Monthly Archive: April 2018

நிசத்தம்

சத்தம் மட்டுமல்ல, அமைதி மண்டிக் கிடக்கும் நிசத்தமும் காதைத் துளைக்கவே செய்கிறது.’ புத்த பூர்ணிமா தினம் கொஞ்சம் கண் மூடி அமர்ந்திருக்கலாமேயென்று மலர்ச்சி அகத்திற்குள் போன போது உணர்ந்தது. -பரமன் பச்சைமுத்து 30.04.2018

Uncategorized

ஒரு கிண்ணம் பிரபஞ்ச சக்தி…

ஒரு கிண்ணம் பிரபஞ்ச சக்தி உச்சந்தலையில் கவிழ்த்து விடப்படுகிறது, நெற்றிக்கும் உச்சிக்கும் நடுவே சில துளிகள் உள்ளிறங்கி விடுகின்றன போலும், தவத்தில் அமர்ந்த கணங்களில். #தவம் #Meditation பரமன் பச்சைமுத்து 30.04.2018 Www.ParamanIn.com

Spirituality

, ,

முதல் பறவை

இன்னும் வெளுக்காத அதிகாலை இருட்டின் பேரமைதியை கிழித்துக் கொண்டு ‘நான்தான் ஊர்லயே ஃபர்ஸ்டு, தெரியுதா!’ என்பது போல பெரும் டெசிபெலில் ‘க்ரீச் க்ரீச் க்ரீச்’ என்று ஒரு லாரியின் ஏர் ஹார்னை விட அதிகமான அளவில் சத்தமெழுப்புகிறது இன்றைய நாளின் முதல் பறவை. சன்னலுக்கு வெளியே இருட்டில் அது இருக்கும் திசை நோக்கித் திரும்பி ‘லவ்… (READ MORE)

Uncategorized

சன்னலுக்கு வெளியே குட்டி மேகங்கள்

சன்னலுக்கு வெளியே வெள்ளை வெளேர் குட்டி மேகங்களாய் சிவப்பு மலர்களாய் காற்றில் மிதக்கின்றன ஏழெட்டு பட்டாம்பூச்சிகள். கருவேப்பிலை மரத்தில் இட்லி கொத்தைப் போல திட்டுத் திட்டாய் பூக்கள். பரமன் பச்சைமுத்து 26.04.2018

Uncategorized

வளர்ச்சிப் பாதை @திருவண்ணாமலை

🌸🌸 மொத்தம் இரண்டு மணி நேரம் என்று முன்பேயே அறிவித்து நடத்திய வளர்ச்சிப்பாதை இன்று திருவண்ணாமலையில். ஆரணியிலிருந்து சுரேஷ், சத்யா, வேலூர் குடியாத்தத்திலிருந்து சரளா ஆனந்த், திருக்கோவிலூரிலிருந்து நாமதுரை, சென்னையிலிருந்து விஜயகுமார், கார்த்திகேயன் என வேறு ஊர்களிலிருந்தும், போளூரிலிருந்தும், திருவண்ணாமலையிலிருந்து தொண்ணூறு சதவீத மலர்ச்சி மாணவர்களும் என நிறைந்ததிருந்தது வளர்ச்சிப் பாதை. சிரிப்பு, அடி, ஆழம்… (READ MORE)

Uncategorized

unnamed.jpg

அயலூர் சினிமா: ‘பரத் அனே நேனு…’ : பரமன் பச்சைமுத்து

ஒரு மாநிலத்தில் ஆட்சியையும் பெரிய கட்சியையும் தங்களிடம் வைத்திருக்கிறார்கள் உடன்பிறவா சகோதரர்கள் இருவர். திடீரென உடல்நலம் குன்றி மருத்துவமனைப் படுக்கையில் வீழ்ந்த முதல்வர் நண்பர் இறந்து விட , கட்சித் தலைமையை கையில் வைத்திருக்கும் பிரிய சிநேகிதருக்கு நெருக்கடி வருகிறது. பிரச்சினையை சரி செய்யலாம் என்று மறைந்த முதல்வரின் அபிமானத்திற்குரியவரைத் தேர்ந்தெடுத்து தனது கைப்பாவையாக இருக்கட்டுமென்று… (READ MORE)

Uncategorized

, , ,

உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? அப்படியென்றால் உங்கள் திருமணத்தில் இந்தப் பாடல் இசைக்கப் பட்டிருக்கலாம்.

உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? அப்படியென்றால் உங்கள் திருமணத்தில் இந்தப் பாடல் இசைக்கப் பட்டிருக்கலாம். இன்னும் ஆகவில்லையா? உங்கள் திருமணத்தில் இது பாடலாகவோ நாதஸ்வரத்திலோ இசைக்கப்படும். அறுபத்தியேழு ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்தேறும் பெரும்பான்மையான திருமண வைபவங்களில் மண அரங்கிற்கு மணப்பெண்ணை அழைத்து வரும் வேளையில் இதுதான் ஒலிக்கிறது. இன்று வரை மாற்றவே முடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது ‘வாராயென்… (READ MORE)

Uncategorized

மிஷன் இம்பாஸிபிள் : 2

‘டை ஹார்ட்’டின் ஜான் மெக்லைன் பிடிக்குமென்பதற்காக, ‘மிஷன் இம்பாஸிபிள்’ளின் ஈத்தன் ஹண்ட்டை பிடிக்கக் கூடாதா என்ன! ஜான் மெக்லைன் கிழ சிங்கமென்றால், ஈதன் ஹண்ட் அதைவிட இம்மியளவு வயது குறைந்த நவீன தொழில் நுட்பம் தெரிந்த புலி. ‘காக்கி சட்டை’ கமல்ஹாசன் – சத்யராஜ் – ராஜீவ் படகுத் துரத்தல்களை நினைவூட்டும் பைக் துரத்தல்கள், கப்ஸாக்கள்… (READ MORE)

Uncategorized

முத்தத்தி – நீச்சல்

‘பாபா’ திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? எதனை நினைத்தாலும் அது உடனேயே இப்போதே நடந்து விடவேண்டும் என்ற மனநிலை கொண்ட பாத்திரமாகப் படைக்கப்பட்டிருக்கும் ஆஷிஸ் வித்யார்த்தி ஏற்று நடித்திருக்கும் வில்லன் பாத்திரம். ‘இப்போ ராமசாமி’என்ற பெயர் கொண்ட அவர் அடிக்கடி ‘இப்போ…இப்போ… இப்போ!’ என்று பரபரத்துக்கொண்டே இருப்பார். ராமு பெருமாளும், முகுந்தனும் நானும் அந்நாட்களில் கிட்டத்தட்ட இப்போ ராமசாமிகளாகவே… (READ MORE)

Uncategorized

, , , , ,

கண்களுக்கான ஆயுர்வேத சிகிச்சை

கண்களுக்கான முதல் நிலை ஆயுர்வேத மருத்துவம் (கண்களில் ஒரு பாயிண்ட் குறைந்துள்ளது. கண்கள் பொலிவு பெற்றுள்ளன) முடித்து, இரண்டாம் நிலை மருத்துவம் தொடங்கியது இன்று. வைணதீய க்ரதம் ( ஒரு வித நெய்), வர சூரணம் ஆகியவற்றுடன் இனிதே ஆரம்பம் இன்று. கொஞ்சம் கசப்பு! நல்லது தொடக்கத்தில் எப்போதும் கசக்கத் தானே செய்யும்! 🌸🌸😀 –… (READ MORE)

Uncategorized

யாரைக் குற்றம் சொல்ல…

மன்னம்பந்தலில் கல்லூரி விடுதியின் பின்பக்க வேலி திறந்து நடந்தால் வாழைக் கொல்லை. வாழைக் கொல்லையை ஊடறுத்து கொஞ்சம் போனால் எப்போதும் நீரோடும் காவிரி. இப்படியொரு வழியிருக்கிறதென்று எனக்கு ‘கேட்டீ’தான் எனக்குக் காட்டினார். பெண்ணாடம் பழனிவேலு, இன்னும் சிலரோடு நாங்கள் காவிரிக்குள் பாய்ந்து ஊறித் திளைத்து மகிழ்வோம். நீச்சல் தெரியா நெய்வேலி ஜமுக்குப் பாண்டியன் ஆழமில்லா கரையோரம்… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

, ,

‘வாழ்க்கை – ஒரு கொண்டாட்டம்’ – பரமன் பச்சைமுத்து – அண்ணா பல்கலை கழகம் – ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக ஆனந்தம் ஃபவுண்டேஷன்ஸ் நிகழ்ச்சி

மன நிறைவான ஓர் உணர்வெனக்கு! கிராமப்புற ஏழை மாணவர்களின் மேற்படிப்பிற்காக உழைத்து வரும் ஆனந்தம் அறக்கட்டளையின் சார்பாக நிதி திரட்டுவதற்காக ‘வாழ்க்கை – ஒரு கொண்டாட்டம்!’ என்ற வாழ்வியல் பயிலரங்கை செய்தோம், நேற்று மாலை அண்ணா பல்கலைக்கழகத்தின் அரங்கம் ஒன்றில். முன்னூற்றியைம்பது பேர் என்று எப்போதோ செல்வக்குமார் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு அரங்கில் நுழைந்தால் அறுநூற்றியைம்பது… (READ MORE)

Paraman's Program

மனித மன நிமிர்த்திகள்…

ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த், பேட்மிட்டன், டென்னிஸ் என்று தனி மனித ஆற்றலின் எல்லை உடைக்கும் விளையாட்டுக்கள் என்னுள் உற்சாகத்தை ஊற்றி என்னை முழுதும் உயிர்ப்பித்து விடுகின்றன. இந்த மாதிரி நேரங்களில் என்னால் உலகையே மறந்து விடக் கூட முடிகிறது. ஒரு நாள் இவற்றை நேரில் பார்த்து ரசிக்க வேண்டும். எவ்வளவு உழைத்திருப்பார்கள் இந்நிலை கைவர! அடுத்த மனிதனுக்கு… (READ MORE)

Self Help

, , , , , , , , , , ,

கோபி சந்த் – சாய்னா நேவால்

‘இவர் விளையாட்டு வீரங்கனையா இல்லை திரை நட்சத்திரமா!’ என்று பார்க்குமளவிற்கு அழகாக இருக்கும் பாகிஸ்தானின் இளம்பெண் மஹூரை இந்தியாவின் சாய்னா நேவால் முதல் செட்டில் துவைத்து எடுப்பதைப் பார்ப்பது அழகென்றால், அதை விட அழகு கிடைக்கும் சிறு இடைவெளியில் பயிற்சியாளர் கோபி சந்த் கொடுக்கும் திருத்தங்களைப் பார்ப்பது. #CommonWealth2018

Uncategorized

screenshot_20180330-143804791243021.jpg

ஐயய்யப்பா…. உஸ்ஸ்… என்னா வெய்யிலு!’

‘ஐயய்யப்பா…. உஸ்ஸ்… என்னா வெய்யிலு!’ என் அடுக்ககத்தின் அடித்தளத்தில் மின் தூக்கிக்காகக் காத்திருக்கும் ஒரு பெண்மணி அருகிலிருந்த சுவற்றிடம் தன் அங்கலாய்ப்பைக் கொட்டிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டுக் கொண்டே இரண்டாவது மாடி நோக்கி நடக்க படிகளில் ஏறுகிறேன் ‘மிஸ்டர் கூல்’ஆக. திருவண்ணாமலை செங்கத்தின் வெக்கை உமிழும் 41 டிகிரியையே பார்த்தவனுக்கு, சென்னை ஆர் ஏ புரத்தின்… (READ MORE)

Self Help, Uncategorized

, , , ,