Monthly Archive: March 2018

சரணடையும் பொழுதில்…

அதிகாலையிலெழுந்து அவனை சரணடைவதில் கிடைக்கும் அனுபவம் அலாதியானது. பாசுரங்கள், பதிகங்கள், பாமாலைகளென்ற எந்த சத்தங்களுமின்றி, எதுவுமிலா இவன் எல்லாமுமான அவனை நோக்கி வெறுமனே இருத்தலிலிருந்து குவிப்பது ஓர் உணர்வின் உன்னதம். அங்கே கிடைக்கும் பிணைப்பு அவனருள்! ஆழ்வோம்! #தவம் #தியானம் #சரணடைதல் – பரமன் பச்சைமுத்து திருவண்ணாமலை 31.03.2018 www.ParamanIn.com

Spirituality

, , , , , , , ,

பரமன், நீங்கள் சித்த – ஆயுர்வேத மருத்துவத்தை அதிகம் பரிந்துரைப்பதாக ஓர் எண்ணம்

  கேள்வி: பரமன், நீங்கள் சித்த – ஆயுர்வேத மருத்துவத்தை அதிகம் பரிந்துரைப்பதாக ஓர் எண்ணம் (வளர்ச்சி இதழில் வரும் கட்டுரைகளில் உட்பட). நீங்கள் ஆங்கில மருத்துவத்திற்கு எதிரானவரா? பரமன்: ஆங்கில மருத்துவத்திற்கு எதிரானவன் அல்ல என்பதை முதலில் தெளிவு படுத்திவிடுகிறேன். இரண்டு நிகழ்வுகளை பகிர்கிறேன். நிகழ்வு – 1: படிப்பதற்கு கண்ணாடி அணியும் என்னை… (READ MORE)

Uncategorized

‘முக்கால் எம்எல்ஏ’

‘முக்கால் எம்எல்ஏ’ சோமாசிப்பாடி திருமலை மாமாவை சுப்புராய உடையார் மாமா இப்படித்தான் விளிப்பார் அக்காலங்களில். ‘பஉச’வும், ‘விவிஎஸ்’ஸும், ‘கலைமணி’யும் கட்சியில் களைகட்டிய அந்தக் காலங்களில் கட்சியில் கலகலவென்று வளைய வந்தார் அவர். எப்போதும் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியில் பளிச்சென்று இருக்கும் அவர் அப்போதெல்லாம் சோமாசிப்பாடி அரசமரத்தடி அருகிலிருக்கும் சோடாக்கடையில் அதிகம் தென்படுவார். திருமலை மாமாவிற்கு… (READ MORE)

Uncategorized

ஏழுநிமிடத்தில் ஷெனாய் நகர்

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் இருந்துகொண்டு ஷெனாய் நகரில் இருக்கும் அலுவலகத்திற்கு அழைத்து, ‘வெங்கட், என்னோட லஞ்ச் பாக்ஸ ஆன் பண்ணி சூடு பண்ணேன். ஏழு நிஷத்துல வந்துடுவேன்.’ என்று சொல்லமுடியுமா? சொன்னாலும் கோயம்பேடு பேருந்து நிலையம் – திருமங்கலம் – அண்ணா நகர் கிழக்கு – அண்ணாநகர் டவர் வழியாகப் பயணித்து ஷெனாய் நகருக்கு… (READ MORE)

Uncategorized

அகரம் ஃபவுண்டேஷன்ஸில் வாலண்டையர்களுக்கு மலர்ச்சி உரை

ஏழை மாணவர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டிற்கு உதவும். ( நடிகர் சூர்யாவின்) ‘அகரம் ஃபவுண்டேஷன்ஸ்’ இயக்கத்தின் தன்னார்வல செயல் வீரர்களுக்கு வாழ்வியல் பயிற்சி அளித்து வலிமையேற்றும் வாய்ப்பு வாய்த்தது இன்று. பல்வேறு துறைகளில் பணியாற்றும் வெவ்வேறு வயதினர்கள் சமுதாயம் மீது கொண்ட நல்லெண்ணத்தால் களமிறங்கி தொண்டு செய்ய ஒன்று கூடி இருந்த சபையது. நம்மால் முடிந்ததை… (READ MORE)

Uncategorized

உள்ளே… வெளியே

(சன்னலுக்கு) வெளியே உயர்ந்து நிற்கும் திருவண்ணாமலை மலை, உள்ளே அகழ்ந்து ஆழ்ந்து போகச்செய்யும் மலர்ச்சி மகா முத்ரா… உன்னத அனுபவத்தோடு தொடங்குகிறது இன்றைய காலைப் பொழுது. பரமன் பச்சைமுத்து 24.03.2018 திருவண்ணாமலை

Uncategorized

மனிதரோடு மனிதர்…

மனிதன் என்பவன் நினைவுகளாலும் ஆசைகளாலும் செய்பாடுகளாலும் ஆனவன். அப்படியானால்… உயிருக்குயிரான ஒருவரின் ஆசைகளை நாம் செயல்படுத்தும் போது, அவரின் நினைவுகளை நாம் கொண்டிருக்கும் போது… அவரோடே வாழ்கிறோம்! பரமன் பச்சைமுத்து 18.03.2018 Www.ParamanIn.com

Uncategorized

என்ன பதில் சொல்லிவிட முடியும்!

ஓடிக்கொண்டேயிருந்தவள் மீளா ஓய்வுக்குப் போய் விட்டாள். மாராத்தான், ட்ரையத்லான், ட்ரெக்கிங், சைக்கிளிங் என்று ஓடித் துடித்த கால்களும் மூச்சும் இயக்கத்தை நிறுத்திக் கொண்டன. குரங்கணி காட்டில் தீ நாக்குகளால் தீண்டப்பட்ட அனுவித்தியா கண்ணாடிப் பேழைக்குள் வெறும் உடலாக. ‘பரமன்ன்ன்ன்…. ஏன் பரமன்? நெறைய சாதிக்கனும்ன்னு ஆசைப்பட்ட பொண்ண, சாதனை பண்ண அனுமதிச்சது தப்பா பரமன்? இமயமலையை… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

நடிகர் விசுவிடமிருந்து பரமன் பச்சைமுத்து பற்றி குறுஞ்செய்தி…

👏👏👏👏👏👏 🌸🌸 நடிகர் இயக்குனர் விசு அவர்களிடமிருந்து பரமன் பச்சைமுத்து பற்றி வந்துள்ள உணர்வுப் பகிரல்!!! ஹியூமர் கிளப் இண்டர்நேஷனல் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறு மாலை நான் உரையாற்ற நேர்ந்த போது, நடிகர் இயக்குனர் விசு அவர்களும் முன் வரிசையில் அமர்ந்து கேட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு மலர்ச்சி உரையைப் பற்றிய தனது உணர்வை ஹியூமர்… (READ MORE)

Uncategorized

விசு அவர்களோடு ஓர் அனுபவம்

ஐந்தாம் வகுப்பு விடுமுறையில் அப்பா சித்தப்பா இலங்கை பயணித்து விட, அவர்களது சைக்கிளை (பழைய ராலே, புதிய ஹீரோ என்று இரண்டு) எடுத்துக் கொண்டு ராஜவேலு சித்தப்பாவிடமும், கருணாகரன் மாமாவிடமும் குரங்கு பெடல் ஓட்டக் கற்றுக் கொண்டேன். இலங்கையிலிருந்து திரும்பி வரும்போது ஜப்பானிய ‘டெட்ரெக்ஸ்’ சட்டைத் துணியோடு வாங்கிக் கொண்டு வந்த ‘நேஷனல்’ டேப் ரெக்கார்டர்தான்… (READ MORE)

Uncategorized

shape of water - Copy

‘ த ஷேப் ஆஃப் வாட்டர்’ – அன்பின் வழியது ‘உயிர் நிலை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

அவள் (வாய்) பேசா மடந்தை. எவ்வளவோ பேர் வாழும் இவ்வளவு பெரிய உலகில் தனியாகவே இருக்கிறாளவள். அமெரிக்கா – ரஷ்ய பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த அந்தக்காலத்தில், ஒரு வார்த்தைக் கூட பேசாத எலிசா என்னும் அவள் எப்போதும் எதைப்பற்றியாவது தொணத்தொணவென்று பேசிக்கொண்டே இருக்கும் செல்டாவுடன்   அரசின் ரகசிய ஆய்வுக்கூடமொன்றில் சுத்தம் செய்பவளாக தன் வாழ்க்கையை ஓட்டுகிறாள்…. (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

என் மனைவி… குளித்துவிட்டு வருகையில் குரோமோசோம்கள், ஜீன்கள் என்கிறாள். டவலை உலர்த்தயில் டெல்லி சுல்தானேட், ஷேர்ஷா என்கிறாள். கடுகு தாளிக்கையில் கங்கைகொண்ட சோழன், கார்டீசியன் ஸிஸ்டெம்ஸ், ட்ரிக்னாமெட்ரி சொல்கிறாள். சோறு இறக்கும்போது சோடியம் குளோரைடின் சமன்பாடு சொல்லிப் பாக்கிறாள். நடந்து செல்லும்போது நியூட்டனின் இயக்க விதி ஒப்பிக்கிறாள். பால் காய்ச்சும்போது பாக்டீரியா, பிதாகரஸ் தியரமென்று எதையோ… (READ MORE)

Uncategorized

எப்படி இருந்திருப்பான் ராஜராஜ சோழன்?

கோப்பரகேசரி சிவபாதசேகரன் அருண்மொழி வர்மன் என்னும் ராஜராஜ சோழன் எப்படி இருந்திருப்பான் என்று சரியாய்க்காட்ட வடிவங்கள் இல்லை. ராஜராஜ சோழன் என்று இணையத்தில் கிடைக்கும் பித்தளைச் சிலை வள்ளுவர் உருவம் போல் அனுமானத்தால் உருவாக்கப்பட்டது என்பது என் எண்ணம் ( மார்ச் 2018 மாத ‘வளர்ச்சி’ இதழின் முகப்புக் கட்டுரைக்கும் அட்டைப் படத்திற்கும் இந்தச் சிலையையே… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , , ,