeg

‘ஒத்த செருப்பு ‘ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த ஒரு கொலைத் தொடர்பாக ஒருவனைப் பிடித்து வந்து ஒரு காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கையில் அந்த ஒருவன் வெளிப்படுத்தும் சங்கதிகளால் உருவாகும் ஒரு கலவையான அனுபவத்தை ஒரு முழுப்படமாக வடித்து ஒரே ஓர் ஆள் மட்டுமே நடித்து ஒரு மிரட்டலோடு அதைத் தந்தால் – ‘ஒத்த செருப்பு’ இரண்டு மணி நேரத்தில்… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , ,

சிங்க முக யாளி

காவிரிப்பூம்பட்டினத்தில் இறக்கி விட்டு் ‘பாவை மன்றம்’ முன்னே நின்று மாதவியை கலியன் ஆசிரியர் விளக்கிய போது, அரைக் கால்சட்டை அணிந்த மூன்றாம் வகுப்புப் பையனாகிய நான் அந்தச் சிலைகள் உயிர் பெற்று நிற்பதைப் போல் அதிசயித்தேன். கோவலனையும் சேரன் செங்குவட்டுவனையும் இளங்கோவடிகளையும் தொட்டு, ‘டாய் பரமன் தொடக்கூடாது!’ என்று இரண்டாம் வகுப்பு எண்ணாவரம் வாத்தியார் சொன்ன… (READ MORE)

Uncategorized

அன்பென்பது பிரஞ்ஞை கடந்தது

கோவை விமான நிலையத்தில் ஒரு வசதி, விமானத்திலிருந்து இறங்கி தனிப் பேருந்தில் பயணித்து விமான நிலையத்திற்கு வர வேண்டாம். விமானம் விட்டு இறங்கி நடந்தே விமான நிலையம் வந்து பேக்கேஜ் கலெக்‌ஷன் பெல்ட்டிற்கு வந்து விடலாம். இன்று கோவையில் விமானத்திலிருந்து இறங்கும் போதே கண்ணை ஈர்த்தது ஒரு நிகழ்வு. இதே விமானத்தில்தான் வந்திருக்க வேண்டும் அவர்கள்…. (READ MORE)

Uncategorized

மழை கொடுப்பதை மற்றெவரும் கொடுக்க முடியாது!

புளிக்கு ஜிஎஸ்டி இல்லை, பெருநிறுவன வரிகள் குறைப்பு, பங்குச்சந்தை குறியீடு உயர்வு என்று ஊடகங்கள் கொண்டாடும் வேளையில் கொண்டாட முக்கிய மற்றொன்றும் இருக்கிறது. சமீபத்தில் பெய்த மழையால், சென்ற மாதம் மைதானமாகக் காட்சியளித்த புழல் மற்றும் பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மழை கொடுப்பதை மற்றெவரும் கொடுக்க முடியாது! மழையே நன்றி!… (READ MORE)

Uncategorized

தினமணிக்கு மலர்ச்சி வணக்கம்

கடலூரை சொந்த ஊராகக் கொண்ட அவர் தினமணியில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற தொடரை எழுதினார், பின்னாளில் நூலாக வந்து அவருக்கும் சாகித்ய அகாதெமி விருதினை தமிழுக்கும் வாங்கித் தந்தது. அந்த புதிய எழுத்தாளர் பின்னாளில் ஜெயகாந்தன் என்ற ஆளுமையாக அறியப்பட்டார். லால்குடிக்காரரான ராமாமிர்தம் தினமணியில் ‘சிந்தா நதி’ என்ற தொடர் எழுதினார். பின்னாளில்… (READ MORE)

Uncategorized

,

‘மலர்ச்சி இறை வணக்கப் பாடலை எப்படித் தெலுங்கில் பாடுவீங்க, பரமன்?’

‘மலர்ச்சி இறை வணக்கப் பாடலை எப்படித் தெலுங்கில் பாடுவீங்க, பரமன்?’ புதிய கிளையை திறந்து வைப்பதற்காகப் சாலையில் பயணித்து குண்ட்டூர் சென்று இறங்கியதும் எனை நோக்கி வைக்கப்பட்ட, நான் எதிர் கொண்ட முதல் கேள்வி. கடவுளுக்கு ‘தேவுடு!’ என்கிற வார்த்தையை மட்டும்தான் நான் அறிவேன். அதுவும் என்டிஆரை மக்கள் அப்படி விளிப்பார்கள் என்பதாலும், ரஜினி படத்துப்… (READ MORE)

Uncategorized

ரேய் துஸ்லிகா பச்சிடிரா’

‘ரேய் துஸ்லிகா பச்சிடிரா’ ‘க்கோர்சிக்கிடிக்காய் பச்சடி தீஸ்கோண்டி’ ‘மஜ்லிகா புளுஸு’ இந்தச் சத்தங்கள் நிறைந்த அந்த உணவகத்தினுள் நாம் அழைத்துச் செல்லப்படுகிறோம். திருப்பதி போகும் போதெல்லாம் மினர்வா கிராண்டில் அல்லது மயூராவில், பெங்களூருவில் நாகார்ஜுனாவில், வேறு வழியில்லாத போது சென்னையில் அமராவதியில் என்ற அளவிலேயே ஆந்திர சாப்பாட்டைப் பற்றிய அனுபவங்கள் கொண்ட நம்மை ‘ஆத்தன்டிக் அக்மார்க்… (READ MORE)

Uncategorized

வெப்ப பூமி வளமான கதை – முதலிப்பட்டி, விளாத்திகுளம் வேம்பு சக்தி இயக்கம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே 100க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட விவசாயமும் கால்நடை வளர்ப்பும் முதன்மையாகக் கொண்ட ஒரு சிற்றூர் முதலிப்பட்டி. வானம் பார்த்த பூமியான முதலிப்பட்டியில் 15 ஏக்கர் அளவுள்ள கண்மாய் இருந்தும், 8 ஏக்கர் துர்ந்து மேடாகி கருவேல மரங்களால் நிறைந்தும், மீதியுள்ள 7 ஏக்கர் சேறு சகதியுமாகவும் ஆகிப் பயன்பாட்டிற்கு அருகதையற்றுப்… (READ MORE)

Uncategorized

‘ஃபயர் பீடா’ தெரியுமா உங்களுக்கு?

‘ஃபயர் பீடா’ தெரியுமா உங்களுக்கு? புதுச்சேரியில் மலரவர் கோவிந்தராஜுலு மகன் திருமணத்திற்குப் போன இடத்தில், ‘பரமன், யு ஷுட் ட்ரை திஸ் ப்ளீஸ்!’ என்று பரிந்துரைத்தார்கள். வெற்றிலையில் விளக்கேற்றி நதியில் விடுவது போல் வெற்றிலையை விரித்து பீடா சங்கதிகள் இட்டு ‘பட்’டென்று பற்ற வைத்து நெருப்போடு நம் திறந்த வாய்க்குள் தள்ளுகிறார்கள். ( நம் சிவவேலன்… (READ MORE)

Uncategorized

தமிழ் செழிப்பாக வாழ்கிறது அயலகத் தமிழ்களின் இல்லங்களில்

ஓர் இனத்தின் அழிவில் மட்டுமல்ல, உறவின் முறைகளை விளிக்கும் வழக்குச் சொற்கள் வேற்றுமொழிச் சொற்களால் மாற்றப்படும் போதும் தேயத் தொடங்குகிறது ஒரு மொழி. உறவின் முறைகளை தங்கள் மொழிச்சொற்களிலேயே விளிக்கும் போது விழுதுகள் விடுகின்றது மொழி. ஓர் இனத்தின் மக்கள், உறவுகள் அவ்வப்போது அல்லது விழாக்களில் கூடும் பொழுதுகளில் தங்களுக்கான முறைகளைத் தொடரும் போது பெருமளவில்… (READ MORE)

Uncategorized

கொழும்பில் ஒரு சிறு பெண்

‘திருச்சிற்றம்பலம்’ என்று தொடங்கி ‘உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன்…’ என்ற பதிகத்துடன் ஒரு பள்ளியின் நிகழ்ச்சி தொடங்கினால் எப்படியிருக்கும் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் நமக்கு! கொழும்புவில் உள்ள முக்கிய மகளிர் கல்லூரியான ராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் இன்று நடந்த நிகழ்விலும் சரி, சில தினங்களுக்கு முன்பு நாவலப்பிட்டியவில் கதிரேசன் மத்திய கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியிலும்… (READ MORE)

Uncategorized

ரஜினி கட்சி தொடங்கினால்…

ஜனவரி 2020க்குப் பிறகு ரஜினி கட்சி தொடங்கினால் என்ன செய்வார்கள் இவர்கள்! தொடங்கிவிடுவார் போலத் தோன்றுகிறது. – பரமன் பச்சைமுத்து நாவலப்பிட்டிய, கண்டி, இலங்கை 06.09.2019

Uncategorized

இயற்கையே… கோடிக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பேரறிவே!

‘ ம்க்கூம்… உலகம் முழுக்கக் காடு காடுன்னு கத்தும். ஆனா, அதக் காப்பாத்த என் நாட்டோட நிலப்பரப்ப பொருளாதாரத்த இழக்க வேண்டிருக்கு! எங்களுக்கு என்ன செய்யறதுன்னு தெரியும். நீங்க ஷட் அப் பண்ணுங்க!’ – இது ‘ஐயோ காட்டையழிக்கிறார்கள்… காட்டையழிக்கிறார்கள்! நிறுத்துங்கள்!’, என்று சில மாதங்கள் முன்பு கதறிய உலகத்தினரின் முகத்தை நோக்கி பிரேசிலின் புதிய… (READ MORE)

Uncategorized