வாழ்க சென்னை!

சென்னை - Copy

சென்னை

 

 

நாயக்கர்கள் காலத்துக்கு முன்பேயே நீ இருந்தபோதிலும்,

நாவாய்கள் வழியே வந்தவனுக்கு விற்றதிலிருந்தே கணக்கில் வந்தாய்.

 

மராட்டியர்கள் கொண்டாடும் வீரசிவாஜி

உன் மண்ணின் காளிகாம்பாளை வழிபட்டே பெறுவானாம் வெற்றி

 

வான்புகழ் வள்ளுவனை வளர்த்துத் தந்த மயிலாப்புரி,

ஊன் வென்று ஒளியான வள்ளல்பெருமான் வாசம் செய்த ஏழு கிணறு,

பெருமாளின் பெயர் சொன்னாலுருகும் பேயாழ்வார் வாழ்ந்த அல்லிக்கேணி,

எபிரேயத்து ஏசுவின் நேரடிச் சீடர் தோமையர் ஒளிந்திருந்த பரங்கிமலை – என தொன்மைகளைக் கொண்டிருக்கும் புகழ் மண்ணே

 

இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்தவனுக்கும்,

எங்கேயோ பிறந்து இங்கே வந்தவனுக்கும்

வெள்ளையனுக்கும் சல்லையனுக்கும்

நல்லவனுக்கும் கெட்டவனுக்கும்

வாழ்வு தந்து வளர்க்கும் மண்ணே!

மலர்ச்சி வணக்கம்!  

 

எங்களுக்கு நீ வெறும் ஊர் அல்ல,

அடையாளம்!

 

வாழ்க சென்னை!

 

    பரமன் பச்சைமுத்து

2 Comments

 1. சுதன் ராம்

  வந்தாரை வாழவைக்கும் சென்னை. என்னையும் வாழவைத்து கொண்டிருக்கிறது. நன்றி..

  Reply
  1. paramanp (Post author)

   வாழ்க! வளர்க!

   Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *