வைரமுத்துவின் உவேசா பற்றிய கட்டுரை அனுபவம்…

எழுத்தாளனை ஆழமாய் தெரிந்து கொள்ளும் போது முன்பு படித்த அதே அவனது எழுத்துக்கள் இன்னும் ஆழமாய் புரியும். அதே எழுத்துக்களை எழுதுபவனே படிக்கக் கேட்க இன்னும் சிறப்பாக விளங்கும், உள்ளே இறங்கும். சிறப்பாய் எழுதவும் அதை வாசித்து வெளிப்படுத்தவும் தெரிந்தவராயிருந்தால்… கிடைக்கும் அனுபவம் ஒரு கொண்டாட்டம்.

வைரமுத்துவின் ஆழமான ஓர் ஆராய்ச்சிக்கட்டுரையை அவர் வாயாலேயே படிக்கக் கேட்டுத் திளைக்கும் அனுபவம் கிடைக்கப் பெற்றது. பாரதீய வித்யா பவனில் தினமணியின் மேடையில் தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பற்றிய கவிப்பேரரசு வைரமுத்துவின் ஆராய்ச்சிக் கட்டுரை… அட்டகாசம்!

தினமணியின் கி.வைத்யநாதன் அவர்களுக்கு பெரும் நன்றிகள். மாலன், சிவசங்கரி, மொழிபெயர்ப்புத் துறை தலைவர் அருள், ஔவை நடராசன், குமரி அனந்தன் என தமிழ்ப் பெரியோர்களால் நிரம்பியிருந்த அவையில் பத்திரிக்கையாளர்கள் பிரிவில் அமர்ந்து மகிழ்ந்து கரைந்தேன் தமிழில், அவரது ஆற்றலில். தமிழ்தாத்தா உவேசா மீது பெரும் மரியாதை கூடியது.

வைரமுத்துவின் கம்பீரம் (திமிர்) எப்போதும் போல பிடித்தது.

இந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக ‘இலக்கிய முன்னோடிகள்’ என்று வருவதற்காக காத்திருக்கிறேன். தமிழின் முக்கிய ஆவனமாக இருக்குமது.

வாழ்க வைரமுத்து
வாழ்க தமிழ்!

பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *