என் மனைவி…

குளித்துவிட்டு வருகையில் குரோமோசோம்கள், ஜீன்கள் என்கிறாள்.

டவலை உலர்த்தயில்
டெல்லி சுல்தானேட், ஷேர்ஷா என்கிறாள்.

கடுகு தாளிக்கையில்
கங்கைகொண்ட சோழன்,
கார்டீசியன் ஸிஸ்டெம்ஸ், ட்ரிக்னாமெட்ரி சொல்கிறாள்.

சோறு இறக்கும்போது
சோடியம் குளோரைடின் சமன்பாடு சொல்லிப் பாக்கிறாள்.

நடந்து செல்லும்போது
நியூட்டனின் இயக்க விதி ஒப்பிக்கிறாள்.

பால் காய்ச்சும்போது
பாக்டீரியா,
பிதாகரஸ் தியரமென்று எதையோ முணுமுணுக்கிறாள்.

மர்ச்சன்ட் ஆஃப் வெனிஸும், ஷேக்ஸ்பியரும் மனனம் செய்கிறாள்.

ஒரு வாரமாய்
ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள்
என் மனைவி…
மகள்களுக்கு
ஆனுவல்
எக்ஸாம்!

– பரமன் பச்சைமுத்து

04.03.2014

சென்னை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *