Monthly Archive: March 2017

nathi

‘நதி போல ஓடிக் கொண்டிரு…’ : பகுதி – 9

9. “ஏற்றிருக்கும் பொறுப்பின் மீது காட்டப்படும் விருப்பு வெறுப்புகளை தனக்கென்று தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்பவன் தன்னிலை இழந்து காயம்படுவான்”. எவ்வளவு பெரிய பிரச்சினைகளையும் எதிர்கொண்டு மிக எளிதாக சரிசெய்து விடுகிறார்கள் சில மனிதர்கள். ஒன்றுமில்லாத சிறிய விஷயங்களைக் கூட பெரிய பிரச்சினைகளாக்கி களேபரம் செய்து விடுகிறார்கள் சில மனிதர்கள். உலகம் என்பது நான்கு விதமான மனிதர்களையும்… (READ MORE)

Media Published

​ஒன்றரை நாளுக்கு ஓர் ஊர் என்று சுற்றுபவனை

ஒன்றரை நாளுக்கு ஓர் ஊர் என்று சுற்றுபவனை ஒரே இடத்தில் அடைத்துப் போட்டுவிட்டது இந்த விஷக் காய்ச்சல்!  இதற்கு மேல கசப்பா ஒண்ணு இருக்க முடியுமா என்றிருக்கும் நிலவேம்புக்குடிநீரை உலகிலேயே இத்தனை முறை குடித்தவன் நானாகத்தான் இருப்பேன்.  ஒரு நாளைக்கு மூன்றுமுறை என்ற கணக்கில் நிலவேம்பும், ஆடாதொடை மணப்பாகும் பருகித் தள்ளுகிறேன். நான்கு நாட்களாக படுக்கையில்… (READ MORE)

Uncategorized

Mohammaed koya

‘உங்களுக்கு ஒரு ஆறு லட்சம் ரூபாய் வந்தால் என்ன செய்வீர்கள்?’

பத்தாயிரம் சம்பாதித்தபோது ‘ஒரு பதினஞ்சாயிரம் வந்தா கொஞ்சம் சேக்கலாம். எதாவது செய்யலாம்!’ என்று நினைத்தோம். பதினைந்தாயிரம் வந்தபோது இரண்டாம் மாதத்திலிருந்து அதுவும் பற்றாமல் போனது. ‘ஒரு முப்பதாயிரம் வந்தால் எதாவது செய்யலாம்’ என்று சொல்லிக்கொண்டோம். ஆண்டுகள் ஓடின, ஊதியங்கள் ஏறின, வாழ்வின் தேவைகள் மாறின, நாம் சொன்ன அந்த ‘இன்னும் கொஞ்சம் கூட இருந்தா நல்லா… (READ MORE)

Media Published, Self Help

, , ,

aazhiyaaru

ஆழியாறு வேதாத்ரி மகரிஷி அவர்களின் ‘மனவளக்கலை’ மன்றத்தின் ஆசிரமம் ‘அறிவுத் திருக்கோவில்’ – ‘மலர்ச்சி உரை’

  சில நிகழ்வுகள் நடந்தேறும் போது எதற்காக அவை நடத்தி வைக்கப்படுகின்றன என்பது என்பது முழுமையாக புரியாவிட்டாலும் அவை மிக முக்கியமானவை என்பது வரையில் மட்டுமாவது புரிகிறது. இன்று நடந்த நிகழ்வுகள் அவ்வண்ணமே. நினைத்தேப் பார்க்காத ஒன்று நடந்தது. இன்று மிக முக்கியமான நாள். ஆழியாறு வேதாத்ரி மகரிஷி அவர்களின் ‘மனவளக்கலை’ மன்றத்தின் ஆசிரமம் ‘அறிவுத்… (READ MORE)

Uncategorized

இந்த நீதிபதிகள் மதிக்கத் தக்கவர்கள்.

இந்த நீதிபதிகள் மதிக்கத் தக்கவர்கள். அடையாறு ஆற்றையும் கூவம் ஆற்றையும் காப்பாற்றச் சொல்லி அரசுக்கு நீதிமன்ற பரிந்துரை தந்திருக்கிறார்கள். சென்னை நகரின் இந்நதிகளை தூர்வாரி தூய்மைப்படுத்த வழி சொல்லியிருக்கிறார்கள். நகருக்கே வெளியே கழிவுகளை சுத்திகரிக்கும் நிலையம் வைத்து ஒரே நேரத்தில் நகருக்கும் நன்மை ஊருக்கு வெளியே விவசாயத்திற்கும் நன்மை என்றோர் வழியை சொல்லியிருக்கிறார்கள். பழைய படி… (READ MORE)

Uncategorized

Maanagaram-2016

‘மாநகரம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பிழைப்புக்காக பலர் வந்துகொண்டேயிருக்கும் பெருநகரில் பிழைப்புக்காக எதையும் செய்யும் சில மனிதர்களின் பிழையால், பிழையில்லாமல் போய்க்கொண்டிருக்கும் சிலரது பிழைப்பில் மண் விழுகிறது. எதிரேபார்த்திராத அந்த அனுபவங்களை அந்த சாமான்ய மனிதர்கள் எப்படி எதிர் கொள்ளுகிறார்கள் என்பதை பக்கத்திலிருந்து பார்ப்பது போல படமாக்கித் தந்திருக்கிறார்கள்.   ‘ஊருக்கே போயிடறேன்’ என்பவனையும் ‘ஊரைவிட்டுப் போக விருப்பமில்லை’ என்பவனையும் இரண்டு நேர்கோடுகளில்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , ,

சிட்டுக்குருவி1

சிட்டுக்குருவிகளை கொன்றவன்!

அதிகம் சம்பாதிக்கவேண்டுமென்ற அலட்டல்கள் அதிகமில்லா அக்காலமதில் சித்திரை உச்சத்திலும் … உக்கிர வெய்யில் உள்ளிறங்கமுடியா செக்கச்செவேர் ஓடுகள் வேய்ந்த வீட்டில் அறுத்த நெற்கதிர்களை அழகாகக் கட்டி உத்தரத்தில் உயரே தொங்க விட்டாள் பாட்டி அடுத்த அதிகாலை அதிசயமொன்று நடந்தது அகமே ‘கீச் கீச்’சால் நிறைந்தது அரண்டெழுந்ததில் என்னாழ் உறக்கம் கலைந்தது எங்கிருந்தோ வந்து சேர்ந்தன சின்னஞ்சிறிய… (READ MORE)

பொரி கடலை

, , , ,

nathipol 8

‘நதி போல ஓடிக் கொண்டிரு…’ – Part 8

8. ‘துணிச்சல் என்பது பயத்தை துறப்பது அல்ல, அது பயத்தைத் தாண்டிய பார்வை’   மிக உயரத்திலிருக்கும்போது கீழே குனிந்து பார்க்காதவரை உயரம் பற்றிய பிரக்ஞை எதுவுமேயில்லாமல் செய்வதை தொடரமுடியும்.  கீழே ஒரு முறை பார்த்துவிட்டால் ‘எவ்வளவு உயரம்!’ என்பதான ஒரு எண்ணம் வந்துவிடும். டோக்யோவின் ஷினகாவா பகுதியில் இருக்கும் பெரும்புகழ்பெற்ற ‘ஹோட்டல் ஷினகாவா பிரின்ஸ்’சின்… (READ MORE)

Self Help

, , , ,