மனித மன நிமிர்த்திகள்…

ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த், பேட்மிட்டன், டென்னிஸ் என்று தனி மனித ஆற்றலின் எல்லை உடைக்கும் விளையாட்டுக்கள் என்னுள் உற்சாகத்தை ஊற்றி என்னை முழுதும் உயிர்ப்பித்து விடுகின்றன.

இந்த மாதிரி நேரங்களில் என்னால் உலகையே மறந்து விடக் கூட முடிகிறது. ஒரு நாள் இவற்றை நேரில் பார்த்து ரசிக்க வேண்டும்.

எவ்வளவு உழைத்திருப்பார்கள் இந்நிலை கைவர!

அடுத்த மனிதனுக்கு உத்வேகமும் உற்சாகமும் நம்பிக்கையும் தரும் எவரும் என்னைப் பொறுத்தவரை மனித தூக்கிகளே, மன நிமிர்த்திகளே. புருஸ்லீயை, உசேன் போல்ட்டை, கோபி சந்த்தை, தெண்டுல்கரை, மகேந்திர சிங் தோனியை, மைக்கேல் ஃபெல்ப்ஸை, இளையராஜாவை, ஃபெடரரை, பிரையன் ட்ரேசியை, ராஜராஜனை, ராஜேந்திரனை, வைரமுத்துவை, ஏ ஆர் ரஹ்மானை நான் மிகவும் மதிப்பதற்கு இதுவும் கூட ஒரு காரணம் போலும்.

பரமன் பச்சைமுத்து
05.04.2018
சென்னை

Facebook com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *