தலுவை

நெற்றியில் திருமண்,
இடுப்பில் ஒரு சுற்று சுற்றி செருகிய வெள்ளைத் துண்டு, கையில் பளபளவென்று துலக்கப்பட்டு துளசி சுற்றப்பட்ட பித்தளைச் செம்பு, அந்த வயதிற்கேயுரிய பிடுங்கித் தின்னும் வெட்கம் சகிதமாய்

ஒவ்வோர் வீட்டு வாசலிலும் ‘ நாரயண கோபாலா…’ என கூவிக்கூவி அரிசி சேகரித்து அம்மாவிடம் தந்த அரைக்கால் சட்டை பொழுதுகள் கிராமத்து கட்டாயங்கள் வந்து போகின்றன உள்ளே ‘ ஏங்க… இன்று புரட்டாசி சனிக்கிழமை வீட்டில் தளுவை !’ என்று மனைவி சொல்லும் போது.

( ‘  நாராயண கோபாலா ‘ என்று நான் குரலெழுப்பிய போது, பதிலுக்கு ‘ நான் சொன்னா கேப்பாளா ?’ என்று கேலிக் குரலெழுப்பிய கருணாகரன் மாமாவும் நினைவில் வருகிறார்)

அன்று சிறு பிள்ளையாய் பட்சணங்களுக்காக பரிகாசம் பொருத்தபோது கூடவே அரங்கனும் இருத்து ரசித்தான் என்பது
இன்று பக்தியில் செய்யும் போது உணரமுடிகிறது !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *