“கற்கை நன்றே” – : எனது ஆறாவது நூல் : ‘வாழ்வின் மாணவனாகிய நான்… ‘

Karkai Nandrey - Copy

Karkai Nandrey

 

 

 

வாழ்வின் மாணவனாகிய நான்…

‘….
…..
…இன்று திரும்பிப் பார்க்கையில் ஒன்று புரிகிறது. வாழ்க்கையில் எல்லாமே யாரிடமோ கற்றவையே. நாம் பயணிக்கும் பாதையில் மனிதர்கள், மரங்கள், நிகழ்வுகள் என எதையாவது அனுப்பிக் கற்பித்துக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை. கற்றல் இல்லாதபோது தேக்கம் வருகிறது. கற்றல் தொடரும் போது வளர்ச்சி வருகிறது. வாழ்வு உயர்கிறது…. ‘

‘ ….’மன்னர்க்குத் தன்தேசமல்லால் சிறப்பில்லை
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்று மூதுரை எழுதிய அவ்வைப் பாட்டியின் வரிகளையும், ‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்று எழுதிய கொற்கை அரசர் அதிவீர ராம பாண்டியரின் வெற்றி வேற்கை நறுந்தொகை வரிகளையும் இன்று வேறு விதமாகப் பார்க்கிறேன் நான். கொற்கையின் அரசர் ‘வாசித்து வளர் வாசித்து வளர், யாசித்தாயினும் வாசித்து வளர்’ என்று எழுதிப் போயிருக்கலாம். ‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்றுதான் எழுதினார். தமிழ்ப் பாட்டி ‘படித்தவனுக்கு பாரெல்லாம் சிறப்பு’ என்று எழுதியிருக்கலாம், ‘கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்றுதான் எழுதியிருக்கிறாள் அந்த ஔவைப் பாட்டி… ‘

‘ …கற்றல் வேண்டும், கல்லூரிப் படிப்புத் தாண்டிய பின்னும் கற்றல் வேண்டும்.

கற்கை நன்றே… கற்கை நன்றே! காணும் பொருளிலும் காணும் நிகழ்விலும் கற்கை நன்றே! …’

… ‘

இன்னும் சில தினங்களில்…
எனது ஆறாவது நூல்….

“கற்கை நன்றே”

: பரமன் பச்சைமுத்து

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *