இலங்கை – இலை அப்பம்

இலை அப்பம் வேணுமா?

கதிர்காமத்திலிருந்து கொழும்புவை நோக்கிய சாலைப் பயணம் கொஞ்சம் நீண்டதுதான். ஐந்து மணி நேரங்கள் பிடிக்கும். ஒரே பயணத்தில் வியர்க்க வைக்கும் வெயில், வாகனம் ஓட்ட பார்வை மறைக்குமளவிற்கு ‘மவனே… வச்சுக்கோ!’ என்று அடித்துப் பெய்யும் மழை, குளுமை என எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது.

இருமங்கிலும் பெரும் நீர்நிலைகள், மலைகள், வயல்கள், ரப்பர் தோட்டங்கள், இலவங்கக் காடுகள் பரவிக் கிடக்க இதனூடே ஒரு லேசாக வளைந்து நெளிந்து படுத்துக் கிடக்கும் வெள்ளை கோடுகள் கொண்ட ஒரு பெரிய பாம்பைப் போன்ற சாலையில் பயணிக்கிறேன்.

தொடர் பயணத்தை இலகுவாக்கி தளர்வடைய ஒரு நெடுஞ்சாலை உணவகத்தில் ‘தே’ (தேத்தண்ணீர், தேநீர்) அருந்த நிறுத்தையில் என் மனைவியை கவர்ந்தது இந்த இலை அப்பம். அறுபது ரூபாய்க்கு தருகிறார்கள்.

நல்ல சுவை. வெல்லம் இட்ட உணவுகள் என்றாலே ‘நல்ல’ சுவை கொண்டவைதானே! வெல்லத்தை விட்டு சர்க்கரையை கொண்டதில் ‘சர்க்கரை’யை கொண்டது நம் உலகம்.( சர்க்கரை மட்டுமே சர்க்கரைக்குக் காரணமல்ல**)

#ParamanInSriLanka

– பரமன் பச்சைமுத்து
காலுதர, இலங்கை
18.06.2018

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *