தேம்பாவனித் தந்த முனிவன்

இத்தாலியிலிருந்து தன் மதத்தைப் பரப்ப இம்மண்ணிற்கு வந்தானொருவன். உள்ளூர் மொழி தெரிந்தால்தான் முடியுமென்றெண்ணி தமிழைத் தொட்டவன், உள்ளூர குளிர்ந்ததிர்ந்தான், உள்நாக்கைத் தாண்டியும் தித்தித்த தமிழ்ச்சுவையில் அகமும் புறமும் மலர்ந்தான்.
தன்னைத் தொட்டவனைத் தாய்த் தமிழ் இழுத்து வாரி அணைத்துக் கொண்டது. மதப் பற்றாளன் தமிழ்ப்பற்றாளனானான். மதத் தொண்டு புரிய வந்தவன், தமிழ்த்தொண்டு செய்து மலர்ச்சி கண்டான். தேம்பாவனித் தந்த தமிழறிஞனானான்.

தாய்த் தமிழுக்கும்,
தமிழறிஞர் வீரமாமுனிவருக்கும்
மலர்ச்சி வணக்கம்!

– பரமன் பச்சைமுத்து
08.11.2017
சென்னை

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *