Monthly Archive: April 2021

நாம்தான் விழிப்போடு இருக்க வேண்டும்

கொரோனா நோய்தொற்றின் முதல் அலையை சரியாக கையாளப்பட்டதை பாராட்டும் போது, இரண்டாம் அலையை சரியாக கையாளவில்லை என்பதையும் சொல்லித்தானே ஆக வேண்டும்! ‘தேர்தலை ஒத்தி வைத்திருக்கலாம்!’ என்பது நடைமுறையில் எவ்வளவு சாத்தியம் தெரியவில்லை. தேர்தலைத் தள்ளிப் போட அரசியல் நிர்ணய சட்டம் இடம் அளிக்காது என்பதையும் மறக்க இயாலாது. தேர்தலை, 7 கட்டங்கள் 8 கட்டங்கள்… (READ MORE)

Politics

மனிதகுலம் கிமு 6000

கிமு 6000த்தில் வால்கா நதிக்கரையில் வாழ்ந்த ‘இந்தோ ஸ்லாவியா’ இன மனிதர்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறேன். ‘வேள்பாரி’யில் ஆதி மனிதர்கள் தாய் வழி சமூகம் கொண்டிருந்ததாக சு வெங்கடேசன் எழுதியிருப்பாரே, அப்படியிருந்திருக்கிறது இவர்களின் வாழ்க்கை.பத்து பதினாலு பேர் கொண்ட குடும்பத்தின் தலைவி மூத்த தாய் வழியில் குடும்பம் நடத்தப் பட்டிருக்கிறது. அவரின் சந்ததியோடு குடும்பம் நடக்கிறது…. (READ MORE)

Uncategorized

ஏற்கனவே அறிந்த பாத்திரங்களை வேறு வண்ணத்தில் என்னுள்ளே உலவ விட்ட பெரும் எழுத்து சித்திரக்காரர்

நல்ல எழுத்து என்பது ஒரு தவம் என்பது என் கருத்து. ஒரு நிலைக்கு ஓர் அலைவரிசைக்கு நம்மை பொருத்திக் கொள்ளும் போது, நம் உள்ளிருக்கும் படிமங்களை தொட்டுக் கொண்டு,  எழுத்து அதுவாக நம் வழியே நிகழ்த்திக் கொள்ளும். சில எழுத்தாளர்கள் ஒரு சாதகர்களாகவே என் கண்ணுக்குத் தெரிவார்கள்.  இவர் அப்படியொருவர்.  இவரது சித்தாந்தங்களோடு முரண்பட்டு நிற்பவர்கள்… (READ MORE)

பொரி கடலை

, ,

வந்தது கொரோனா ஆயுர்வேத மருந்து!

கொரோனாவிற்கு ஆயுர்வேத மருந்து ஒன்றை அறிவித்து விட்டார்கள், 100 நோயாளிகளுக்கு தந்து சோதித்து வெற்றி கண்டு விட்டார்கள், ஐசிஎம்ஆர் ஒப்புதல் தந்துவிட்டது! மருந்து கொடுக்கப்பட்ட 5 நாளில் 86% தொற்றும், 10 நாளில் 100% தொற்றும் குணமாகியுள்ளதாம். க்ளெவிரா மாத்திரை, சிரப் – என இரண்டு கூட்டு மருந்துகளை அறிவித்திருக்கிறார்கள். பப்பாளி, காட்டுவேம்பு, நில வேம்பு,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,

wp-1619008359356.jpg

‘நான் ரம்யாவாக இருக்கிறேன்’ – தமிழ்மகன் : பரமன் பச்சைமுத்து

ஆதியில் அண்டப் பெருவெளியில் நிகந்த பெரு வெடிப்பின் (‘பிக் பாங்’) பின் நிகழ்ந்த மாற்றங்களில் இந்தப் பிரபஞ்சம் உருவானது. நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் உருவானபோதே இன்னும் சில பிரபஞ்சங்களும் உருவாகியிருக்கலாம், இந்த உலகில் இப்போது நீங்களும் நானும் பேசிக்கொண்டிருப்பதைப் போலவே, அங்கும் ‘இணைப் பிரபஞ்சம்’ எனப்படும் பேரலல் யுனிவர்ஸ்ஸிலும் இருவர் பேசிக்கொண்டிருப்பர் என்பது அறிவியலாளர்கள்… (READ MORE)

Books Review

, , , , , , , , ,

கவனித்த செய்தி

‘கவனித்த செய்தி’ : கோதுமை கொள்முதல் எம்எஸ்பி தொகையை நேரடியாக விவசாயிகளுக்கு செலுத்துவதை எதிர்த்து வந்தன பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள். விவசாயிகளின் கோதுமைக்கான எப்சிஐ (உணவுக் கழகம்) தரும் தொகையை இது நாள் வரை தனியார் நிறுவனங்கள் கமிஷன் முறையில் பெற்று வந்தன. அவர்களிடமிருந்து  விவசாயிகளுக்கு பணம் சரியாக தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் இருந்தன. இந்நிலையில்… (READ MORE)

Politics

wp-1618899909136.jpg

‘என்னாது, சம்மர்ல காஃபி குடிக்கக் கூடாதா? அப்புறம்?’

valarchi Summer கேள்வி: கோடையில் காஃபி அதிகம் வேண்டாம் என்று ஒரு முறை நீங்கள் சொன்னதாக நினைவு. குறைத்துக் கொள்ள வேண்டுமா, குடிக்கவே கூடாதா? பரமன்: அடிப்படையை சொல்கிறேன். குறைத்துக் கொள்வதா, குடிக்கவே கூடாதா என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். கோடையில் வெப்பம் மிக உயர்ந்து நிற்கும். நம் உடலும் சூடாகும். சரியான வெப்பநிலையில் உடலை… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, , , , , , ,

தடுப்பூசியால் மாரடைப்பா?

(தடுப்பூசி போட்ட அடுத்த நாளே மாரடைப்பு வர வாய்ப்பில்லை, 21 நாட்களாவது ஆகும் என்கிறார்கள். விவேக் அவர்களுக்கு ஏற்பட்டது மாரடைப்பு. ) இந்தியாவில் கடந்த 92 நாட்களில் 12 கோடிப் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இத்தனை மக்களுக்கு தடுப்பூசி செலுத்த, அமெரிக்கா, சீனா எடுத்துக் கொண்ட நாட்களை விட குறைவானது இது என்கிறார்கள். மாடர்னா, பைசர்,… (READ MORE)

பொரி கடலை

, , , , , ,

சிவமென்பது உருவமா? – பரமன் பச்சைமுத்தெ

சிவமென்பது உருவமா?ஓருருவத்திற்குள்ளே அடைபடுவதா இறை?அது உருவங்கடந்த ஒரு நிறை சிவமென்பது இல்லை சிலை,அது ஓர் உன்னத நிலை.சிவமென்பது உருவமல்ல,சிவமென்பது உணர்வு ‘ஐயாவென ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே’ என்னும் திருவாசகத்து வரிகொள்கிறது சிவமென்பது உருவமில்லா நெறி உருவத்தை வணங்கியபோது வெறும்மனிதனாயிருந்தபாண்டிய முதலமைச்சன்உருவமில்லா பெருந்துறையின் கருவறையில் உறைந்தபோதேமாணிக்கவாசகன் ஆனான் உருவங் கடந்தவனே சிவநிலையை நெருங்குகிறான்உள்ளே சமநிலையை தாங்குகிறான் சிவமென்பது… (READ MORE)

Religion, கவிதை

wp-1618649735981.jpg

மு பச்சைமுத்து அறக்கட்டளை 14வது அன்னதானம்

🌸 இன்று மிருகசீரிடம் ( சித்திரை மாதம் ). மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கே கே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் நிகழ்ந்தது. இறைவனுக்கு நன்றி! வாழ்க! பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அறக்கட்டளை17.04.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, ,

எனக்கு ஐஜியத் தெரியும்…

தொண்ணூறுகளின் துவக்கத்தில் ரைட்சாய்ஸில் சர்வீஸ் இஞ்சினியராக வேலை பார்த்த அந்தக் காலங்களில் சரவணபவனில் காலை உணவு உண்ணும் போது, ‘ஏய் பரமன், அந்த டேபிள்ல பாரு நடிகர் விவேக்!’ என்று பாலசந்தர் சுட்டிக் காட்டியது இன்னும் நினைவில் நிற்கிறது. வெள்ளைச் சட்டையும், கண்ணாடியும் அணிந்து வழித்து வாரப்பட்ட தலைமுடி சகிதமாக வெறுமனே உட்கார்ந்திருந்தார் விவேக். உணவு… (READ MORE)

பொரி கடலை

, , ,

wp-16185797781242867949624672667898.jpg

வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் ஆடுகளுக்கெல்லாம்!

தமிழகத்தின் அரசிலை கொஞ்ச காலமாக கவனித்து வருபவர் என்றால் உங்களுக்கு ஸ்டாலின் அவர்களின் பேச்சு நினைவுக்கு வரும், ரொம்ப காலமாக கவனிப்பவர் என்றால் அண்ணாவின் வரிகள் நினைவுக்கு வரும். ராஜா அண்ணாமலைபுரத்தின் தெருவொன்றில் ஒரு வீட்டின் பெண்மணி இட்ட சோற்றைத் தின்னும் இந்த ஆட்டையும், அதன் தாடியையும் பார்த்ததும் எனக்கு இரண்டு பேரின் பேச்சுகளும் நினைவில்… (READ MORE)

பொரி கடலை

wp-1618410412075.jpg

மிர்தாத்தின் புத்தகம் – மிக்கேய்ல் நைமி : பரமன் பச்சைமுத்து

முன் குறிப்பு: ‘உலகிற்கு வெளிப்படுத்தலாம் என்று எனக்கு அனுமதிக்கப்பட்ட புத்தகத்தின் பகுதி இதோடு முடிகிறது… மிச்சத்திற்கான காலம் இன்னும் வரவில்லை!’  என்று எங்கோ லெபனானில் ஒரு மூலையில் மிக்கேய்ல் நைமி எழுதி வைத்ததை ‘இதை படியுங்கள், ஒரு முறையல்ல 10,000 முறை படியுங்கள்!’ என்று  வெளி உலகிற்கு சத்தமாக சொல்லிஇப்படியொரு நூலை உலகிற்குக் காட்டிய ஓஷோவிற்கு… (READ MORE)

Books Review

, , , , , , , , , , ,

கடும் போட்டி தேர்தல் 2021

காலையில் மாலனின் கட்டுரையை படிக்க நேர்ந்தது. தமிழகத்தின் வாக்கு சதவீதம், எடப்பாடி தொகுதி, கொளத்தூர் தொகுதி சதவீதம், கடந்த தேர்தல், பொதுப்புத்தி என நிறைய கணக்கிட்டு ஆய்வு செய்திருக்கிறார் அவர்.  அதன் கடைசிப் பத்தியை இப்படி முடித்திருக்கிறார். //  திமுக தரப்பில்,  கடந்த மக்களவை தேர்தலில் வாக்கு சதவிகிதம் இதே போன்று 72 சதவிகிதம் இருந்ததையும்… (READ MORE)

Uncategorized

ஒரு வேட்டியை எடுத்துப் பிரித்துக் கட்டும் போது…

ஒரு வேட்டியை எடுத்துப்  பிரித்துக் கட்டும் போது உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?  வேட்டிகளில் ஒருபுறம் சிவப்பு வண்ண பார்டரும் அதற்கு் நேரெதிர் கீழே பச்சை வண்ண பார்டரும் இருந்தால், எதை இடுப்பிலும் எதை கால்பக்கமும் வைத்துக் கட்டுவீர்கள்?….. நெருங்கிய வட்டத்தில் பொதுவாகவே ‘இந்தத் திசையிலும் சிந்திக்கலாமே!’ என்று மறுபக்க ‘கவுண்ட்டர்’ கருத்துகளை வைப்பது என்… (READ MORE)

Manakkudi Manithargal

, ,

‘கர்ணன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

சுதந்திரமாக ஓடி விடக்கூடாது என்பதற்காகவே முன்னங்கால் இரண்டையும் இணைத்து கட்டி வைக்கப்பட்ட நடக்க முடியாமல் விந்தி விந்தி நகரும் ஒரு கழுதைக்குட்டி வாழும், சரியான பாதையோ இணைப்போ இல்லாத சீமைக்கருவேல புதர்கள் மண்டிய, உலகை விட்டு ஒதுங்கியிருக்கும் ஒரு சிற்றூருக்கு ஆற்றல் மிகு பொலிவான ஓர் இளங்குதிரை கொண்டு வரப்படுகிறது. ஒரு நாள் ஊரே நினைத்திரா… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுகள்

இந்தியாவின் ஏதோவொரு மூலையில் பணியிலிருக்கும் ராணுவ வீரர் ஒரேயொரு நாள் வாக்குப்பதிவிற்காக தன் உள்ளூருக்கு பயணித்து வந்து திரும்புவது சிரமம் என்பதால் அவர்களுக்கு மட்டும் சிறப்பு அறிமுகமாக தபால் ஓட்டு என்று ஒன்று வந்தது.  அது உரிமை என்பதைத் தாண்டி ஒரு சிறப்பு மரியாதை அன்று. வாக்குச் சாவடிகளுக்கு அலுவலர்களாக செல்லும் ஆசிரியர்கள் / அரசு… (READ MORE)

Politics

ஐ ஃபோன் – பாட்டி

அந்தக் காலத்தில நாங்கல்லாம் இப்படி…’ என்று பகிர்வதில் தவறில்லை, அதையே சொல்லிக் கொண்டு இன்றைய நடைமுறைக்கு மாற விரும்பாமல் எதிர்ப்பிலேயே நிற்பது எதிரியத்தை வளர்த்து விடும் தவறு. தான் கொண்ட பழக்கங்களை அது நல்லதென்றால் இன்றைய நடைமுறைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வேன், ஆனால் அதைத் தொடர்வேன் என்பது வாழ்வோடு இயைந்து வளரும் இன்றைக்குத் தேவையான நன்னெறி…. (READ MORE)

பொரி கடலை

,

எத்தனையாண்டுகள் ஆனாலும் தொடர்கிறது குமுதத்தில் குறுக்கெழுத்து முடிக்கும் இந்த விளையாட்டு! சிறுவனாக இருந்த போதுசித்தப்பா வாங்கி வரும் குமுதத்தில் தொடங்கி, கல்லூரி காலத்தில் தினமலர் வாரமலரிலும் என கூடி, இத்தனையாண்டுகள் ஆன பின்னும் தொடர்கிறது விருப்பமாக. இதனால்தானோ என்னவோ, இதற்கு முன்பு ஆசிரியாக பணி செய்த தமிழ் இதழில் வலுக்கட்டாயமாக குறுக்கெழுத்துப் பகுதியை சேர்ந்தேன். ‘வளர்ச்சி’… (READ MORE)

Uncategorized

wp-1617689855881.jpg

வாக்கு செலுத்தும் படலம்

‘வெய்ய வர்றதுக்குள்ள போய் ஓட்ட போட்டுட்டு வாயேன்!’ ‘கூட்டம் கம்மியா இருக்கும் போது போவோம்!’ இந்த இரண்டுதான் தேர்தலில் வாக்களிப்பதை இயக்குகிறது என்று நினைக்கிறேன்.  மணக்குடியிலும் இதே கதைதான். பல தேர்தல்களாக புவனகிரி சட்டமன்ற தொகுதியில் இருந்த (கீழ)மணக்குடி இப்போது சில தேர்தல்களாக சிதம்பரம் தொகுதியில் இருக்கிறது. படித்த பள்ளிக்கே திரும்பிப் போவது என்பது தேர்தல்… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , ,

wp-1617602394335.jpg

குழந்தைகள்

அவர்கள் பார்வை கூட வேண்டாம், நம் பார்வையில் அவர்கள் பட்டாலே போதும், நம்முள் உள்ளே பூக்களும் வெளியே புன்னகையும் பூக்கின்றன. எத்தனை இறுக்கமான மனநிலையையும் சூழலையும், ‘ப்பூவா… மம்மம்’ சொல்லி ‘தத்தக்கா பித்தக்கா’ நடை போடும் ஒரு குழந்தை உடைத்துத் தகர்த்தி விடும். தூக்க முற்படும் போது ஒரு குழந்தை நம் மீது தாவுகிறது. உண்மையில்… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , , , , , , , ,

பாகுபலி என நினைத்துக்கொள்வானா!

பச்சை பூவரசங்கழிகளை ஒடித்து இழுத்து சணல் கொண்டு கட்டி வில்லாக்கி, தென்னை ஈர்க்குச்சிகளை (விளக்கமாற்றுக் குச்சிகளை) அம்புகளாக்கி அர்ச்சுனானாக ராவணனாக ராமனாக உருமாறி விளையாடியிருக்கிறேன், சரவணனோடும் ஆளவந்தாராடும் சிறுவனாக இருந்த போது. அதன் பிறகு இத்தனையாண்டுகளில் வில் வைத்து விளையாடிய சிறுவர்கள் சொற்பமாய் இருந்திருக்கலாம் என்றாலும், நான் பார்க்க நேரிடவில்லை. ‘அவெஞ்சர்ஸ்’ வகை ‘பிளாஸ்டிக் போ… (READ MORE)

பொரி கடலை

அம்மா – குளோபல்

ரேடியேஷன் டிபார்ட்மெண்ட்,Dr வனிதா கிருஷ்ணமூர்த்தி அறை: ‘அமிர்தம் அம்மா, இந்த ஸ்கேன் படத்தப் பாருங்க. உள்ள எந்த பிரச்சினையும் இல்ல. நல்லா இருக்கீங்க. சர்ஜரி பண்ணி ரேடியேஷன் மருந்து குடுத்து ஸ்கேன் பண்ண எல்லாருக்கும் ஒரு ரேடியேஷன் ட்ரீட்மெண்ட்டாவது குடுக்கற மாதிரி வரும். உங்களுக்கு எந்த ட்ரீட்மெண்ட்டும் தேவையில்லை.உங்களுக்கு வந்த கட்டிய சர்ஜரி பண்ணி எடுத்த… (READ MORE)

Manakkudi Manithargal, மு பச்சைமுத்து அறக்கட்டளை