Yearly Archive: 2020

மக்கள், பல்லுயிர் சூழல் முக்கியமல்லவா!

மத்திய அமைச்சர் தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளோடு ஒன்றாக இணைந்து அவர்களது உணவை கரண்டியால் கிளறியும் உண்டும் மகிழ்கிறார். இரண்டு சட்டங்களை மாற்ற ஒத்துக்கொண்டிருக்கிறார் என்றும் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறதென்றும், அடுத்த கட்ட பேச்சு வார்த்தை சில நாட்களில் தொடரும் என்றும் இன்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. ‘விவசாயிகள்… விவசாயிகள்!’ என்று உணர்ச்சி வசப்பட்டவர்கள் சிலர் அமைதியாயிருப்பர்…. (READ MORE)

Politics

wp-1609194706920.jpg

சிவ வழிபாட்டு மாலை

பதிப்புரை சிவ ஆகமங்களின்படி பூசைகள் செய்த, செய்து கொடுத்த என் தந்தை மு. பச்சைமுத்து அவர்கள், எல்லா நிகழ்வுகளிலும் திருமுறைகள் ஓதினார், ஓதச் செய்தார், ஓதப்பட வேண்டுமென்று விரும்பினார். கோவில் குடமுழுக்கு, வேள்வி, வீட்டில் பூசை, இறப்பு என எல்லா நிகழ்வுகளுக்கும் சரியான  திருமுறை, பஞ்ச புராணப் பதிகங்களைத் தேர்ந்தெடுத்து நிகழ்த்தித் தருவார்.அவர் ஆசைப்பட்டு செய்த… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , , ,

20201228_072125.jpg

17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னுமொரு நூல்…

பெங்களூருவில் ஐடி இஞ்சினியராக இருந்த காலத்தில், அப்பாவிற்கு மணி விழா வந்தது (60 வயது). அப்பாவும் அம்மாவும் முறைமைகள் செய்து சிவலிங்கம் கட்டிக் கொள்ள முடிவெடுத்து, ‘லிங்காயத்’ சமூகம் அதிகம் வாழும் கர்நாடகாவிலிருந்து ‘செச்சை’ (சிவலிங்கத்தை வைத்து மூடி மார்பில் அணிய உதவும் வெள்ளியிலான கூடு) வாங்கி வரச் சொன்னார். அப்பா கொண்டாடி மகிழ்வார் என்பதற்காகவே,… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , ,

வைகுந்த ஏகாதசி அடையாறில்

பலவிதமான மக்கள் ஓரிடத்தில் குவிந்து இருப்பதை வெறுமனே கவனிக்கப் பிடிக்கும் எனக்கு. எல்லோரும் குளித்து உடை திருத்தி ஒரே ஒழுங்கோடு மனது குவித்து இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் உற்சாகம் வராதா என்ன! அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் இன்று காலை அந்த சிறப்பு உற்சாகம் எனக்கு. வைகுந்த ஏகாதசி, பரம்பத வாசல் திறப்பு என… (READ MORE)

Uncategorized

ராம்ஜீயை நினைத்துக் கொள்வேன்…

‘பரமன், ஒரு எடத்துக்குப் போறோம்! வாங்க!’ ராம்ஜீயின் அழைப்புகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்.  லதா கிருஷ்ணசாமியும், சாமுவேல் மேத்யூவும், சில நேரங்களில் ஏஆர்கேயும் சேர்ந்து கொள்ள, இணைந்து போவோம்.  டிசம்பர் என்றால் கச்சேரி சீசன். ‘அந்நியன்’ திரைப்படத்தில் வருவது போல சபா மேலாளர்கள் சிறிய கலைஞர்கள், பெரிய கலைஞர்கள் என பிரித்து நேரம் ஒதுக்கி நிர்வகித்து… (READ MORE)

Margazhi

, , , , , , , , ,

wp-1608481927926.jpg

தூங்குவது போல பாசாங்கு செய்து நடித்திருக்கிறீர்களா?

குட்டிப் பையனாக இருக்கும் போது வீட்டுக்கு யாரேனும் விருந்தினர்கள் வந்திருக்கும் வேளையில், அவர்கள் முன்பு வெறுந்தரையில் கண்ணை மூடிக் கொண்டு உறங்குவது போல பாசாங்கு செய்து நடித்திருக்கிறீர்களா? கண்களை மூடிக்கொண்டு, ‘நம்மள பத்தி ஏதாவது பேசறாங்களா!’ என்று காதுகளைத் திறந்து வைத்துக் கொண்டு கிடந்திருக்கிறீர்களா, நீங்கள்?  ‘அக்கா, இவன் தூங்கனாலும் கண்ணு மட்டும் அலையிது பாருங்கக்கா!’… (READ MORE)

Margazhi

, , , , , ,

தில்லை நடராசரின் தேர் திருவீதியுலா வரட்டும்

ஒரு புறம் மார்கழித் திருவாதிரை தில்லை நடராசர் உற்சவத்திற்கு கோவில் தயாராகிறது. அதற்கு முந்தைய நாள் நடராஜர் தேரை இயக்குவதற்கு கொரோனாவைக் காரணம் சொல்லி அனுமதி மறுக்கப் படுகிறது.  வடம் பிடித்து இழுப்பதில் தொற்று வந்துவிடும் எனக்கூறி என்எல்சி பொறியாளர்களை வைத்து தேரை இயந்திரங்கள் மூலம் இழுக்க வைக்க முடியுமா என்று மதிப்பீடு செய்வதாக தகவல்… (READ MORE)

பொரி கடலை

, ,

images-18.jpeg

கார்த்தி சுற்றிருக்கிறீர்களா!

‘பன்னீர் மாதிரி கார்த்தி சுத்தனும்’ ‘பன்னீரோட கார்த்தியில மட்டும் எவ்வளோ நல்லா நெருப்பு பொறி வருது!’ ‘ஒரு நாளு நானும் பன்னீரு மாதிரி சுத்துவேன்’ எனக்கு மட்டுமல்ல மணக்குடி சிறுவர்களில் பலர் இவ்வகை ஏக்கத்தை கண்ணில் தேக்கியே ‘கார்த்தி’ சுற்றுவர். உறுதியாகவும் நீள்  வடிவமும் கொண்ட பனம் பூவை பறித்து வந்து,  உதிர்ந்துவிடாமல் இருக்க அதைச்… (READ MORE)

Margazhi, Uncategorized

, ,

சில கணங்கள் கிடைக்கப்பெற்றாலும்…

‘சென்னை என்பது ஒரு நகரமல்ல, வெவ்வேறு உலகங்களைக் கொண்ட இரு நகரங்கள்’ என்று பல ஆண்டுகளுக்கு முன்பு தனது ‘புதுப்பேட்டை’ திரைப்படத்தின் கதைக்களனைப் பற்றிப் பேசுகையில் விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார் இயக்குநர் செல்வராகவன்.  என் உணர்வுகளை வார்த்தையாகப் பிரதிபலித்தன அவரது வார்த்தைகள்.  பிழைப்பிற்காக முதலில் வந்த போது அறிந்த சென்னையின் உலகமும், பெங்களூரு – கலிஃபோர்னியா… (READ MORE)

Margazhi, பொரி கடலை

, , , ,

பசுஞ்சாண பூசணிப்பூ

நம் வீட்டு வாசலில் திடீரென்று கையளவு பெரிய மஞ்சள் பூ ஒன்று முளைத்து சிரித்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?  அதுவும் நீங்கள்  அரைக்கால் சட்டையணியும் சிறுவன் என்றால்! அதிகாலை வாசல் திருத்தி தெருவடைக்கும் வகை பரந்து விரிந்த பெரும் மாக்கோலம் இட்டு அதன் ஓர் ஓரத்தில் பசுஞ்சாணியில் பாத்தி கட்டி அதன் குழிவில் ஆலக்கரைசலை… (READ MORE)

Margazhi, பொரி கடலை

, ,

சில மனிதர்கள்…

‘இந்நேரம் பாடத் தொடங்கியிருப்பார்…!’ அதிகாலை நீராடி வேட்டியுடுத்தும் போதே அப்பா நினைவுதான். மார்கழி என்றால், ஊரை எழுப்பும் மணக்குடியின் சேவலையே அப்பாவின் பதிகம்தான் எழுப்பும். ஐந்து மணிக்கு முன்னேயே ஆர்மோனியத்தின் இசையும் அப்பாவின்  ‘போற்றியென் வாழ் முதலாகிய பொருளே… புலர்ந்தது பூங்கழற்கிணை துணை மலரடி…’ பாடலும் மணக்குடியின் வெளியில் நிறையும். ஐந்தரை மணி பேருந்துக்கு நிற்பவர்கள்,… (READ MORE)

Margazhi, பொரி கடலை

சில கதவுகள் திறக்கின்றன

பரமன் ரெண்டு நிமிஷம் பேசனும். உங்க கிட்ட ஒண்ணு சொல்லனும்!’ என்று அழைத்த மலரவன், சென்னை பெருநகரை தூய்மையாக வைத்திருக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்தின் உயர்நிலை இரண்டாம் கட்ட பொறுப்பு அதிகாரி. ‘சொல்லுங்க! ஆமாம் இன்னைக்கு வீட்லதான் இருக்கேன். சொல்லுங்க!’ ‘எங்க ஜோன்ல துப்புறவு பணியாளர் வேலைகள் காலி இருந்துச்சி. அதுக்கு,  மேல பேசி ட்ரான்ஸ்ஜென்டர… (READ MORE)

பொரி கடலை

, ,

திருவண்ணாமலை வளர்ச்சிப்பாதை

கொரோனா தீ நுண்மிக் காலம் என்பதே தெரியாத அளவிற்கு எப்போதும் போல அரங்கை நிறைத்து வந்தமர்ந்திருந்தனர் மலரவர்கள் திருவண்ணாமலை வளர்ச்சிப் பாதைக்கு. கூடுதலாக அனைவரும் சுவாசக்கவசம் அணிந்திருந்தனர்.  ஆண்டாள் சிங்காரவேலர் அரங்கின் நீள் வடிவ அமைப்பு தனி்நபர் இடைவெளிக்கு மிக உகந்ததாக அமைந்திருந்தது. சென்னை வளர்ச்சிப்பாதையில் பதிவு செய்து இடம் பிடிக்க முடியாமல் நேராக திருவண்ணாமலை… (READ MORE)

Paraman's Program

உறவினர் நிகழ்வு

உறவினர்கள் நிகழ்வில் கலந்து கொள்வதில் உள்ள நல்ல விஷயம் நம் ஆட்களை ஒன்றாக சந்திக்க முடியும். உறவினர் நிகழ்வு ஒன்றில் சற்று முன்பு எடுத்தது் ##Somasippadi ##Gangashree 13.12.2020

Uncategorized

கேள்வி ஒன்று

உள்நாட்டில் பெட்ரோல் விலையைத் தீர்மானிப்பது யார்? எதனடிப்படையில் அது முடிவு செய்யப்படுகிறது?எண்ணெய் / எரிபொருள் விற்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பே அதை தீர்மானிக்கின்றன என்பதைத் தாண்டி இவற்றில் எனக்கு ஆழ் அறிவில்லை. உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் விலை குறையும் போது உள்நாட்டில் விலை குறையும், அது கூடும் போது உள்நாட்டில் விலை கூடும் என்கிறார்கள். … (READ MORE)

Politics

சபாநாயக சந்திப்பு

சென்ற ஆண்டு ‘டிசம்பர் 28 – 91 பேட்ச் – சவேரா மீட்’டிற்குப் பிறகு ஓராண்டு கழித்து சபாநாயகத்தை சந்தித்தேன் இன்று. திருவண்ணாமலை வருவதற்கு முன்பே சபாவோடு சில நிமிட சந்திப்பு என்பது முடிவு செய்யப்பட்டது. ‘ரத்தபூமி’ வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இருப்பதால் தினமும் தொடர்பிலிருப்பதால், ஓராண்டு கழித்தே சந்திக்கிறோம் என்ற உணர்வே இல்லை. மன்னம்பந்தல் கல்லூரி… (READ MORE)

AVCCP

பஞ்ச புராண திரட்டு

சிவ ஆகமம் படி பூசைகள் செய்த, செய்து கொடுத்த, செல்லுமிடமெல்லாம் திருமுறைகளை பாடிய, தன்னால் முடிந்தவரை அடுத்தவருக்குக் கடத்திய என் தந்தையின் முதலாம் ஆண்டு நாள் (குருபூசை என்போம்) வருகிறது சில தினங்களில். சிவபூசனை செய்வோர், இறைவனை வழிபட விரும்புவோர் பஞ்ச புராணங்களை திருமுறை பதிகங்களை பாடி வழி பட விரும்பினால், அவர்களுக்கு உதவ சில… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

ஓதுவாரோடு வீதியில் நடந்தது

இரண்டாண்ணுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வில் என்னை அதிரச் செய்த காஞ்சிபுரத்து நிகழ்வு, இன்று திரும்பவும் அதிர வைக்கிறது. மலர்ச்சி மாணவர் கீர்த்திநாதனின் கந்தன் எஸ்டேட்டின் புதிய லே அவுட் திறப்புவிழா மரம் நடுதலுக்கு போனபோது,நீரணிந்த சிவநெறி ஓதுவார்கள் இருவர் திருமுறைகளை ஓதிய படியே நம் இருபக்கமும் நடந்து வரும் படி செய்திருந்தார். ‘ஐய்யோ, இது ஓவர்…. (READ MORE)

பொரி கடலை

ஊடகங்கள் செல்லட்டும் கடலூர் சிதம்பரம் வயல்களுக்கு

நிவர் புயல் வீசப்போகிறதென்றதும் அதிகாரிகள், பாதுகாப்புப் பணிகள் என அரசு நல்ல முன்னேற்பாடுகளோடு நின்றது. எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் அவர்கள் மழைக்கோட்டு அணிந்து கொண்டு மழைநீரில் இறங்கி நீர் சூழ்ந்த பகுதிகளுக்கே சென்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மழையில் செம்பரம்பாக்கம் ஏரிக்குப் போனார். ஸ்டாலின் அவர்கள் இறங்கி செய்வது எப்போதும் அரசிற்கு அழுத்தம் தரும், அது… (READ MORE)

Politics

ரஜினி வருகிறாராமே!

‘ரஜினி காந்த் ஒரு நல்ல நடிகர். அவர் பாட்டுக்கு நடிச்சிட்டு போகட்டும்’ ‘இங்கல்லாம் வரக்கூடாது. வந்தா செஞ்சி வுட்ருவோம்! ஹஹ்ஹாஹ்ஹா!’ என கிண்டலும் கேலியும், அவரை ஒரு டம்மி பீஸ் என்றெல்லாம் மீம்ஸ் தட்டி எகத்தாளமாக சிரித்தவர்கள் என்ன செய்வார்கள் இப்போது என்பதை இனி பார்க்கலாம். ‘நீ வரக்கூடாது. அவரு வரக்கூடாது. தமிழன் இல்ல. மராட்டி,… (READ MORE)

Politics

, ,

வேட்டி மறைப்பிற்கு இருபுறம் நின்றபடி திருமணம்

நாதஸ்வரமும் தவிலும் இசைக்கத் தொடங்கிய உடனேயே ஒரு இடமானது நல்நிகழ்வுக்குத் தயாராகிவிடுகிறது.  லாஷ்கர காந்தார தேசத்திலிருந்து படையெடுத்து வந்து டெல்லியை ஆட்சி செய்த சுல்தான்களுக்கு நாதஸ்வர இசை புதியதாகவும் இடைஞ்சலாகவும் இருந்ததென்றும் மாலிக்காபூர் மட்டும் அதில் மயங்கிக் கிடந்தான் என்றும் சாகித்ய விருது பெற்ற தனது ‘சஞ்சாரம்’ புனைவில் எழுதியிருப்பார் எஸ்ரா.நாதஸ்வரமும் தவிலும் மிக எளிமையான… (READ MORE)

Uncategorized

பாஜக தேர்தல் கணக்கு

சென்னை வந்த போது முதல்வர் வரவேற்க, திரும்பிப் போகும் போது துணை முதல்வர் வழியனுப்ப என்று நிகழ்ந்த அமித்ஷாவின் தமிழக வருகை இரண்டு சங்கதிகளை வெளிப்படையாக செய்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும், அதிமுக தங்கள் வசதிக்கு பாஜகவை நடத்த முடியாது. ‘திமுக எதிரி பாஜக’ என்று நிலையை தொடங்கி வைத்தாயிற்று எதிர்காலக் கணக்கை குறிவைத்து…. (READ MORE)

Politics

செப்பரம்பாக்கம் திறந்தால் நல்லது

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றி நகைப்பு மீம்ஸ் போடுவோருக்கும், அதைக் கண்டு பீதியடைவோர்க்கும்… வணக்கம். ஏரியைத் திறந்து விட வேண்டும். திறந்து விடுவதே நல்லது. 2015ல்…ஒரே நாளில் 50cm மழை பெய்து ஏரி நிரம்பி உடைந்தது. இன்று 2020ல்…தற்போது வரை 20cm பெய்துள்ளது. செம்பரம்பாக்கத்தை இப்போதே திறந்து கொஞ்சம் நீரை வெளியேற்றுவது நல்லது. ஏரியையும் மக்களையும்… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

மலர்ச்சி வகுப்பில் நேரடியாய் அமர்ந்து அமிழ்வது ஓரனுபவம்!

சோகம், வலி, ஏமாற்றம் என்றுஅழுகையில் பல்வேறு வகைகள் உண்டு.  தனக்கு நேர்ந்ததை நினைவு கூர்ந்து உணர்ந்து வருவது ஒரு வகை அழுகை.  தனக்கு எதுவும் நடக்காத போதிலும், நல் ஆழமான உணர்ச்சியின் மிகுதியாக பொசுக்கென வெளிப்படும் நேரிய அழுகை பிறிதொரு வகை. இவ்விரு வகையும் உணரப்பட்டது சென்ற சனிக்கிழமை ‘வளர்ச்சிப்பாதை’யில். உறவுகள் பற்றிய வளர்ச்சிப்பாதை சிலரை… (READ MORE)

Uncategorized

wp-1606070319625.jpg

‘சூரரைப் போற்று’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து.

‘ஒரு கர்நாடக பிராமணரை மதுரையின் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பெரியாரிய மனிதராக காட்டியிருப்பது நியாயமா?’ ‘ஏர்ஃபோர்ஸ்ல இப்படியா நடக்கும்?’ போன்ற கேள்விகளை எழுப்புகிறவர்கள் படத்தின் தொடக்கத்தில் போடப்பட்ட வரிகளையும் சில காட்சிகளின் போது இடப்பக்க மூலையில் போடப்படும் வரிகளையும் சரியாக கவனிக்கவில்லை என்பது புரிகிறது. மேற்கண்ட கேள்விகளை மனதில் வைத்துக் கொண்டே நீங்கள் படத்தைப் பார்த்தாலும், உங்களை… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , , , , ,

அடிக்கடி தேர்தல் வரட்டுமேயென்கிறது அடிமனது

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி, விடுதிச் செலவை அரசே ஏற்கும், சுழல் முறையில் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் முதல்வர். இப்படியொன்று நடப்பதற்கு காரணமானவர் மு.க.ஸ்டாலின் என்பதை முன் வைத்தே ஆக வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என ஸ்டாலின் அறிவித்ததன்… (READ MORE)

Uncategorized

காவலர்களுக்கு ஒரு நாள் ஓய்வு…

காவல்துறையில் பணி புரிவோருக்கு சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்று சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் செய்துள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது. (சேலத்திலோ எங்கோ ஒரு காவல் ஆணையர் இதை முன்பு முயன்று பார்த்ததாக நினைவு) காவல்துறையினரின் மனவழுத்தத்தைக் குறித்து எழுதி மனு தாக்கல் செய்த அந்த மனிதருக்கு நன்றி.அதை விசாரித்து… (READ MORE)

பொரி கடலை

wp-1605512815279.jpg

‘வைரமுத்து சிறுகதைகள்’ – நூல் விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

இருநூறு பக்க நாவல் எழுதுவது எளிது, அதை வெட்டிச் சுருக்கி சிறுகதையாக்குவது பெருங்காரியம் எனும் பொருள்பட சுஜாதா சொல்லியிருந்தார் எப்போதோ.  ஒவ்வொரு சிறுகதையும் உண்மையில் ஒரு நாவலுக்கான உள்ளடக்கமே.  ஒரு பாத்திரம் அல்லது சில பாத்திரங்கள், ஒரு நிகழ்வு இவற்றை வைத்துக் கொண்டு சில பக்கங்களில் வாசிக்கும் வாசகனுக்குள் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், அனுபவம் தர… (READ MORE)

Books Review

, , , ,

சென்னை நிலத்தடி நீர் உயர்வு…

அக்டோபரில் பெய்ய வேண்டிய அளவுக்கு குறைவாகவே பெய்துள்ளது மழை என்ற போதிலும் சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பகுதிவாரியாக உயர்ந்துள்ள அளவு வெளியாகியிருக்கிறது. கோயில் குளங்களை, ஏரிகளை, பயன்படுத்தாத கிணறுகளை என நீர்நிலைகளை மழை நீர் சேமிப்பிற்காக செப்பனிட்ட மாநகராட்சியின் பணிக்கு கிடைத்த பரிசு இது. வீடுகள், அடுக்ககங்கள், கட்டிடங்கள், தொழிற்சாலைகளில் மழைநீர் சேமிப்பு… (READ MORE)

பொரி கடலை

, , , ,

பளபள முகம்

‘க்வாலியர்…!’ பாவாடை மாமாவைப் பற்றிப் பேசுவதானால் ராமலிங்கம் சித்தப்பா சொல்லும் முக்கிய வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். தெரிந்த மனிதர்களையும் அறிந்து கொள்ள சிலர் உதவுகிறார்கள். இளம் பிராயத்தில் நான் விரும்பி நெருங்கி இருந்தது ராஜவேல் சித்தப்பாவோடும் ராமலிங்கம் சித்தப்பாவோடும்தான். ராமலிங்கம் சித்தப்பாவுக்கு பாவாடை மாமா என்றால் பெருமை, மதிப்பு. ராமலிங்கம் சித்தப்பாவால் பாவாடை மாமா மீது… (READ MORE)

Uncategorized

முழுமலர்ச்சி Batch 49

இரண்டு தொலைபேசிக் கவுன்சிலிங்கள், பிசினஸ் பக்கம் கட்டுரை எழுதியது, ஒரு வழிகாட்டல் உதவி என்பதைத் தாண்டி வேறு சில கூடுதல் நிகழ்வுகளாலும் இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைந்தது. இறைவனின் அருளால், முழுமலர்ச்சி திரள் 49 தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது என்பது நல்ல நிகழ்வு. இரண்டாவது வகுப்பான இன்றே மனம் விட்டு வாய் விட்டழுது பகிர்வு… (READ MORE)

Uncategorized

மு பச்சைமுத்து அறக்கட்டளை 10வது அன்னதானம்

🌸🌸 🌸 இன்று ( ஐப்பசி மாதம் ) மிருகசீரிடம். வடபழனி சிவன் கோயில் தெருவிலும், இன்னும் சில இடங்களிலும்தந்தையின் பெயரால் செய்யப்படும் 10வது அன்னதானம் நிறைவேற்றப்பட்டது சில மணி நேரங்களுக்கு மழையை நிறுத்தி உணவு பெறுவோருக்கும் நாம் வழங்குவதற்கும் ஏதுவாக வசதி செய்து தந்தான் இறைவன். இன்று மதிய உணவு வழங்கப்பட்டது வாழ்க! :மு…. (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

வண்டலூர் ஏரி உயிர் பெறுகிறது

102 ஏக்கர் பரப்பளவுள்ள 100 ஏக்கர் விவசாயத்திற்கு பாசனம் தந்த வண்டலூர் ஏரி, பொது மக்கள் குப்பைகளை கொட்டி வந்ததாலும் வண்டலூர் ஊராட்சி குப்பையைக் கொட்டி எரித்ததாலும்(!!!) தனியார் ஆலைக்கழிவுகள் கொட்டப்பட்டதாலும் துர்ந்து 60 ஏக்கர் விவசாயப் பானத்திற்கு மட்டும் அளவிற்குச் சுருங்கிப் போனது. இந்தியன் சுற்றுச்சூழல் அறக்கட்டளை என்ற தனியார் நற்சங்கம் இறங்கி வேலை… (READ MORE)

Uncategorized

திறந்திருக்க வேண்டாம் திரையரங்குகளை

மெரீனா கடற்கரை, தி நகர் ரெங்கநாதன் தெரு என பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. பள்ளிகள் 16ஆம் தேதியிலிருந்து  திறக்கலாம், புறநகர் ரயில்கள் ஓடலாம் என்பனவும் தளர்வுகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. அரக்கோணத்திலிருந்து சென்னைக்கு நேரடி பேருந்தும் இல்லாமல் புறநகர் ரயில்களும் இல்லாமல் தவித்த சிறு குறு வியாபாரிகளுக்கு இது நற்செய்தி. பள்ளிகளைப் பொறுத்த… (READ MORE)

Uncategorized

இலங்கை மஞ்சள் மூட்டைகள்

மீன் பிடி நாட்டுப் படகில் நேற்றும், இலங்கைக்குக் கடத்த முயன்ற 2,000 கிலோ மஞ்சளை (73 மூட்டைகள்) பறிமுதல் செய்திருக்கிறார்கள் ராமேசுவரத்தில் என்று செய்திகள் வந்துள்ளன. இது வரையில் 8,000 கிலோ பிடிக்கப்பட்டுள்ளனவாம். சமீபமாக அடிக்கடி ‘இலங்கைக்கு மஞ்சள் மூட்டை கடத்தல்’ வகை செய்திகள் வருகின்றனவே! 😯

Uncategorized

வந்து விட்டது வடகிழக்குப் பருவமழை

வானகச் சிறுவர்கள் சிலர் ஊரளவு பெரிய சல்லடையொன்றின் மீது வாய்க்காலின் மதகைத் திறந்து நீரை விட்டது போல பெய்து கொண்டேயிருந்தது மழை.அதிகாலை மூன்றுக்கு வெட்டிய தொடர் மின்னல்களின் வெளிச்சமும் இடித்த பேரிடிகளும் அப்போதிலிருந்து காலை ஏழு வரை அடித்த மழையும் மிரள வைத்தன. வானியலாளர்கள் கணித்த படி வட கிழக்குப் பருவமழை தொடங்கி விட்டது நகரங்களின்… (READ MORE)

Uncategorized

wp-1603905485062.jpg

கண்ணே நீ கமலப்பூ…

‘அன்னமிடுவாருண்டோ அனாயாதையான இந்த ஏழை அரும் பசிக்கு… அன்னமிடுவாருண்டோ…’ இந்தப் பாடலை, தான் நடத்தும் ‘காரக்காலம்மையார்’ வில்லுப்பாட்டில் என் தந்தை பாடும் பாங்கை ஒரு முறை நீங்கள் கேட்டிருந்தால், மறக்கவே முடியாதபடி மனதினுள்ளே ஓடி வந்து ‘பச்சக்’கென்று ஒட்டிக்கொள்ளும். ‘வள்ளித் திருமணம்’ கதையில் குறிஞ்சித் திணை வயலில் வள்ளிக் கிழங்குத் தோட்டத்தில் வளர்ந்த குழந்தை வள்ளியை… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , ,

puththam puthu kaalai

‘புத்தம் புது காலை’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

நாடு முழுக்க ஒரே ஊரடங்குதான் என்றாலும் ஒவ்வொருவருக்குமான ஊரடங்கும் அதன் தாக்கங்களும் வேறுவேறுதான் உண்மையில். நாடு தழுவிய ஊரடங்கை பாரதப்பிரதமர் அறிவிக்கும் வேளையில் ஐந்து வேறு வேறு இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து தமிழின் முக்கிய ஐந்து இயக்குனர்கள் குறும்படமாக இயக்கி ஐந்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே படமாக – ‘புத்தம் புது காலை’ என்று… (READ MORE)

Manakkudi Talkies

, ,

wp-16029283386754784143118184582684.jpg

‘முதற்கனல்’ – வெண்முரசு – ஜெயமோகன் : பரமன் பச்சைமுத்து

நூலைப் பற்றிப் பேசுவதற்கு முன் ஒரு பெரும்வியப்பை முதலில் வெளிப்படுத்திவிடுவோம். 2014ல் தொடங்கி 7 ஆண்டுகளில் 26 பாகங்களாக 25,000 பக்கங்களில் தமிழின் ஒரு பெரும் நாவலை (உலகின் பெருநாவல்களில் ஒன்று என்கிறார்கள், சரியாகத் தெரியவில்லை நமக்கு) வடித்துத் தள்ளியிருக்கும் நூலாசிரியர் ஜெயமோகனை எண்ணுகையில், ‘ஒரு பாகத்தை சரியாக ஆழ்ந்து வாசித்து முடிக்கவே இவ்வளவு நாள்களாகிறதே… (READ MORE)

Books Review

, , , , , , ,

IMG-20201017-WA0104.jpg

ஓர் ஆசிரியனுக்கான ஓர் உண்மையான பரிசு

கவின்மொழியாலும் குத்தாலிங்கத்தாலும் பரிந்துரைக்கப்பட்டு மலர்ச்சிக்கு வந்த பெண்மணியா இவர் என வியக்கவே செய்கிறேன். மாதத்திற்கொரு முறை கண்ணீரும் கம்பளையுமாய் கவுன்சிலிங் வேண்டி மலர்ச்சி அலுவலக கதவை தட்டிய பெண்மணி, எந்த வகுப்புகள் நிகழ்ச்சிகள் வந்தாலும் மலர்ச்சியோடு கலந்து வாலண்ட்டியராகவும் வளர்ச்சி இதழோடும் பயணித்து அழகாக வளர்ந்து நிற்கிறார். சமீபத்திய 10 பேட்ச்களில் முழுமலர்ச்சி செய்தவர்கள், உங்கள்… (READ MORE)

Paraman's Program, Self Help, VALARCHI Tamil Monthly

, , , , , ,

தாகம் தீர்க்கும் ஆந்திரத்திற்கு நன்றி

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்க் கொடை தந்து சென்னை மக்களின் அடுத்த ஐந்து மாத குடிநீர்த் தேவையை தீர்த்து வைத்த ஆந்திரத்திற்கு நன்றி! பிரார்த்தனைகள்! வாழ்க! KrishnaWater KrishnaRiver Chennai Facebook.com/ParamanPage

Uncategorized

wp-16023323413513965127511241191532.jpg

யிப் மேன் – பெரும் மாஸ்டர்

யிப் மேன் மிகப்பெரிய மாஸ்டர். நம் தலைமுறையினரின் வாழ்வு தொடங்கிய காலத்தில், நெருப்புச் சக்கரமென சுழன்று வெம்மையும் ஒளியையும் தந்து அடங்கிங்கொண்டிருந்தார். தன்னுள் எழுந்த தீரா ஒளியினாலும் ஆர்வத்தாலும் தான் கற்ற பாரம்பரிய சீனக் கலையான வின்ச்சுன்னை உணர்வு வழியில் மெருகேற்ற முயன்றதில், தான் குருவாக மதித்தவராலேயே தனது மனமுவந்த பள்ளியிலிருந்து வெறுத்து விலக்கப் பட்டவர்…. (READ MORE)

பொரி கடலை

, , ,

நீர்க்கோழி்

கடற்கரையில் படுத்துக்கொண்டு தலையை மட்டும் மணலுக்குள் புதைத்துக் கொண்டு கிடப்பவனைப் போல உடலை நீரின் மேலே மிதக்க விட்டபடி கழுத்தை மட்டும் வளைத்து நீட்டி நீருக்குள் விட்டு இரைகளைத் தேடிப்பிடிக்கும் நீர்க்கோழியைக் கண்டிருக்கிறீர்களா? நான் முதன்முதலில் நீர்க்கோழியைப் பார்த்தது மணக்குடியின் பாப்பாக் குளத்தில்தான். மொத்த ஊரும் பயன்படுத்திய அந்தக்குளம் நீர் நிறைந்து பனை கருக்குப் போன்ற… (READ MORE)

Uncategorized

மு பச்சைமுத்து அறக்கட்டளை : 9 வது அன்னதானம்

இன்று ( புரட்டாசி மாதம் ) மிருகசீரிடம். வடபழனி சிவன் கோயில் தெருவிலும், இன்னும் சில இடங்களிலும்தந்தையின் பெயரால் செய்யப்படும் 9வது அன்னதானம் நிறைவேற்றப்பட்டது இன்று மதிய உணவு வழங்கப்பட்டது வாழ்க! :மு. பச்சைமுத்து அறக்கட்டளை பரமன் பச்சைமுத்து08.10.2020

மு பச்சைமுத்து அறக்கட்டளை

கொரோனா : ட்ரம்புக்கு புது மருந்து

அமெரிக்க மருத்துவர்கள் உறுதி செய்யாத போதும், ‘ஹைட்ராக்ஸிகுளோரோகுயீன்’தான் கொரோனாவிற்கான மருந்து, இந்தியப் பிரதமரை அழைத்து உடனடியாக அந்த மருந்தை அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும் என்றெல்லாம் பெரும் ஒலி எழுப்பிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் கொத்துக் கொத்தாய் கோவிட் தீ நுண்மி தொற்றால் செத்து வீழ்ந்தபோதும், ‘சீட் பெல்ட்டா… அதெல்லாம் நான் போட மாட்டேன்!’… (READ MORE)

பொரி கடலை

, , , ,

புதுச்சேரி வழி காட்டுகிறது!

புதுச்சேரி வழி காட்டுகிறது! மொத்த விமான நிலையத்தையும் சூரிய சக்தி மின்சாரத்தால் வெற்றிகரமாக இயங்கவைத்து அசத்தி உள்ளனர். இப்படி முழு நிலையமும் சூரிய சக்தியால் இயங்குவதில் இந்தியாவின் முதல் நிலையம் புதுச்சேரிதானாம்! மாதத்திற்கே 10,00,000/- ரூபாய் மிச்சமாம். இதைவிட முக்கியமான நம்மை ஈர்த்து மகிழ்விக்கும் சங்கதி – இந்த அளவுள்ள ஒரு விமானநிலையம் இயங்க என்எல்சியிலிருந்து… (READ MORE)

Uncategorized

துப்புரவாளர்கள் மாறுகிறார்கள் சென்னையில்

எனது பகுதியின் குப்பைத் தொட்டிகள் மாறியுள்ளன. வேறு சீருடையணிந்த சில புதியவர்கள் வந்து ஒரே நாளில் பலமுறை துப்புரவு செய்கிறார்கள். ‘உர்பசர் சமீட்’ நிறுவனம் சென்னைப் பெருநகரில் எடுத்துக் கொண்டுள்ள ஏழு பகுதிகளில் ஒன்றான அடையாறு மண்டலப் பகுதியில் வருகிறது ஆர்ஏபுரம். தொடர்ந்து நல்லது நடைபெறட்டும். மற்ற பகுதிகளுக்கும் இது பரவட்டும். 😃

Uncategorized

துப்புரவாளர்கள் மாறுகிறார்கள் சென்னையில்

எனது பகுதியின் குப்பைத் தொட்டிகள் மாறியுள்ளன. வேறு சீருடையணிந்த சில புதியவர்கள் வந்து ஒரே நாளில் பலமுறை துப்புரவு செய்கிறார்கள். ‘உர்பசர் சமீட்’ நிறுவனம் சென்னைப் பெருநகரில் எடுத்துக் கொண்டுள்ள ஏழு பகுதிகளில் ஒன்றான அடையாறு மண்டலப் பகுதியில் வருகிறது ஆர்ஏபுரம். தொடர்ந்து நல்லது நடைபெறட்டும். மற்ற பகுதிகளுக்கும் இது பரவட்டும். 😃

Uncategorized

wp-16016357826491550252133250517878.jpg

கட்சிகளைக் கடந்தல்லவா காணப்பட வேண்டியவர் காந்தியார்

ஊரே போற்றி மதிக்கும் சில அப்பாக்களை அவர்களது சொந்தப் பிள்ளைகளே அறியாமலிருப்பது போல காந்தியை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தாமல் விட்டுவிட்டோம். அவர்களுக்கு அத்தனை கோடிகளை அள்ளித்தந்து விட்டார் என்பது போன்றவற்றை மட்டுமே எடுத்தியம்பி இளந்தலைமுறைக்கு முன்னே சில திரைகளை எழுப்பி காந்தியின் முக்கிய மற்ற பண்புகளை பார்க்கவிடாமலே செய்து விட்டோம். டால்ஸ்டாய் பண்ணை உருவான விதமும்,… (READ MORE)

Politics, பொரி கடலை

சிறுவர்களுக்கு வெய்யில் தெரிவதே இல்லை.

எல்லாக் காலங்களிலும் சிறுவர்களுக்கு வெய்யில் தெரிவதே இல்லை. மணக்குடிக்கு வந்த உடனேயே, பாப்பாக்குளத்தில் தண்ணீர் இருக்கிறதா என பார்க்க வந்தேன். தூர் வாரப்பட்டதில் தாமரைக் கொடிகள் இன்றி,  வீராணத்திலிருந்து வந்த புது நீரால் நிறைந்திருக்கிறது குளம்.‘இந்த வெய்யில்ல ஏம்ப்பா, போற!’ என்ற மீன்கொத்தியார் வீட்டக்காவின் குரலைத் தாண்டி படித்துறைக்குப் போனால், இரண்டு தூண்டிகளோடு மூன்று வாண்டுகள்… (READ MORE)

பொரி கடலை

wp-16011008007623596063854740053067.jpg

‘புள்ள வூடு’ அல்லது ‘நடேசம் பிள்ளை’

மணக்குடி ஒரு சிறு விவசாய கிராமம். அஞ்சலகம் கூட அடுத்த ஊரான குறியாமங்கலத்தில்தான் என்றால் மருத்துவமனையைப் பற்றிக் கேட்கவா வேண்டும்! மணக்குடி, குறியாமங்கலம், ஆயிபுரம் என்ற மூன்று கிராமங்களுக்கும் நடேசம் பிள்ளை என்றழைக்கப்படும் ஆர்ஐஎம்பி முடித்த ஹோமியோபதி கற்ற நடராஜன் பிள்ளை மருத்துவம் பார்த்தார். கிழக்குப் பார்த்த நத்தகோகாபால் பிள்ளையின் வீட்டு் வடவண்டைச் சுவற்றை வலது… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , , , , ,

உன்னத வரம்

இயல்பான சாதாரண நிலையில் இருப்பவனை 20-25 நிமிடங்களில் முற்றிலும் வேறான ஓர் ஆழ்நிலைக்குக் கொண்டு சென்று கிடத்தி அமிழ்த்தி, அதுவும் எழும் முன்பு கிடத்தல் நிலையிலிருந்து கைகளை உயர்த்துகையில் சக்தியை வெள்ளமாக பாய்ச்சி உயர் அனுபவம் தரும் மலர்ச்சி மகா முத்ரா நமக்குக் கிடைத்த ஓர் உன்னத வரம். உடலை மனத்தை அமைதியில் ஆழ்த்தி எடுத்து… (READ MORE)

Spirituality

அவர்கள் வாழ்கிறார்கள்…

அமாவாசை,  விளக்கேற்றி இலை போட்டு அன்னம் படைக்க வைத்திருக்கிறாள் மனைவி. குளித்து வேட்டியணிந்து குனிகிறேன். ‘சிவா… இடுப்புல ஒரு துண்ட எடுத்துக் கட்டு!’ தலைக்குள் கேட்கிறது அப்பாவின் குரல். நான் வாழும் வரை என் அப்பாவும் வாழ்கிறார் என்னுடனே என் நினைவுகளில். – பரமன் பச்சைமுத்து17.09.2020

மு பச்சைமுத்து அறக்கட்டளை

திருவள்ளுவரின் தந்தை யார்?

புத்தகங்கள் அறிவு விருத்திக்கு மட்டுமல்ல, எதிர்காலத்திற்கான ஆவணமும் கூட. இணையதளங்களும் விக்கிபீடியாவும் இல்லாக் அக்காலத்தே பெரும் பதிவுப் பொருளாகவும் இருந்துள்ளன. திருவள்ளுவர், கடல் கொண்டு போன குமரிக்கண்டத்தில் பிறந்தார், மயிலாப்பூரில் வாழ்ந்தவர் என்ற தகவல்கள் நாம் கேட்டவையே. திருவள்ளுவரின் தந்தையின் பெயர் ‘பேராழி மாமுனிவன்’ என்கிறது 1874ல் யாழ்ப்பாணம் அச்சக தமிழ்மொழி அகராதி. வள்ளுவர் சமணரே… (READ MORE)

பொரி கடலை

, ,

பாரதியார் இல்லத்திலெடுத்த படங் கள்

பாரதியார் இல்லத்தில் படமெடுக்க முடியாது, கூடாது. அனுமதியில்லை.ஏதோவோர் அனுகூலத்தால் எனக்கு அப்பேறு கிட்டியது அன்று. இது 360 டிகிரி படம். உங்களை விரல்களை வைத்துத் தள்ளி சுழற்றி பாரதியின் முழு வீட்டையும் காணலாம். மலர்ச்சி மாணவர் ஒளிஓவியர் கோபிநாத் எடுத்தவை இப்படங்கள். https://momento360.com/e/u/2677affbe645458189c69230180c028c?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75 https://momento360.com/e/u/63c601e8c581406b85b17635f4928453?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75 https://momento360.com/e/u/ec4debfe72bd44898e5c5dce07f4865c?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75 https://momento360.com/e/u/6cd4a202a6624c278fbc5d01235f4a0c?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75 https://momento360.com/e/u/feed8f2a4ec34a5c9bec971ab9fd9042?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75 https://momento360.com/e/u/bdb5a3bc436e470faa4f166a87cdb547?utm_campaign=embed&utm_source=other&heading=178.68696603836378&pitch=-9.499744746633604&field-of-view=75 https://momento360.com/e/u/1489eadd5d234f16a72a00d1fc762954?utm_campaign=embed&utm_source=other&heading=0&pitch=0&field-of-view=75 கைவைத்து சுழற்றி முழுப்படத்தையும்… (READ MORE)

Uncategorized

மு பச்சைமுத்து அறக்கட்டளை : 8வது அன்னதானம்

இன்று ( ஆவணி மாதம் ) மிருகசீரிடம். தந்தையின் பெயரால் செய்யப்படும் 8வது அன்னதானம் நிறைவேற்றப்பட்டது இன்று மதிய உணவு வழங்கப்பட்டது வாழ்க! :மு. பச்சைமுத்து அறக்கட்டளை பரமன் பச்சைமுத்து10.09.2020

மு பச்சைமுத்து அறக்கட்டளை

,

சாயாவனம் – சா கந்தசாமி : காலச்சுவடு பதிப்பகம்

பிழைப்புக்காக பிறந்த ஊரை விட்டு இலங்கையின் மலையகத்துத் தேயிலை தோட்டத்துக்கு சிறுபிள்ளையோடு ஓடி வந்த தாய் அம்மை வார்த்து குளிர்ந்து (இறந்து) போய் விட, அன்னையின் சவத்தையே பார்த்தபடி நிற்கும் சிறுவன் சிதம்பரத்தை கருப்பு உபதேசியார் சர்ச்சுக்கு அழைத்துப் போகிறார். அவனன்னை கோதிவிட்ட நீண்ட சிகை சிரைக்கப்பட்டு வெள்ளைப் பாதிரியாரிடம் ஞானஸ்தானம் பெற்று டேவிட் சிதம்பரமாக… (READ MORE)

Books Review

, , , ,

திறந்த வெளி உடற்பயிற்சி கூடங்கள்

தமிழகத்தில் போதிய இடவசதி உள்ள 147 பூங்காக்களில் திறந்த வெளி உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்க அனுமதி என்று ஒரு செய்தி வந்துள்ளது.  வேறு வேறு காலகட்டங்களில் நான் பயன்படுத்திய கோவை பந்தயச் சாலை திறந்த வெளி உடற்பயிற்சிக் கூடமும், பெங்களூரு பிடிஎம் லேஅவுட் பூங்காவும், சென்னை 28ன் மாநகராட்சி மைதான ‘டிப் பார்’ரும், சிங்கப்பூர் ஹோகாங்க்… (READ MORE)

பொரி கடலை

,

சரி செய்யப் பட வேண்டும் இதை

என் நண்பர்கள் எனை காங்கிரஸ் – இடது – ஆதரவாளன், பாஜக – வலது எதிர்ப்பாளன் என்று கருத பெரும் இடம் இருக்கிறது. இரண்டுமில்லை வெறுமனே கவனிப்பவன், தேர்தலன்று வாக்களிப்பவன் என்பது புரியாமல் என் பெயரின் மீது வண்ணமடிப்பது சில நண்பர்களுக்கு பிடித்த வேலை. இருந்த போதிலும் பகிர வேண்டியிருக்கிறது. ஒரே நாடு ஒரே வரி… (READ MORE)

Politics

22 தேசிய மொழிகள், செய்யலாமே!

காஷ்மீரில் ஏற்கனவே அலுவல் மொழியாக இருந்த உருது, ஆங்கிலத்தோடு, மக்ளிடம் பேசப்பட்டு வந்த டோக்ரி, காஷ்மீரி, இந்தி ஆகிய மூன்றையும் சேர்த்து ஐந்து மொழிகளையும் அலுவல் மொழியாக்கியிருக்கிறார்கள்.  ‘என்னாது, இவ்ளோ நாளா காஷ்மீர்ல காஷ்மீரி மொழியே அலுவல் மொழியாக இல்லையா!’ என்ற அதிர்ச்சியைக் கடந்து வரும் எண்ணம் – ஐந்து அலுவல் மொழியா! அப்படியானால், இந்தியாவின்… (READ MORE)

Uncategorized

உயர்நீதி மன்றத்தின் நல்ல கேள்வி

‘சித்த மருத்துவ மருந்துக் கட்டுப்பாட்டு இணை இயக்குநர் பதவிக்கு தகுதியான சித்த மருத்துவர்கள் இருந்தும், ஏன் நியமிக்கவில்லை? அந்தப் பதவிக்கு ஆயுர்வேத மருத்துவம் படித்தவரை மத்திய அரசு நியமித்துள்ளது ஏன்? சித்த மருத்துவத் துறையில் இணை ஆலோசகர் என்ற ஒரு பதவியை ஏன் மத்திய அரசு இல்லாமல் செய்தது? ‘ என்ற உயர்நீதி மன்றத்தின் கேள்விகள்… (READ MORE)

Uncategorized

சில நூல்களை இன்று நம்மால் உள்வாங்க முடிவதில்லை, அவ்வளவே!

கேள்வி: ஒரு நூலை வாசிக்கத் தொடங்கினேன். எவ்வளவு முயன்றாலும் என்னால் சில பக்கங்களைத் தாண்டிப் போகவே முடியவில்லை. நீங்கள் பாட்டுக்கு அடுத்து அடுத்து என்று இத்தனை நூல்களை வாசித்துத் தள்ளுகிறீர்களே! பரமன்: ஐயா, நான் வாசிப்பது மிக குறைவு ஐயா. வகுப்புகள் எடுப்பது, பத்திரிக்கை வேலை என முக்கிய பெரிய வேலைகளை முடித்தவுடன் கொண்டாடுவதற்கு நான்… (READ MORE)

பொரி கடலை

wp-15986362771258330977967652512003.jpg

‘சஞ்சாரம்’ – எஸ் ராமகிருஷ்ணன் : நூல் விமர்சனம் – பரமன் பச்சைமுத்து

‘முதல் அடி ரத்தினத்தின் பிடறியில் விழுந்தது. பதினெட்டு படிகள் கொண்ட சூலக்கருப்பசாமி கோவிலின் முன்னாலிருந்த சிமெண்ட் திண்டில், வெளிறிய ஆரஞ்சு நிற சால்வையை விரித்து உட்கார்ந்து நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்த ரத்தினம் திடுக்கிட்டு நிமிர்ந்த போது, ‘தாயோளி நிறுத்துறா! சாமிக்கு யாரு வில்லு குடுக்கறதுங்கற பிரச்சினையே இன்னும் முடியல. அதுக்குள்ள வாய்ல வச்சி ஊத ஆரம்பிச்சிட்டீங்க!… (READ MORE)

Books Review

, , ,

Gunjan-Saxena-App-608x800-e31068f6-8919-4341-813d-46399684c440

‘குஞ்சன் சக்சேனா’ – “வழியெங்கும் சோதனைகளை கடந்தவள் வானுயர பறப்பாள்” – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

  அயலூர் சினிமா : நெட்ஃபிளிக்ஸ் “வழியெங்கும் சோதனைகளை கடந்தவள் வானுயர பறப்பாள்” பெண் பிள்ளை என்றால் இவ்வளதுதான் இதுதான் படிக்கவேண்டும், திருமணம் பண்ணிக்கொண்டு சீவிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் கொண்ட குடும்பத்தின் விமானம் ஓட்ட ஆசைப்படும் சிறுமி, ‘பெண் பிள்ளைகள் விமானம் ஓட்டுவதா!’ என்று எதிர் நிலையில் நிற்கும் குடும்பம் சமூகம் பொருளாதாரம் என எல்லாவற்றிக்கு… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படட்டும்!

தனி நபர் இடைவெளி, பாதுகாப்பு நடவடிக்கைகளோடு கடைகள் அலுவலகங்கள் இயங்க அனுமதி தந்தாயிற்று. வரிசையில் நின்று கைகளில் கிருமிநாசினி தெளித்து டாஸ்மாக்கில் வாங்குவது அனுமதித்தாகி விட்டது. கோவில் – மசூதி – தேவாலயங்களிலும் இறையை வணங்க மக்கள் அனுமதிக்கப் பட வேண்டும். அதே தனிநபர் இடைவெளி அதே பாதுகாப்பு நடவடிக்கைகள் இங்கும் கடைபிடிக்கப்படலாம். அரசு பரிசீலக்க… (READ MORE)

பொரி கடலை

அவர்கள் கொண்டிருப்பது பொறுப்பு

பிள்ளையார் வாங்க பையை எடுத்துக் கொண்டு மார்க்கெட்டுக்குப் போகும் போதே கவனித்தேன். செட்டிநாடு ஹரிஸ்ரீ பள்ளியிருக்கும் தெருவில் இப்போது இடித்துக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டுவாசதி வாரியக் குடியிருப்பின் முன் மண் பிள்ளையார் செய்து கொண்டிருப்பவரை. நமக்கு அப்பவே மண் எடுத்து அச்சில் சாம்பல் தூவி அப்படியே அடித்து சுடச்சுட எடுக்கப்பட்ட பிள்ளையார் வேண்டும். சந்தையில் சில… (READ MORE)

Uncategorized

வானமெங்கும் வௌவால்கள்

ஒவ்வொரு முறை வௌவால்களைப் பார்க்கும் போதும் ஒரு வியப்பு வந்து போகும் எனக்கு. புவனகிரி பள்ளியில் ஏழாம் வகுப்பு ஆர்கே வாத்தியார் எங்களுக்குள் விதைத்ததில் தொடங்கிய அது இன்னும் தொடர்கிறது. தொண்டையிலிருந்து பல்லாயிரம் கேளாஒலி அலைகளை எழுப்பிய வண்ணமே இருக்கும் வௌவால்கள், அந்த ஒலியலைகளை வைத்தே பொருள்களை கண்டறிந்து மோதாமல் பறக்கின்றனவாம். வௌவால்களைப் படைக்கும் போது,… (READ MORE)

பொரி கடலை

மு பச்சைமுத்து அறக்கட்டளை : 7வது அன்னதானம்

🌸🌸 🌸 இன்று ( ஆடி மாதம் ) மிருகசீரிடம். தந்தையின் பெயரால் செய்யப்படும் 7வது அன்னதானம் நிறைவேற்றப்பட்டது ஊரடங்கின் சில விதிகள் இன்னும் இருக்கிறது என்பதால் சென்ற மாதம் போலவே மக்கள் யாரையும் அழைத்து உணவு தர முடியாத நிலை, வழக்கம் போலவே சமைத்து, வண்டிகளில் எடுத்துச் சென்று வடபழனி்முருகன் கோவில் அருகில் தங்கியிருப்போர்,… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-15971155886986028183038964818296.jpg

‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ – அயலூர் சினிமா : பரமன் பச்சைமுத்து

சில தெருக்கள், ஒரு சாப்பாட்டு கடை, ஒரு தையல்காரன், ஒரு குளத்தோடு கூடிய கோவில், கால்பந்து விளையாடும் இளசுகள் கொண்ட கேரளத்தின் சிற்றூரில் தனியே இருக்கும் வயதான தன் அப்பா பாஸ்கரனைப் பார்த்துக் கொள்ள தான் பணி புரியும் ஜப்பானிய கியோட்டோ டைனமிக்ஸ் நிறுனத்திலிருந்து ஒரு ரோபோவை கொண்டு வருகிறான் பொறிஞனான மகன். கேரள பாரம்பரியத்திலும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

ஒரே மாநிலம் 3 தலைநகரங்கள்…

ஆளுநர் அனுமதி அளித்ததின் பேரில் சட்டச் சிக்கல்கள் நீங்கி, ஒரே மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் என்ற ஒரு மாதிரியை உருவாக்குகிறது ஆந்திரம். நிர்வாக வசதிக்காக திருச்சியை இரண்டாம் நலைநகராக மாற்ற எம்ஜிஆர் அரசு முனைந்தது நினைவுக்கு வருகிறது. ஆந்திரத்தின் 3 தலைதகரம் திட்டத்தால் மாநிலம் முழுவதும் சமமான முன்னுரிமை, வேலைவாய்ப்புகள் பெறலாம். மனைகள் விலை மூன்றிடங்களிலும்… (READ MORE)

Uncategorized

சிரிக்கிறார்கள் முன்னோர்களும்

தான் வெற்றி பெற்ற போது ‘உழைப்பு’ என்றும்அடுத்தவர் வெற்றி பெறும் போது ‘முன்னோர்கள் ஆசி!’ என்றும்காரண சாத்திரம் சொல்கிறார் உறவுக்காரரொருவர் சிரிக்கிறேன்,அவரது முன்னோர்களும் சிரிக்கிறார்கள்என்னுடன் சேர்ந்து! பரமன் பச்சைமுத்து30.07.2020 Facebook.com/ParamanPage

கவிதை

ஆடி சித்திரை…

வறுமை நிலையின் காரணமாக அந்த மனிதன் புவனகிரியில் ஒரு தையல்கடை பாயிடம் பொத்தான் கட்டுவது காஜா எடுப்பது போன்றவற்றை பகுதி நேர வேலையாகச் செய்து கொண்டிருந்தார்.  ஓர் ஆடி மாதத்தில், கர்ப்பிணியான அவரது மனைவியை மாட்டு வண்டியில் வைத்து மணக்குடியிலிருந்து புவனகிரி வரை கூட்டி வந்துவிட்டார். புவனகிரி பாலத்தில் நின்று சிதம்பரம் போக ‘கூட்டமில்லாத பேருந்துக்காக’  … (READ MORE)

Uncategorized

‘கொரோனா தடுப்பூசி – எம்எம்ஆர் போதுமாம்!’

கொரோனா தீ நுண்மி தடுப்பூசிக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வந்திருக்கிறது. ‘கோவாக்சின்’ ஊசியும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் தடுப்பூசியும் மக்கள் மீது சோதனை என்ற கட்டத்தில் இருக்க, மருத்துவ உலகம் நமக்கு ஏற்கனவே பழக்கமான ஒரு தடுப்பூசியை சொல்லி கட்டை விரலை உயர்த்துகிறது.  தட்டம்மை, அம்மைக்கட்டு, ரூபெல்லா எனப்படும் ஜெர்மன் தட்டம்மைக்காக இதுவரை குழந்தைகளுக்குப் போடப்பட்ட… (READ MORE)

Uncategorized

பள்ளிச்சிறார்களுக்குக் காலையுணவுத் திட்டம்…

கர்நாடகாவின் கிராமப்புறத்து பள்ளிகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து பள்ளிச் சிறார்களுக்கு காலையுணவு தரும் திட்டத்தை ‘அக்சய பாத்ரா’ என்ற பெயர் கொண்டு செயல்படுத்தியது கிருஷ்ண பக்தி இயக்கமான ‘இஸ்க்கான்’, கிராமப்புற சிறார்களுக்கு ஊட்டச் சத்து கிடைத்தது. பலரால் பாராட்டப்பட்ட திட்டமது.(சில பள்ளிகளில் காலை உணவும் மதிய உணவும், பல பள்ளிகளில் மதிய உணவு மட்டும் ) புதுவையில்… (READ MORE)

Uncategorized

20.07.2020

பழைய படங்களைப் பார்ப்பது பல சமயங்களில் பரவசம் தரும்.

    பழைய படங்களைப் பார்ப்பது பல சமயங்களில் பரவசம் தரும். மணக்குடியின் வடக்குவெளி வயலின் பேரு வரப்பின் பாட்டையோன்றில் என் மகள்களோடும் சிவப்பிரியன் என்னும் குட்டியோடும் அமர்ந்திருந்த ஒரு மாலையில் எடுத்த படம். எடுத்தது மோகநேச்வரன் எனும் குரு என்று நினைவு. 20.07.2010 என்று நினைவூட்டி சொல்கிறது ஃபேஸ்புக். படத்திலிருக்கும் பிள்ளைகள் மூவரும் வளர்ந்து… (READ MORE)

Photos

குளித்து முடித்து நிற்கிறது மரம்

குளித்து முடித்து சொட்ட சொட்ட நிற்கிறது மரம் குளிப்பாட்டிய மழையன்னைவேறு எங்கோ சென்றுவிட காற்றண்ணனோசூரிய அப்பனோ துவட்டிவிட வரட்டுமெனகாத்திருக்கிறது மரம் – பரமன் பச்சைமுத்துசென்னை19.07.2020

கவிதை

,

6வது அன்னதானம்

🌸 இன்று ( ஆடி மாதம் ) மிருகசீரிடம். தந்தையின் பெயரால் செய்யப்படும் 6வது அன்னதானம் நிறைவேற்றப்பட்டது ஊரடங்கின் சில விதிகள் இன்னும் இருக்கிறது என்பதால் சென்ற மாதம் போலவே மக்கள் யாரையும் அழைத்து உணவு தர முடியாத நிலை, வழக்கம் போலவே சமைத்து, வண்டிகளில் எடுத்துச் சென்று வடபழனி்முருகன் கோவில் அருகில் தங்கியிருப்போர், வடபழனி… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-15950560253703056595047267885322.jpg

‘மூல விதைகள்’ வெளியீடு

‘மூல விதைகள்’ நூலின் இணையப் பயன்பாட்டு நூல் பிரதியை, மு. பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக கீழமணக்குடியில் இன்று 18.07.2020 காலை திரு. முத்தையா முருகேசன் அவர்கள் வெளியிட்டார்கள். வாழ்க! வளர்க! – பரமன் பச்சைமுத்து சென்னை 18.07.2020

மு பச்சைமுத்து அறக்கட்டளை

‘மூல விதைகள்’ வெளியீடு

🌸🌸 🌸 🌸 ஒவ்வொரு முதியவன் இறக்கும் போதும், அவனோடே ஓர் உறவு வட்டமும், குலக் கதைகளும் குடும்பம் உயர்ந்த கதைகளும் மறைந்து போகின்றன. இருப்பவர்கள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தாவிட்டால் அவை அப்படியே புதையுண்டு போகின்றன. உங்கள் தந்தையைப் பற்றி எவ்வளவு தெரியும்? ‘அவரப் பத்தி எனக்குத்தான் தெரியும், இத்தனை வருஷம் ஒண்ணாவே வாழ்ந்துருக்கேன், நான்… (READ MORE)

Uncategorized, மு பச்சைமுத்து அறக்கட்டளை

wp-1594258658641659303361867114202.jpg

போன நிமிடம் வரை பறவையாயிருந்தது…

போன நிமிடம் வரை பறவையாகபலகனியின் தரையிலிப்போது சிறகாக எந்தப் பறவை அஞ்சல் செய்ததோஎன் வீட்டு முகவரியில் ‘வூகான் இறைஞ்சிச் சந்தையில் புறாவிடமிருந்து பரவியது புதிய வைரஸ்’  ஒரு வைரல் செய்தி வரலாம் நாளைபுறாக்கள் புறக்கணிக்கப்படலாம் அவ்வேளை அதற்குள் சிறகைக் கையிலெடு சிறுவர்களைப் போலச் சிறகை சிலாகிசிவப்பிந்தியனைப் போல சிறகை அணி வாழ்வோம் வா! – பரமன்… (READ MORE)

கவிதை

, , ,

wp-15939352892783999563993329093403.jpg

மிளகாய்ச்செடி கதை

வடக்குப் பக்க பலகனியில்வந்துவிழும் கொஞ்சூண்டு சூரியஒளியில்வைத்தேன் ஒரு தொட்டி மிளகாய்ச்செடி கிடைக்கும் கொஞ்ச  வெய்யிலைதுணி காய இந்நேரம்செடி காய இந்நேரம் என்று மனைவியோடு பேசிப் பகுத்தேன் வீட்டிலிருக்கும் வேளையெல்லாம் வெயிலுக்கு நகர்த்தி நகர்த்திவியர்த்து மகிழ்ந்தேன் வெள்ளை வெளேரென்று விரிந்து வந்தன பதினைந்து பூக்கள் உச்சிமுதல் உள்ளங்கால் வரை சிரித்தன என்னுடலின் அங்கங்கள் பூக்கும் பிறகு காய்க்கும் என்றுகனியாகும்… (READ MORE)

கவிதை

, , , , , , , ,

பேய்கள் தோர்னமெண்ட்

பாத்ரூமிற்குள் நுழையும் போதெல்லாம் பித்தளை தாயக்கட்டைகள் உருளும் சத்தம் கேட்கிறது. முன்பெல்லாம் பிற்பகலில் மட்டுமே கேட்டது இப்போது பின்னிரவிலும் கேட்கிறது. … ‘ஊரடங்கு காலம், வயது முதிர்வு வெளியே போகவேக் கூடாது என்று வெளிநாட்டிலிருந்து பிள்ளைகள் எச்சரித்துள்ளதால்,  வீட்டிலேயே அடைந்து கிடங்கும் நேர் கீழ்த்தளத்துப் பெருசுகள் தாயக்கட்டைகளை எடுத்து விட்டது ஏப்ரலிலிருந்து. பழகப் பழக எல்லா… (READ MORE)

Uncategorized

என் அடுக்ககத்தி்ற்கு வந்த கொரோனா போய்விடும்

என் அடுக்ககக் குடியிருப்பின் கீழ்த்தளத்திலிருப்பவருக்கு (நான் இருப்பது இரண்டாவது தளத்தில்) கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் வீட்டிலுள்ளோருக்கு செய்த சோதனை முடிவில் அவர்கள் அனைவருக்கும் வந்து விட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. என் அடுக்கக் கட்டிடமே தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அரசு சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி சொல்லுகிறது. தமிழகத்தில் குணமாவோரின் எண்ணிக்கை கணிசமான அளவிலேயே உள்ளது…. (READ MORE)

Uncategorized

கொரோனா காலத்தில் நடந்த எளிமையான திருமணம்

🌸 நாதஸ்வரத்தில் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ இசைக்க கூடவே தவிலும் கலக்க,‘அடேயப்பா! ரொம்ப நாள் கழிச்சி ஒரு கல்யாணத்துக்கு வர்றோம்!’ என்ற எண்ணம் வந்தது. 40 பேருக்கு அரசு அனுமதியளிக்கிறது என்ற போதிலும், அதில் பாதியளவே கூடியிருந்தனர் வீட்டிலேயே நடைபெறும் திருமணத்திற்கு. மலர்ச்சி மாணவர் ஜெகதீசனின் மகள் திருமணம், அவரும் மலர்ச்சி மாணவி. ஊரடங்கு நேரமென்பதால்… (READ MORE)

Uncategorized

”தாராவியில் நடந்தது தரமான சம்பவம்!”

‘இத்தனையோண்டு சதுரடிக்குள் இவ்ளோ பேர்!’ என்றளவு மக்கள் நெருக்கம் மிகுந்த தனிநபர் இடைவெளியே சாத்தியமில்லை என்ற நிலை கொண்ட ராயபுரம், வண்ணாரப்பேட்டை, காசிமேடு, திருவொற்றியூர் பகுதிகளை உள்ளடக்கிய வடசென்னையில் கொரோணா தீ நுண்மி தீயின் நாவுகளைப் போல நாலாபுறமும் பற்றிப் பரவும் கொழுந்து விட்டு வளரவே செய்யும் என்கிறார்கள் ஊடகவியலாளர்களும் மருத்துவர்களும். வடசென்னையே இப்படியென்றால் அதைப்போல… (READ MORE)

பொரி கடலை

, , ,

wp-15927307897578560722994003409731.jpg

யோகா – தினம் 2020

தினம் யோகா உடல் எடை கொண்டு தசை வலிமை செய்தல், தடகளம், ஓட்டம் என சில வித உடற்பயிற்சிகளை கலந்தும் மாற்றி மாற்றியும் செய்யும் எனக்கு மூச்சுப் பயிற்சியோடு இயைந்த யோக ஆசனங்கள் செய்யும் போது ஏற்படும் நிலை எதையும் தாண்டியது. அந்த ஆழ்ந்த சீரான மூச்சும், நெஞ்சுக் குழியை சுற்றிலும் ஏற்படும் உன்னத உணர்வும்,… (READ MORE)

Self Help, Spirituality

ஐந்தாவது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம். தந்தையின் பெயரால் செய்யப்படும் அன்னதானம் நிறைவேற்றப்பட்டது முழு ஊரடங்கு என்பதால் சென்ற மாதம் போலவே மக்கள் யாரையும் அழைத்து உணவு தர முடியாத நிலை, வழக்கம் போலவே சமைத்து, வண்டிகளில் எடுத்துச் சென்று வடபழனி்முருகன் கோவில் அருகில் தங்கியிருப்போர், வடபழனி சிவன் கோயில் அருகில் தங்கியிருப்போர் எனதேவைப்படும் இடங்களில் தேவைப்படும் மக்களுக்கு… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

அரும்புகள், மொட்டுகள் – மலர்ச்சி வகுப்புகள் முடித்த இளம்பிள்ளைகளுக்கான வகுப்பு

Malarchi Follow up class for Adolescents ! அரும்புகள், மொட்டுகள் – மலர்ச்சி வகுப்புகள் முடித்த இளம்பிள்ளைகளுக்கான வகுப்பு சிறு பிள்ளைகள் பெரிய  உள்ளத்தையும் கூரிய அறிவையும் கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி! – பரமன் பச்சைமுத்து07.06.2020 #MalarchipPaathai#Malarchi#MalarchiKids#BeWithPositivity#ParamanSession Facebook.com/ParamanPage

Uncategorized

கொரோனா செப்டம்பர் வரை நீளும்

சென்னையில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை என்றிருக்கும் நிலையில், நோய்த்தொற்று குறையாது அதிகரிக்கும் என்று ஒரு கணிப்பைச் சொல்லியிருக்கிறது எம்ஜியார் பல்கலைக்கழகம்.  ஜூலை 15ல்  1,50,254 பேர்கள் சென்னையில் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருப்பார்கள், இறப்பு எண்ணிக்கை 1,654ஆக இருக்கும், செப்டம்பரில் தொற்று உச்சத்தைத் தொடும், அதன் பின்னர் படிப்படியாக குறையும் என்கிறது அவர்களது கணிப்பு.

Uncategorized

பறவை சூழ் உலகு பாதுகாக்கப்படட்டும்

பல்லுயிர்ப் பெருக்கத்தின் முக்கிய அங்கம் பறவைகளும் பறவைகள் வாழும் இடங்களும். பறவை கூடும் இடங்களை பறவைகளுக்காகவென்று ஒதுக்கி வைப்பதே பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும் மனித குலத்திற்கும் நாம் செய்யும் பேருதவி. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை சுற்றியுள்ள நிலத்தை தொழிற்சாலைக்கு ஒதுக்க எடுக்கப்பட்டிருக்கும் முடிவை மதிப்பிற்குரிய முதல்வரும் அரசும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பறவை சூழ் உலகு பாதுகாக்கப்… (READ MORE)

பொரி கடலை

,

wp-15909467310222949242347805123501.jpg

அவள் விகடன் + மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் – சிங்கப் பெண்ணே – பரமன் பச்சைமுத்து

குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு தனது ஆற்றலை வெளிக்கொணர நல்லதாய் எதையாவது செய்ய வேண்டும் என்று தவிக்கும் மகளிர்க்கு ஊக்கம் தந்து உதவி செய்து வழிகாட்டுவது உன்னதமான காரியம். மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கமும், அவள் விகடனும் சேர்ந்து நடத்தும் மகளிர்க்கான அப்படியானவொரு நிகழ்ச்சி ‘சிங்கப் பெண்ணே’. அந்த நிகழ்ச்சியில் தொழில் முனையும் மகளிர்க்கு ஊக்கமளிக்கவும்… (READ MORE)

Paraman's Program

, , , , , ,

3 படங்கள் பார்த்தேன்

சௌந்தர்யா:  பரமன் கொஞ்ச நாட்களாக நீங்கள் படம் எதுவும் பார்க்கவில்லையா? விமர்சனமே வரவில்லை, அதான் கேட்கிறேன். பரமன்:  ஒரு மலையாளப் படம், ஒரு இந்திப் படம், ஒரு பழைய தெலுங்குப் படம் பார்த்தேன். 1. மலையாளம்:அதிகாலையிலேயே எருமை மாட்டை வெட்டி இறைச்சி விற்கும் வர்கீஸ், அவன் தரும் இறைச்சியை தினமும் வாங்கியே பழகிவிட்ட ஊர், ஓர்… (READ MORE)

Uncategorized

நான்காவது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம். தந்தையின் பெயரால் செய்யப்படும் அன்னதானம் தொடர்கிறது, ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மக்கள் யாரையும் அழைத்து உணவு தர முடியாத நிலை என்பதால், வழக்கம் போலவே சமைத்து, வண்டிகளில் எடுத்துச் சென்று தேவைப்படும் இடங்களில் தேவைப்படும் மக்களுக்கு தருவதற்கு அதற்குரிய ஆட்கள் மூலம் முன் அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாம் வீட்டடங்கலில் இருந்தாலும்,… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

ஆலோலம்…

‘ஆலோலம்…’ : ஆலோலம் அடுத்த நிலை வேளிர் குலத் தலைவன் தமிழ்க்கடவுள் முருகன் பல குன்றுகள் கடந்து வந்து கொடிகுலத்து வள்ளியை காண வருகையில், குறிஞ்சில நில திணை புரத்தில் பயிர்களின் மேல் அமைக்கப்பட்ட பரணில் அவள் உட்கார்ந்து கொண்டு ‘ஆலோலம் ஆலோலம்’ பாடி சத்தமெழுப்பி புள்ளினங்களை விரட்டியதாக கதைகள் சொல்கின்றன.(‘கருணை மிக்கவள் வள்ளி, பறவைகளை… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

நாம் வைத்த மரங்களே நமக்கு நிழல் தந்தால்…

முப்பத்தியெட்டு டிகிரி வெயிலின் வெப்பத்தை அரை மணி நேரத்தில் 50 டிகிரி வெப்பமாக மாற்றிப் பார்க்க வேண்டுமா?  காரை ஓர் அரை மணி் நேரம் வெய்யிலில் நிறுத்துங்கள். கதவைத் திறக்கும் போது ‘நெருப்புடா…’ என்ற படி வெப்பம் முகத்தில் அறையும். அடுத்த சில நிமிடங்களில் உடலை தகிக்க வைத்து விடும், மூடிய காருக்குள் சூடாகிக் தகிக்கும்… (READ MORE)

Uncategorized

wp-1589609035155372820356105562670.jpg

வைரமுத்து அவர்களோடு சில கேள்விகள்…

கனவு என்பது நம் விருப்பம்தானே. எதையும் எப்படியும் காணலாமே!  கவிப்பேரரசு வைரமுத்துவின் எதிரில் அமர்ந்து அவரிடம் கேள்விகள் கேட்டு விடை வாங்க வேண்டுமென்பது என் பலநாள் கனவு. காலை விடியலிலேயே கதவைத் தட்டிக்கொண்டு வந்து நின்றது வாய்ப்பு, ‘ஒரு கேள்வி கேட்கலாம் பரமன் நீஙக்கள்!’ என்ற குறிப்போடு. விடவா முடியும்! நேரலையில் வெப்பினாரில் கலந்து கொண்டு… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

, , , , , ,

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு

மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி – ‘கொரோனா காலத்தில்…’: சிறப்புப் பரிசு ச அருள் நந்தினி ,பத்தாம் வகுப்பு,மகரிஷி வித்யா மந்திர்,திருவண்ணாமலை,மலர்ச்சி அரும்புகள் – பேட்ச் 4 MalarchiArubugal MalarchiMottugal MalarchiKids MalarchiCompetetion QuarantineTime CreativeThinking StayWithPositive Malarchi Facebook.com/MalarchiPage 👏👏👏👏 🌸🌸 மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் – கட்டுரைப் போட்டி –… (READ MORE)

Arumbugal-Mottugal

Psycho Poster

‘சைக்கோ’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

  தொள்ளாயிரத்து தொண்ணூற்றியொன்பது பேரைக் கொலை செய்து தலைகளை சேகரித்து வைத்துக் கொண்டு ஆயிரமாவது தலையை அங்குலிமால் தேடிக்கொண்டிருந்த போது ஆயிரமாவது மனிதனாக புத்தர் அவனிடம் போனார், அப்புறம் அங்குலி மால் மாறிவிட்டான் என்ற அந்தக்கால சில வரிக் கதையை அப்படியே கொஞ்சம் இந்த நவீன யுகத்திற்கு மாற்றினால், அதை அழகான துப்பறியும் கதையாக மாற்றி… (READ MORE)

Uncategorized