Monthly Archive: March 2021

அம்மா – குளோபல் மருத்துவமனை

சென்ற ஆண்டு மார்ச் மாதத்திலேயே முடித்திருக்க வேண்டிய, உடல் ஆரோக்கிய சோதனை ஒன்றை,உலகம் தழுவிய பொது முடக்கத்தால் ஓராண்டு கழித்து இந்த மார்ச்சில் செய்துவிட்டு வெளியே வருகிறோம்! (சென்னை, பெரும்பாக்கம் – குளோபல் மருத்துவமனையில்) 30.03.2021

Uncategorized

wp-1617080021159.jpg

சாய்ந்து கொள்ள ஒரு தோள்…

மகிழ்வான தருணங்கள், துயரமான நேரங்கள், இவை எதுவுமில்லாமல் வெறுமனே இருக்கும் சமநிலையான நேரங்கள் என எதுவாயினும் சாய்ந்து கொள்ள ஒரு தோள் இருப்பது வாழ்வின் பெரும் வரம். அம்மா மடி, அப்பாவின் தோள், வாழ்க்கைத்துணையின் நெஞ்சு, ஆசானின் தாள், தோழமையின் அரவணைப்பு என மனிதர்க்கு சாய ஓரிடம் தேவைப்படவே செய்கிறது.  ‘சாய்ந்து கொள்ள ஒருவர்’ என்பது… (READ MORE)

பொரி கடலை

, , , ,

எப்படி சொன்னார் சுஜாதா என்பது பெரிய வியப்பு

கேள்வி: ஒரு பக்கம் இப்படி வரலாற்றை எடுத்துக் கொண்டு நிகழ்வுகளை சரியாக தந்து அதற்கு இடையில் கதாபாத்திரங்களை வைத்து கதை செய்து பெரிய விருதுகளும் பாராட்டுகளும் செய்கிறீர்கள். திடீரென்று அதற்கு இடையில் இணை பால்வெளி வேற்று கிரக கதைக்களங்களை ‘நான் ரம்யாவாக இருக்கிறேன்’ ‘அமில தேவதைகள்’ போன்ற அறிவியல் புனை கதைகளையும் தருகிறீர்கள்! சுஜாதாவுக்கு அடுத்து… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, , , , , , , ,

கோழியைப் போலக் குறுநடையிலேயே ஓடிக் கடந்த கால்கள்

 கருவமரத்து சாலை பனஞ்சாலைசோளக் கொல்லை ஈச்சம்புதர் அடர் ஒத்தயடிப்பாதையென மணக்குடிக்கும் புவனகிரிக்குமான இடைவெளியை கோழியைப் போலக் குறுநடையிலேயே ஓடிக் கடந்த கால்கள் மக்களித்துக் கொண்டதால் மாவுக்கட்டில் புகுந்திருக்கு தூளியிலிருந்த பிள்ளையைதூக்கையில்தரை வழுக்கிய போதும்தம்பியை விடாமல் தாங்கியதில்தடம் பிசகி மடங்கின கால்கள் சில நாட்கள் சங்கடம்சில வாரங்கள் பறந்தோடும்சீக்கிரமே குணம் வரும் ஒரே இடத்தில் நீவீடு… (READ MORE)

Manakkudi Manithargal, கவிதை

என் ‘கோவேக்ஸின்’ உட்புகும் படலம்.

கூட்டமே இல்லையென்றும் கூற முடியா பெருங்கூட்டம் என்றும் கூற முடியா எப்போதும் 20 பேர் இருந்தார்கள் என்று சொல்லலாம். 18 பேர் சரியாக சுவாசக்கவசம் அணிந்திருந்தாலும், வாயை மறைக்க வாய்க்கட்டாக அதை அணிந்திருந்த 2 பேரும் இருக்கவே செய்தனர். ‘ பரமன் பச்சைமுத்தூ…’ ‘யெஸ்!’ ‘சார் உங்களுக்கு வேக்ஸினா, ஷீல்டா?’ ‘வாட்…  கோவாக்ஸினையும்  கோவிஷீல்ட்டயுந்தான் இப்படி… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

தடுப்பூசி போட்டுட்டோம்ல்ல!

கூட்டமே இல்லையென்றும் கூற முடியா பெருங்கூட்டம் என்றும் கூற முடியா எப்போதும் 20 பேர் இருந்தார்கள் என்று சொல்லலாம். 18 பேர் சரியாக சுவாசக்கவசம் அணிந்திருந்தாலும், வாயை மறைக்க வாய்க்கட்டாக அதை அணிந்திருந்த 2 பேரும் இருக்கவே செய்தனர். ‘ பரமன் பச்சைமுத்தூ…’ ‘யெஸ்!’ ‘சார் உங்களுக்கு வேக்ஸினா, ஷீல்டா?’ ‘வாட்…  கோவாக்ஸினையும்  கோவிஷீல்ட்டயுந்தான் இப்படி… (READ MORE)

பொரி கடலை

, , , ,

13 ஆவது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை

 இன்று பங்குனி- மிருகசீரிடம், தந்தையின் பெயரால்வடபழனியில் வழக்கமாக செய்யும் இடங்களில், மதிய உணவு வழங்கப்பட்டது. இறையருள் மிகப் பெரிது  பரமன் பச்சைமுத்து,மு பச்சைமுத்து அறக்கட்டளை20.03.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

பொம்முகுட்டி அம்மாவுக்கு ஆராரோ…

‘பொம்முகுட்டி அம்மாவுக்கு ஆராரோ…தங்கக் கட்டிப் பாப்பாவுக்கு தாலேலோ…’ சில பாடல்கள், அவை இடம் பெற்ற திரைப்படங்களை நாம் பார்க்க வில்லையென்றாலும், நம்மை வேறு சில நினைவுகளுக்கு கூட்டிப் போய் விடுகின்றன. அந்தப் படங்களைப் பார்த்திருந்தால் படக்காட்சிகளின் நினைவுகள்தான் வரக்கூடும், பார்க்காததாலேயே நம் வாழ்வின் நிகழ்வுகள் நினைவில் வருகின்றன என்ற வகையில் பார்க்காததே வரம்தான். பகலில் பொதுவெளியில்… (READ MORE)

Manakkudi Manithargal

wp-1615802964512.jpg

ஊஞ்சலை விரும்பாத குழந்தைகள் இருக்குமா…

ஊஞ்சலிலாடாத குழந்தைகள் கூட இருக்கலாம், ஊஞ்சலை விரும்பாத குழந்தைகள் இருக்குமா என்பது என் கேள்விக்குறி. ஊஞ்சல் வீடுகளின் அழகை கூட்டுகிறது, தமிழ் திரைப்படங்களில் கேஎஸ் ரவிக்குமாரின் நாயகர்களின் பிம்பம் உயர்த்தப் பயன்படுவது என்பனவன்றைத் தாண்டி ஊஞ்சலைக் காண்கையில் உள்ளே குதூகலம் வருகிறது, உள்ளிருக்கும் குழந்தைமை விழிக்கிறது என்பனவும் உண்மை. மயிற்பீலியணிந்து கண்கள் மூடி  குழலூதும் கண்ணனும்,… (READ MORE)

பொரி கடலை

, ,

wp-16151251877117480122333963145405.jpg

மஞ்சளாறு பாயும் அந்த ஊரு

‘பச்சக் கிளி பாயும் ஊருபஞ்சு மெத்தப் புல்லப் பாருமஞ்சளாறு பாயும் அந்த ஊரு…’ இந்தப் பாடலைக் கேட்டிருக்கிருக்கிறீர்களா?  ‘கருத்தம்மா’ படத்தில் வரும் ஒரு பாடலின் தொடக்க வரிகள் இவை. …. கடல்மட்டத்திலிருந்து 2133 மீ (கிட்டத்தட்ட 7000  அடி) உயரத்தில் இருக்கும் கொடைக்கானல் மார்ச் மாத காலை 6 மணிக்கு 11 டிகிரியில் இருக்கிறது. சங்க… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

,

என்னை வரவேற்பவர்…

என்னை வரவேற்பவர்… இரவெல்லாம் பயணித்து கொடைக்கானல் மலையேறி எனக்கான அறையை திறந்து பின்கட்டின் கதவைத் திறந்தால்… 11 டிகிரியிலும் நடுங்காமல், என்னைக் கூர்மையாக பார்த்தபடி வரவேற்கிறார் இவர் ( இவள்!?) ‘வந்தாச்சா… மலர்ச்சி வணக்கம்! என்ன? படம் எடுக்கறியா? சரி எடு, நீ நம்மாளு, நான் ஓட மாட்டேன். ஒழுங்கா எடுத்துக்கோ! எடுத்தாச்சா… வர்ட்ட்டா!’ பரமன்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

மேற்படிப்பு

முப்பத்திமூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக வீட்டை விட்டு வெளியூரி்ல் தங்கி கல்லூரியில் படிக்கப் போனபோது, என் அம்மா அழுதார்களாம், சில நாட்கள் தொடர்ந்து. நான் சிரித்தபடியே உற்சாகமாகப் புறப்பட்டுப் போனேன். இன்று என் மகளை படிப்பிற்காக வெளியூர் அனுப்பும் வேளையில் என் கண்களில் எட்டிப்பார்க்கிறது கண்ணீர். சிரித்தபடியே உற்சாகமாகப் புறப்பட்டுப் போகிறாள் மகள்! பரமன் பச்சைமுத்து06.03.2021

Uncategorized

சசிகலா துறப்பு – 2

(சசிகலா – தொடர்ச்சி) அதிமுக பற்றிய அவரது வழக்கு மார்ச் 15 வரை நீதிமன்றத்தில் இருக்கிறது. அது வரை தேர்தலை எதிர்கொள்வதில் அவருக்கு நிலைப்பாடு குறித்து சிக்கல் இருக்கலாம். அமமுகவில் இறங்கி வேலை செய்தால், அவர் அதிமுக இல்லை என்றாகிவிடும். அதிமுகவில் அவர் இறங்கினால் சட்டச் சிக்கல்கள், ஈபிஎஸ் ஓபிஎஸ் அணி மற்றும் அமைச்சர்கள் பாய்வர்…. (READ MORE)

Uncategorized

சசிகலா அரசியல் துறப்பு!

அரசியலை விட்டு விலகுவதாக சசிகலா அறிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.விவரங்கள் முழுதாகத் தெரியாமல் கருத்து சொல்ல முடியவில்லை. முழுதும் துறப்பா, தேர்தல் வரையா… என்பதை பொறுத்திருந்தே பார்க்க முடியும். ஆனால்… இதே நிலையை டிடிவி தினகரன் முன்பு எடுத்தது தேவையில்லாமல் நினைவுக்கு வந்து தொலைக்கிறது இப்போது. ‘நான் தொந்தரவா இருக்கேன்னு சொன்னாங்க. வேணாம்னு ஒதுங்கிட்டேன்!’ என்று பேட்டியெல்லாம்… (READ MORE)

Uncategorized

பெருமாள் கவுண்டர்

🌸 மூப்பின் அல்சைமர் மறதி நோய் முடங்கிப் படுக்கையிலேயே வாழ்க்கை முதுகில் ‘பெட் சோர்’ புண்கள் முடிந்தது எல்லாம்பெருமாள் கவுண்டருக்கு உடலின் சிறுமை உடைத்துஉயிரின் சுதந்திரம் இனி புன்னை பூலைமலர்கள் இட்டேமகள்கள் வழியனுப்ப தலைமழித்த மகன் ராமுதந்தையை ஏந்திச் சென்றார் கணப்பொழுதில் அஸ்தியானவரைகரைத்தாயிற்று காவிரியில் காலையில் இறந்த கவுண்டருக்குகருக்கலில் கருமாதியும் முடித்தாயிற்றுகாக்காய்க்கு சோறும் இட்டாயிற்றுகாதில் ஒலிக்கிறதுகடைசி… (READ MORE)

கவிதை

கட்சி கடந்த பாராட்டுவிழாவில்

அழைத்தது திராவிட பாரம்பரியம் கொண்டவரும் திமுக நண்பர் என்பதாலும், மக்கள் நீதி மய்யத்தின் சிகே குமரவேலு, வைரமுத்து பேரவை நண்பர்கள் என எல்லாப் பக்கங்களிலிருந்தும் நண்பர்கள் வருகிறார்கள் என்று உறுதியானதாலும், இன்று வெல்கம் ஹோட்டலில் ( பழைய சோழா செரேட்டன்) நடந்த, வானதி சீனிவாசனுக்கு நண்பர்களால் நடத்தப்பட்ட விழாவிற்கு சென்றிருந்தேன். பல ஆண்டுகள் கழித்து பல… (READ MORE)

Uncategorized