Monthly Archive: July 2018

சிவப்பு நிலா

‘குறுக்கே வந்து நின்று எனக்கு வரும் வெளிச்சத்தை மறைத்தாய் இல்லை? போ!’ என்று பூமியின் மீது சினம் கொண்டு சிவந்தது நிலா. #BloodMoon #சந்திரகிரகணம் #சிவப்புநிலா Facebook.com/ParamanPage

Uncategorized

‘சஞ்சு’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பாலிவுட்டின் சர்ச்சை நாயகன் என்று பெயர் பெற்ற சஞ்சய் தத்தின் கதையை வைத்து ராஜ்குமார் ஹிராணி செய்திருக்கும் திரைப்படம் – சஞ்சு. துவக்க காலத்தில் போதையில் சிக்கிய சஞ்சய் தத், வெகு நாட்களுக்குப் பிறகு ஏகே – 56 வைத்திருந்த பயங்கரவாத தடுப்பு வழக்கில் சிக்கி சிறை சென்ற சஞ்சய் தத் என்ற இரண்டு பகுதிகளை… (READ MORE)

Uncategorized

images-12.jpeg

திரை விமர்சனம் – ‘கடைக்குட்டி சிங்கம்’ : பரமன் பச்சைமுத்து

காலம்காலமாய் பார்த்துப் பழகிய அதே குடும்பத்தோடு பாசத்தில் நெகிழும் ஊர்க்கார நாயகன், அவன் வழியில் குறுக்கிடும் காதலும் வில்லனும் என்ற வகை கதைதான். ஆனால் அதை ரசிக்கும் படி கொடுத்த விதத்தில் வெற்றி பெற்று விட்டார்கள். வயலும் வரப்பும் காடும் கழனியும் கூடவே பஞ்சவன் மாதேவி, வானவன் மாதேவி, கண்ணுக்கினியாள், தாமரை மணாள செண்டாளன் போன்ற… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

போர்ட்டோ நோவா தெரியுமா உங்களுக்கு?

ஓர் இடத்தின் அல்லது ஒரு மனிதனின் பெயருக்குப் பின்னே காரணங்கள் இருக்கலாம், விளக்கங்கள் இருக்கலாம், யாருடைய சிந்தனையோ இருக்கலாம். ‘இடுகுறிப் பெயர்’ ‘காரணப்பெயர்’ என்றெல்லாம் பாடங்கள் வைத்துக் கற்பித்த நம் மொழி சொல்லுவதும் இதைத்தானே. ஒரு மொழியில் வழங்கப்படும் பெயரை வேற்று மொழியிலிருந்து வருபவனொருபவன் சரியாக உள்வாங்கிக் கொள்ளாத போது, பெயர் நாறடிக்கப் படுகிறது. அதன்… (READ MORE)

Uncategorized

தி ஜானகிராமனின் ‘கமலம்’ – காலச்சுவடு

ஒரு சிற்றூரின் வயல்களைத் தாண்டிய வாய்க்காலின் மதகில் தன் மாமாவோடு கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து மீன்கொத்தியை பார்க்கும் எம்ஏ படித்த காசு சேர்க்கத் தெரியாத ஒருவன், தன் அனுபவமாக அவ்வூரில் நடந்த நிகழ்வுகளைச் சொல்வதாகத் தொடங்கும் கதை மெள்ள மெள்ள படமாகக் காட்சியாக விரிந்து உச்சத்தில் ‘பொளேர்’ என்ற ஓர் அறையுடன் முடிந்து நிற்கிறது…. (READ MORE)

Uncategorized

கடல்மல்லை

சிறை பிடிக்கப்பட்டு நாடுகடத்தப் பட்ட பார்த்திபனைத் தேடி இளைய குந்தவை தேரில் ஓடிய பாதையில்… சிற்பி மகள் சிவகாமியோடு சிறு வயது சிநேகம் கொள்ள சிறுவன் நரசிம்ம வர்மன் தன் தந்தையோடு குதிரையில் பயணித்த பாதையில்… தமிழிலும் ப்ராக்ருத மொழியிரும் பெரும் புலமை கொண்ட கலைக் காதலன் காஞ்சித் தலைவன் மகேந்திர பல்லவன் பயணித்த பாதையில்…… (READ MORE)

Uncategorized

முடிவற்ற சாலை… எஸ். ராமகிருஷ்ணன்

ரயில் பயணங்கள் பற்றி, பாம்பைப் போல வளைந்து நெளிந்து ஓடும் ரயிலின் வயிற்றுப் பெட்டிக்குள் உண்டு. உறங்கி வசித்துப் பயணிக்கும் அனுபவம் பற்றி ‘வளர்ச்சி’ இதழில் எழுதிய கட்டுரைகளை மீண்டும் கொண்டு வந்து மனதில் நிழலாட வைத்தது, எஸ். ராமகிருஸ்ணனின் தொடர் ஒன்றை இன்று படித்த போது. ஒரிசாவிலடித்த புயலொன்றின் போது மின்சாரமற்ற இருட்டொழுகும் மழையில்… (READ MORE)

Uncategorized

IMG-20180709-WA0108.jpg

ஓங்கி உயர ஆசை – பரமன் பச்சைமுத்து

‘ஓங்கி உயர ஆசை’ – பரமன் பச்சைமுத்து எனது அடுத்த நூல். எழுத்துப் பிரசுரம் / ஜீரோடிகிரி பப்ளிஷிங் வெளியீடு. விரைவில்…. https://m.facebook.com/story.php?story_fbid=10216557528196615&id=1410976678

Paraman's Book

, , , , , ,

அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ முதல் பாகம் முற்றிற்று.

குகவேலனின் திருமணத்திற்கு சில வாரங்கள் முன்பு தொடங்கியது தினமலரில் எனது ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ தொடர். அச்சில் வந்த முதல் தொடரின் பதிப்பைப் பார்க்க, நாகை தஞ்சைப் பதிப்பு தினமலர் தேடி மணக்குடியிலிருந்து பயணித்து சிதம்பரம் வழியே கொள்ளிடம் ஆற்றைக் கடந்து தைக்காலில் ஒரு தேநீர்க்கடையில் போய் வாங்கினோம். தேநீர்க்கடையிலேயே தினமலரை நான் பிடித்துக்… (READ MORE)

Uncategorized

வேம்புகள் அணிவகுக்கும் சாலை

நெடுஞ்சாலையின் இருமங்கிலும் புளியமரங்களைப் பார்த்திருக்கிறேன். தூங்குமூஞ்சி அல்லது ஐரோப்பிய ‘ஃபாரஸ்ட் பயர்’ மரங்களைப் பார்த்திருக்கிறேன். வரிசையாய் தொடர்ச்சியாய் ஆயிரம் வேப்பமரங்களைப் பார்த்ததில்லை. அதுவும் வெறும் வேப்ப மரங்கள் மட்டுமே. பல்லடம் வழியே பொள்ளாச்சி செல்லும் வழியில் கௌசிகா நதியையும், நொய்யலையும் கடந்ததும், நெகமத்திற்கு சற்று முன்னே வருகிறது இந்த வேம்பு அணிவகுக்கும் இடம். எவர் இதைச்… (READ MORE)

Uncategorized

நாம் வைத்த கன்றொன்று நம் கண் முன்னேயே வளர்ந்து நிற்பதைக் காணுமனுபவம் அலாதியானது

நாம் வைத்த கன்றொன்று நம் கண் முன்னேயே நெடுநெடுவென்று வளர்ந்து நிற்பதை பார்க்குமனுபவம் அலாதியானது. ஒரு பச்சிளம் குழந்தையைப் போல நம் கைகளில் தவழ்ந்த கன்று இன்று வேரூன்றி வளர்ந்து தலை(தழை)யசைப்பதைக் காண்கையில், தோளுக்கு மேலே வளர்ந்து நிற்கும் பிள்ளையைப் பார்க்கும் தகப்பனைப் போன்றொரு கிளர்ச்சி வருகிறது. நகரையே நாசம் செய்த வர்தாப் புயலின் மீது… (READ MORE)

Uncategorized

நாடுகளிலுள்ளோரின் நாக்குகளின் வழியே நடக்கட்டும் தமிழ்…

ஒரு மொழி, எத்தனை வளமுள்ள மொழியானாலும் அது வழக்கிலிருந்து ஒழிந்து போனால் சாவை நோக்கிச் சரிந்து விடும். செம்மொழியானாலும் எம்மொழியானாலும் பேசா மொழியானால் அவை வாழா மொழியாகி வீழும். இலக்கியங்களும், காப்பியங்களும், நூல்களும், கல்வெட்டுக்களும் மொழியின் செழுமையை மொழியின் பழமையை காலம் தாண்டிக் காட்ட உதவும். மொழியினுள்ளே மாந்தரை ஈர்க்க உதவும், நனைந்து திளைத்து மகிழச்… (READ MORE)

Uncategorized

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆடிய ஆட்டம்

😳😳😳 பத்து ஆண்டுகளுக்கு முன்பு பரமன் பச்சைமுத்து பெங்களூருவில் ஒரு விளையாட்டுப் பையன். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மேடையில் இருப்பான். அதிகம் ‘பப்ளிக் ஸ்பீக்கிங்’ போட்டிகள்தான் என்றாலும், ஆட்டம் பாட்டம் என எதையும் தவறவிட்டதில்லை. அல்மாமாட்டர் நாட்களில், ஏதோ ஒரு பேட்ச் பட்டமளிப்பு விழாவில் பெங்களூரில் ஆடிய காணொளித் துண்டின் இணைப்பு கிடைத்தது இப்போது. சிறிது… (READ MORE)

Uncategorized

இந்து தமிழ் திசை பெயர் மாற்றம்

பன்னெடுங்காலமாக மக்கள் வாழ்வில் கலந்து விட்ட ஆங்கில நாளிதழ், புதிதாக வந்த அதன் தமிழ் தினசரி… இரண்டும் ஒரே பெயரில் என்ற போது துவக்கத்தில் பெயர் குழப்பம் வரவே செய்தது. குழப்பம் தவிர்க்க மக்களாகவே ‘இந்து தமிழ்’ என்று சொல்லத் தொடங்கினர். இரண்டு குழுமங்களாகப் பிரிக்கும் போது, இதை கருத்திலெடுத்த நிர்வாகத்தைப் பாராட்டுகிறோம். நடுப்பக்கம் எப்படியிருக்க… (READ MORE)

Uncategorized