ஏழுநிமிடத்தில் ஷெனாய் நகர்

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் இருந்துகொண்டு ஷெனாய் நகரில் இருக்கும் அலுவலகத்திற்கு அழைத்து, ‘வெங்கட், என்னோட லஞ்ச் பாக்ஸ ஆன் பண்ணி சூடு பண்ணேன். ஏழு நிஷத்துல வந்துடுவேன்.’ என்று சொல்லமுடியுமா? சொன்னாலும் கோயம்பேடு பேருந்து நிலையம் – திருமங்கலம் – அண்ணா நகர் கிழக்கு – அண்ணாநகர் டவர் வழியாகப் பயணித்து ஷெனாய் நகருக்கு ஏழு நிமிடங்களில் வர முடியுமா? முடியம்! இன்று வந்தேன், அலுங்காமல் குலுங்காமல்!சென்னைக்கு மெட்ரோ வந்த புதிதில் அரசியல்வாதிகள் முதற்கொண்டு ஆளாளுக்கு அதில் பயணித்து தாமி எடுத்துப் போட்டுக்கொண்டிருந்ததாலோ என்னவோ, அதில் பயணிக்க விருப்பமில்லை அப்போது. இன்று ஷெனாய் நகரிலிருந்து மீனம்பாக்கம் விமானநிலையம் – அங்கிருந்து மீண்டும் ஷெனாய் நகர் வரை என பயண அட்டை வாங்கிக்கொண்டு பயணித்தேன்.எர்ஹோஸ்டஸ், விமான நிலையம் நோக்கிப் போகும் பயணிகள் என பலரும் மெட்ரோவில் பயணிப்பதை பார்க்க முடிந்தது. ஷெனாய் நகரிலிருந்து சரியாய் 30 நிமிடத்தில் மீனம்பாக்கம் விமான நிலையத்தை அடைந்து விட முடியும் எனும் போது நிச்சயம் பயன்படுத்திக்கொள்ளச் செய்வார்கள்தானே.சிங்கப்பூர் – துபாய் – டோக்கியோ என்று ஏற்கனவே பயணித்த ரெயில்களை நினைவில் வரச்செய்கிறது சென்னை மெட்ரோ. ‘நமூனாக்கு… ரொப்பாங்கி!’ என்று ஜப்பான் ரயிலின் அறிவிப்புக்கள் என் மண்டையில் கொஞ்ச நேரம் ஓடியது.ஷெனாய் நகர் – அண்ணா நகர் கிழக்கு – அண்ணாநகர் டவர் – திருமங்கலம் – கோயம்பேடு – கோயம்பேடு பேருந்து நிலையம் – அரும்பாக்கம் – வடபழனி – அசோக்நகர் – ஈக்காட்டுத்தாங்கல் – ஆலந்தூர் – மீனம்பாக்கம் என்று சிங்காரச் சென்னையின் முக்கிய பகுதிகளை முப்பது நிமிடங்களில் கடக்க முடிகிறது. வண்டியை நிறுத்த மிக அருமையான இடமும் உள்ளது. இலவச சைக்கிள்களை வேறு தருகிறது சென்னை மெட்ரோ. நூறு மணி நேரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.மீனம்பாக்கம் போய்த் திரும்பி வர எனக்கு நூற்றி இருபது ரூபாய் ஆனது. தொகை கொஞ்சம் அதிகம் என்று சொல்பவர்கள் பலருண்டு என்றாலும், ட்ராஃபிக் இல்லாமல் முப்பது நிமிடங்களில் சென்று சேர முடியும் என்றால் அதற்கான தொகை?: பரமன் பச்சைமுத்துசென்னை மெட்ரோ02.03.2018

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *