சுயசரிதையில் வருத்தத்தை வெளிப்படுத்தும் சச்சின்

sachin

sachin

வெளிவருவதற்கு முன்பே, கிரேய்க் சாப்பல் வீட்டிற்கு வந்து இப்படியெல்லாம் பேசினார், என் மனைவி அஞ்சலியும் நானும் இப்படியெல்லாம் வருந்தினோம் என்று சர்ச்சை கட்டி தனது சுயசரிதை நூல் பற்றிய எதிர்பார்ப்பைப் பற்ற வைத்த சச்சின், தனது ‘ப்ளேயிங் இட் மை வே’ நூலை வெளியிட்டு விட்டார். தனது பெயரை பெரிதாகப் போட்டு, நூலின் பெயரை சிறிதாகப் போட்டது சாமர்த்தியம்.

கேள்விப்பட்டது:
‘நான் கேட்ட அணியை எனக்கு எப்போதும் கொடுக்கவே இல்லை. தேர்வாளர்கள் விரும்பிய அணியை வைத்துக்கொண்டு என்னால் மேஜிக் செய்ய முடியவில்லை. அதிலும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்டில் 120 ரன்களைக்கூட குவிக்க முடியாமல் 80 ரன்களில் சுருண்டதுதான் என் கேப்டன் வாழ்வில் மிக மோசமான நாள்!’ – கேப்டன் பதவியில் ஜொலிக்க முடியாதது குறித்து அப்போதைய அணி மற்றும் தேர்வாளர்கள் குறித்து பெரும் வருத்தம் சொல்லி எழிதியிருக்கிறாம் சச்சின். மிகவும் சீனியர் பிளேயர்கள், அப்போதுதான் அறிமுகமான பிளேயர்கள்… இரு தரப்புக்கும் இடையே புரிதலைக் கொண்டுவர முடியாமல் தடுமாறி, பேட்டிங் ஃபார்மும் பாதிக்கப்பட்டுவிட்டதாக வருந்தியிருக்கிறார் சச்சின்.

படிப்போம்!

– பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *