Uncategorized

‘ஜோக்கர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஐம்பது கோடி ரூபாய் ஊழல் என்று செய்தி வந்தால்,  ‘ஐம்பது கோடி எல்லாம் ஒரு பெரிய ஊழலா அவரவர்கள் பதினேழு லட்சம் கோடிக்கு பண்ணுகிறார்கள், போய்யா! கேவலமா இருக்கு!’ என்று  சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் ஒரு தேசத்தின் மனநிலையால்,  பின்தங்கி கிடக்கும்  பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தின் வெளி உலகம் அதிகம் அறியா ஒரு மன்னர்மன்னனின் வாழ்க்கை… (READ MORE)

Uncategorized

சுடச்சுட குடிக்க

​ஆர்டர் செய்து வாங்கிய கேப்பச்சீனோக்களும் லாத்தேக்களும் ஆறிக்கொண்டிருக்க,  செல்லிடப் பேசிக்கு சுடச்சுட குடிக்க தங்களைத் தந்துவிடுகிறார்கள் இங்கே பலர். #ஸ்டார்பக்ஸ் #அண்ணாநகர்  (வெளியில் வரும் போது எழுதியது)  Facebook.com/ParamanPage

Uncategorized

ரொடீனிய பூமிப்பரப்பு 

​துண்டு துண்டாக உடையாமல் ஆழி சூழ ஒரே நிலப்பரப்பாக ‘ரொடீனியா’வாக இருந்த இந்தப் பூமிப்பரப்பு அப்படியே இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? அமெரிக்காவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும், சிங்கப்பூருக்கும், சிட்னிக்கும் சைக்கிளிலில் சென்றிருப்பார்கள் புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்து தனுஷ் போல.  ராயப் பேட்டை நண்பர்கள் குழு ரியோ ஒலிம்பிக்ஸ் பார்க்க ராயல் என்ஃபீல்டில் கிளம்பியிருக்கும். ஆனால் அப்போது ராயப்பேட்டை மடகாஸ்கரில்… (READ MORE)

Uncategorized

நண்பன் என்றதும்…

​ஊரின் ஒதுக்குப்புறமாய் குளத்து மூலையில் எங்கள் வீடு இருந்தது அப்போது. வீட்டு வாசலில் எப்போதும் தண்ணீர் ஓடும் ஒரு சிறு வாய்க்கால். ஒரு மரத்தை குறுக்கே போட்டு பாலமாக மாற்றி வைத்திருந்தார் அப்பா. பின்புறம் செட்டியாரின் வயல். அந்த என் அரைக்கால் சட்டை வயதின் பொழுதுகளில் பெரும்பாதி ஆளவந்தாரால் நிரப்பப்பட்டவை. மூன்று வீடுகள் தள்ளி இருந்த… (READ MORE)

Uncategorized

அய்யோ… இறைவா! 

அவனம்மா தெருவில் யாரிடமோ பேரம் பேசி எதையோ வாங்க முயற்சித்து, பேரம் படியாத ஆற்றாமையில் திட்டிக்கொண்டே வீட்டினுள் வந்தாள். அவளது சத்தத்தில் கண்விழித்தவன் அப்படியே அமர்ந்திருந்தான். தூங்கி எழுந்ததும் இயல்புநிலைக்குத் திரும்ப வெகுநேரம் எடுத்துக்கொள்ளும் குழந்தைகளைப் போல வெறுமனே வெறித்துப் பார்த்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்திருக்கும் சில மனிதர்களைப் போலில்லை அவன் நிலை இன்று.  தூக்கக்… (READ MORE)

Uncategorized

அன்பென்பது…!

நீர் பருகலாமென்று சமையலறைக்குள் போகிறேன். கூடவே பேசி சிலாகித்துக் கொண்டு வருகிறாள் செல்ல மகள், தான் இப்போது படித்து முடித்த ஒரு நூலைப் பற்றி. ‘அப்பா… யூ நோ… தி எண்ட் ஆஃப் த புக் ஈஸ் ஆஸம்! என்ன ஆகும் தெரியுமா….?’ கிட்டத்தட்ட ‘பாபநாசம்’ க்ளைமாக்ஸ் மாதிரி முடித்திருப்பார்கள் என்று சொல்லப் போகிறாள் என்று… (READ MORE)

Uncategorized

மரங்கள் என்பவை வெறும் நிழலுக்கானவையல்ல…

​எங்களூருக்கு கிழக்கே ஓர் அய்யனார் கோவில் உண்டு. சுரபுன்னை மரங்களும், பனையும், வேம்பும், இன்ன பிற கொடிகளும் சேர்ந்து பின்னிப் பிணைந்திருக்கும் வெயில்புக முடியா அக்காட்டில், சில சிலைகள் இருக்கும். ‘தச்சக்காடு’ அய்யானார் கோவில் என்று பெயர் அதற்கு. குருவிகளும், காட்டுப்பூனைகளும், பாம்புக் குட்டிகளும் வசித்த அந்தக்காட்டிற்கு சென்று வழிபடுவது அந்த வயதில் பயமாக இருந்தாலும்,… (READ MORE)

Uncategorized

தனிமைத் தவம்

கூட்டமாய் குதூகலித்து மகிழ எவ்வளவு பிடிக்குமோ, தனித்து இருக்கவும் அவ்வளவு பிடிக்கும் எனக்கு. சில திரைப்படங்களை சிலரோடு மட்டுமே பார்க்க வேண்டும் என்பதுபோல, சில படங்களை தனியாகவே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான். தனியாக இருக்க பயம் கொள்பவன், தூங்கும் நேரம் தவிர மீதி நேரமெல்லாம் துணை வைத்துக்கொள்கிறான். தூங்கும் போது மட்டுமே… (READ MORE)

Uncategorized

நாலு முழமா எட்டு முழமா – பழசு

நாலு முழமா, எட்டு முழமா என்று அளவு கேட்ட கடைக்காரரை, 28-30ஆ 30-32ஆ என்று சைஸ் கேட்க வைத்துவிட்டன ‘ஒட்டிக்கோ, கட்டிக்கோ’ வெல்குரோ வேட்டிகள்! #ராம்ராஜ் வெல்குரோ

Uncategorized

வேலூர் சரவணபவன்

நேற்று முன்தினம் பெங்களூரூவிற்குப் பயணிக்கும் போது மதிய உணவு சாப்பிட வேலூர் சரவணபவன் வந்தேன். இன்று சென்னை நோக்கிப் பயணிக்கும் வழியில் மதிய உணவிற்காக அதே வேலூர் சரவணபவன். இரண்டுக்குமிடையே நிறைய நடந்துவிட்டன. ஒரு மலையில் ஏறியது, ஒரு அனுபவக் கட்டுரை, உறவினர் ஒருவர் வீட்டில் தடாலடியாக புகுந்து மகிழச்செய்தது, உயிர் நண்பனோடு ஓரிரவு தங்கி… (READ MORE)

Uncategorized

‘மலைகள் அழகானவை’ அல்லது ‘மலேய்டா…!’

மலைகள் எப்போதுமே என்னை ஈர்ப்பவை. ‘குணா’ பார்த்து விட்டு ‘புண்ணியம் செய் மனமே’ அந்தாதி சொன்ன கமலஹாசன் பாத்திரம் நம்மைப்போலவே இருக்கிறதே என்று வியந்திருக்கிறேன்.  கர்நாடகாவில் இருந்த காலங்களிலெல்லாம் மலைமுகடுகளில் திரிந்திருக்கிறேன். சென்ற ஆண்டு சாவன்துர்கா, மேற்குத் தொடற்சியின் கல்கொத்தி மலை மற்றும் போளூர் அடுத்த பர்வதமலை ஏறிய போது கால்கள் விரையும் வேகங்கண்டு ‘மனிதக்… (READ MORE)

Uncategorized

அறுபத்து மூவர் இன்று…

‘தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன், திருநீலகண்ட குயவனார்க்கு அடியேன்…’ என்று பதிகத்தில் பதிவு பெற்ற சிவனடி நிழல் பெற்ற நாயன்மாறர்களுக்கென்றே நடக்கும் பெரு உற்சவம் இன்று இங்கே.  மயிலைத் தெருக்களில் தொடங்கி மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம் என் வீடு வரை சாலையோரத்தில் மோர் விநியோகிக்கிறார்கள், நீர் தருகிறார்கள், உணவு சமைக்கிறார்கள்.  எந்த அரசியல் அல்லது… (READ MORE)

Uncategorized

மயிலை தேர்…

‘ஏங்க எடம் இல்லீங்க… வழியில்லீங்க. இப்படி போக முடியாது’ ‘ஏனு… எல்லி ஹோகி…ஹலோ… மர்த் பிடு’ ‘ஏம்மா நின்னு போனாதான் என்னம்மா’ நெஞ்சு, முதுகு, அடி வயிறு என மொத்த உடம்பையும் எல்லா பக்கங்களிலிருந்தும் எல்லாரும் அழுத்திக் கொண்டேயிருக்க, எல்லாப் பக்கமும் சப்தம், நகரமுடியாது, நினைத்த பக்கமும் போகமுடியாது, கும்பலோடு சேர்ந்து நீங்கள் கடத்தி நகரத்தப்… (READ MORE)

Uncategorized

கருந்துளைகளைத் தாண்டி கணக்கிட முடியா பெரியவன்’ :

அறிவியல் உலகம் ஆர்ப்பரிக்கிறது. ஊடகங்கள் உற்சாகத் தலைப்புகளிட்டு செய்திகள் தருகின்றன. வானியல் அறிவியலில் அடுத்த கட்டம் இது என்கிறார் டேவிட் ரிட்ஸ், லிகோ அமைப்பின் திட்ட செயல் இயக்குநர் (லேசர் இன்ட்டெர்ஃபெரோமீட்டர் க்ராவிடேஷனல்-வேவ் ஆப்சர்வேட்டரி). இன்டர்ஸ்டெல்லார் திரைப்படம் நினைவுக்கு வருகிறது சிலருக்கு. ‘சூரியனைப் போன்று 29 மற்றும் 36 மடங்குகள் பெரிய இரண்டு ராட்சத கருந்துளைகள்… (READ MORE)

Uncategorized

, , , ,

கரிகுப்பம் பவர் ப்ளாண்ட்டும், ‘கெயில்’ வயல் வழியும்

நெல் வயல்களின் ஊடே மின்சார கம்பி தூக்கும் மின் மரங்கள் நடப்போவதாகவும், அந்த இடத்தை மட்டும் வெறுமனே விட்டுவிட வேண்டும், பயிர் வைக்கக் கூடாது, இடம் தருவதற்கு இவ்வளவு பணம், கரிக்குப்பம் பவர் ப்ளாண்ட்டிலிருந்து தரகர்கள் வந்து பேசிக்கொண்டுள்ளனர் என எங்கள் கிராமமே பரபரப்பாய் இருந்தது.  அடுத்த முறை ஊருக்குச் செல்லும் போது கரிகுப்பம் பவர்… (READ MORE)

Uncategorized

திருமண நாள்

‘ப்பா… ஹாப்பீ எய்ட்டீன்த் வெட்டிங் அஏன்னிவெர்ஸரி!’ மகள் கட்டிக்கொண்டு சொல்லும் போதுதான் பதினெட்டு வருடங்கள் ஓடியே விட்டன என்பது புரிகின்றது.’எத்தனை பேர் வாழ்த்தி வளர்ந்த திருமண வாழ்க்கை!’ என்று மனம் நெகிழ்கிறது. பயணித்த பாதைகள் மனதில் ஓடுகின்றன. ‘எங்கும் நிறைந்தவனே, எல்லை இலாதானே, எங்கேயும் எப்போதும் என் குலம் காப்பவனே… நன்றி!’ மனம் கை கூப்புகிறது…. (READ MORE)

Uncategorized

சாமி முன்ன வை…

சுடச் சுட அச்சகத்திலிருந்து வந்த என் முதல் நூலை எடுத்துக் கொண்டு ஓடோடி வந்து அப்பாவின் முன் வைத்தேன். ‘எந்த நல்லதையும் சாமிகிட்ட மொதல்ல வைக்கணும்ன்னு தெரியாதா! சிவசிவா’ என்று சொல்லி பூஜையறைக்கு எடுத்துப் போகிறார். ‘சாமி முன்னதான் வைச்சேன்!’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டு புன்னகைக்கிறேன் நான்! பரமன் பச்சைமுத்து மணக்குடி 16.01.2015

Uncategorized

opnness

பிரச்சினைகளின் ஆணி வேர்…

‘இதுதான் நான்!’ ‘இப்படி நினைத்திருந்தேன்’ ‘இப்படிச் செய்துவிட்டேன்’ என்று உள்ளதை உள்ளபடி உரைக்காமல் மறைப்பதில் தொடங்குகின்றன வாழ்வின் பெரும்பாலான பிரச்சினைகள். உண்மையை போட்டு உடைப்பவனுக்கு ஒரே ஒரு பிரச்சினை, அதை சொல்லும் தருணத்தில். மறைப்பவனுக்கு ஓராயிரம் பிரச்சினைகள், காலம் முழுக்க. மலர்ச்சி வணக்கம்! -பரமன் பச்சைமுத்து Facebook.com/MalarchiPage

Uncategorized

பிஜேபி, காங்கிரஸ், தீவிரவாதிகள்…

காலையில் தில்லியில் காப்பி, மதியம் லாகூரில் லஞ்ச், இரவு காபூலில் உணவு என்று கனவு காண்பதாக அன்று மன்மோகன் சிங் சொன்னபோது கைதட்டி மகிழ்ந்தவர்கள், இன்று அதையே ‘காபூலில் காலை உணவு, லாகூரில் லஞ்ச், டில்லியில் டின்னர்’ என்று மாற்றி செய்திருக்கும் போது எதிர்க்கிறார்கள்.  காங்கிரஸைத் தவிர, உலகத் தலைவர்கள் உட்பட அனைவரும் பாராட்டுகின்றனர் என்பது… (READ MORE)

Uncategorized

பள்ளி – மழை

பள்ளி திறந்தால் பெய்யெனப் பெய்வேன், விடுமுறை விட்டால் வெயிலடிப்பேன் ‘இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க! வெவ்வேவ்வே’ என்று பம்மாத்து காட்டுகிறது சென்னை வானம்! -பரமன் பச்சைமுத்து

Uncategorized

wpid-20151022_120149.jpg

விஜயதசமியாம்…

அப்போதெல்லாம் விஜயதசமியில் பள்ளியில் சேர்ப்பார்கள். ‘பர்த் சர்ட்டிஃபிகேட்ஸ்’ எல்லாம் இல்லாத அந்நாளில், கையை தலைக்கு மேல் வைத்து காதைத் தொடச் சொல்வார்கள். அப்படித் தொட்டால், ஐந்து வயதென்பது அப்போதைய கணக்கு. ஒண்ணாம் வகுப்பில் உட்கார வைத்து ‘அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா…’ ஆரம்பித்து விடுவார்கள் (டீச்சர் கிள்றான் டீச்சர் எல்லாம்… (READ MORE)

Uncategorized

செலவை குறைக்க செலவு…

சில நேரங்களில் செய்யப்படும் சில செலவுகள், தொடர் பெருஞ்செலவுகளைக் குறைக்கும். செலவுகளைக் குறைக்க செலவு செய்யவேண்டியிருக்கிறது என்பதே உண்மை. இங்கே செலவென்பது முதலீடு! News:  Govt. Distributes 2 crores LED bulbs to replace CFLs and saves Rs. 1,000cr a year – பரமன் பச்சைமுத்து

Uncategorized

அனைத்து நாளும் ஆயுதபூஜையே…

செய்தொழிலை சீர்பட ‘புனிதமாய்’ செய்பவனுக்கு, செல்வம் வந்து சேரும், சிறப்பு வந்து கூடும்! உற்ற தொழிலை உயர்வாய் எண்ணுபவனுக்கு, அனைத்து நாளும் ஆயுதபூஜையே! – பரமன் பச்சைமுத்து #AyuthaPooja

Uncategorized

எதைப் பார்க்க வேண்டும்

கண்ணுக்கு முன்னே பரந்து விரிந்த அலையடித்து ஆர்ப்பரிக்கும் அழகுக் கடல், காலுக்கு சில அடி தூரத்தில் சகதி. இப்போதைக்கு இங்கே எதையும் மாற்ற முடியாது என்ற நிலையில், எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்த்தால் உங்களுக்கு நன்மை என்று முடிவு செய்து செயல்படுங்கள். வாழ்க! வளர்க!  –  Paraman Pachaimuthu Facebook.com/MalarchiPage

Uncategorized

Tumb

அகப் பிளவு நோய்

  முகப் பிளவு நோய் கொண்ட பாகிஸ்தான் பிள்ளைக்கு சென்னையில் முகச்சீரமைப்பாம், அகப் பிளவு நோய் கொண்டோர்க்கு அகச் சீரமைப்பு எங்கே?  

Uncategorized

தெருச்சந்தி பிள்ளையார் படம்

கடவுள் நம்பிக்கையில் அல்ல, யாரும் குப்பை போட்டு சிறுநீர் கழிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தொங்க விடப்படுகிறது தெருச் சந்தி சுவரில் பிள்ளையார் படம்! : பரமன் பச்சைமுத்து

Uncategorized

தலுவை

நெற்றியில் திருமண், இடுப்பில் ஒரு சுற்று சுற்றி செருகிய வெள்ளைத் துண்டு, கையில் பளபளவென்று துலக்கப்பட்டு துளசி சுற்றப்பட்ட பித்தளைச் செம்பு, அந்த வயதிற்கேயுரிய பிடுங்கித் தின்னும் வெட்கம் சகிதமாய் ஒவ்வோர் வீட்டு வாசலிலும் ‘ நாரயண கோபாலா…’ என கூவிக்கூவி அரிசி சேகரித்து அம்மாவிடம் தந்த அரைக்கால் சட்டை பொழுதுகள் கிராமத்து கட்டாயங்கள் வந்து… (READ MORE)

Uncategorized