Monthly Archive: March 2016

london_has_fallen_2015_movie-wide - Copy

‘லண்டன் ஹேஸ் ஃபாலன்’ – திரை விமர்சனம்

அமெரிக்கர்களைப் பொறுத்தவரை வெள்ளை மாளிகையும், அதிலிருக்கும் அதிபரும் அவர்களது பெருமை. தேசியக்கொடியை உள்ளாடையில் பிரிண்ட் செய்து போடுவதைக் கூட ஏற்றுக் கொள்ளும் அவர்கள், வெள்ளை மாளிகைக்கோ, அமெரிக்க அதிபருக்கோ அந்நிய தேசத்தால் ஒரு கரும்புள்ளி வருவதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஆங்கிலத் திரைப்படம். பிரித்தானிய பிரதமரின் மறைவிற்கு இரங்கல் செலுத்த ஏகப்பட்ட… (READ MORE)

Manakkudi Talkies

, ,

அமெரிக்க அதிபர் கியூபா பயணம் பற்றி அன்றே சொன்ன ஃபிடல் காஸ்ட்ரோ

‘கருப்பின மகனொருவன் அமெரிக்க ஜனாதிபதியாகவும், லத்தீன் அமெரிக்க மனிதரொருவர் ‘போப்’ ஆகவும் இருக்கும் நாளில்… அமெரிக்கா நம்மிடம் வந்து பேசும்!’ என்று ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து மூன்றிலேயே சொன்ன ஃபிடல் காஸ்ட்ரோ பிரமிக்க வைத்துவிட்டார்! ‪#‎American‬ President in Cuba after 88 years. Present Pope is from ‪#‎Argentina

பொரி கடலை

, ,

அறுபத்து மூவர் இன்று…

‘தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன், திருநீலகண்ட குயவனார்க்கு அடியேன்…’ என்று பதிகத்தில் பதிவு பெற்ற சிவனடி நிழல் பெற்ற நாயன்மாறர்களுக்கென்றே நடக்கும் பெரு உற்சவம் இன்று இங்கே.  மயிலைத் தெருக்களில் தொடங்கி மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம் என் வீடு வரை சாலையோரத்தில் மோர் விநியோகிக்கிறார்கள், நீர் தருகிறார்கள், உணவு சமைக்கிறார்கள்.  எந்த அரசியல் அல்லது… (READ MORE)

Uncategorized

மயிலை தேர்…

‘ஏங்க எடம் இல்லீங்க… வழியில்லீங்க. இப்படி போக முடியாது’ ‘ஏனு… எல்லி ஹோகி…ஹலோ… மர்த் பிடு’ ‘ஏம்மா நின்னு போனாதான் என்னம்மா’ நெஞ்சு, முதுகு, அடி வயிறு என மொத்த உடம்பையும் எல்லா பக்கங்களிலிருந்தும் எல்லாரும் அழுத்திக் கொண்டேயிருக்க, எல்லாப் பக்கமும் சப்தம், நகரமுடியாது, நினைத்த பக்கமும் போகமுடியாது, கும்பலோடு சேர்ந்து நீங்கள் கடத்தி நகரத்தப்… (READ MORE)

Uncategorized