‘இடக்கை’ – எஸ் ராமகிருஷ்ணன்

மன்னர்களின் நினைவுகள் மட்டுமே திரும்பத் திரும்ப காலங்களைக் கடந்தும் கடத்தப்பட்டாலும், வரலாறு என்பது சாமான்யகளாலும் ஆனதுதானே. பாரத கண்டத்தின் பெரும் பாதுஷா இறக்கும் தருணங்களிலிருந்து ஆஜம்கான், பகதூர்ஷா, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஹேஸ்டிங், பென்டிங் வரும் வரையில் சாமானயர்களின் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகளை புனைவு செய்து கண் முன்னே விரிக்கிறது இந்நாவல்.ராணிகள், ஆசை நாயகிகள், சேவகர்கள், பணியாளர்கள் என ,பாதுஷா ஔரங்கசீப்பின் அந்தப்புரம் முழுவதும் பெண்களாலும் திருநங்கைகளாலுமே நிரம்பியிருந்தன. மகனாக இருந்தாலும் ஆண்கள் எவரும் ( மன்னரைத் தவிர) அந்தப்புரத்தில் நுழைய முடியாது, துரோகங்களும் வஞ்சனைகளாலும் மனம் நொந்து கிடந்த ஔரங்கசீப்பின் இறுதி நாட்கள், அவரது அனுக்கப் பணியாளராக இருந்த திருநங்கை என புனைவு கண் முன்னே காட்சிகளை விரிக்கிறது.முக்கிய பாத்திரமொன்றின் வழியே சொல்லப்படும் கதையை விட ஊடாக பயணிக்கும் சில பாத்திரங்களே நம்மைக் கவர்கின்றன. சத்கர் பஜார் என்னவெல்லாம் ஆகி விக்டோரியா பஜார் ஆனது என்று சொல்லும் இந்த நூலின் வழியே பயணிக்கும் போது இரண்டு எண்ணங்கள் வெளிப்படுகின்றன.ஒன்று – இத்தனை விவரங்கள் சேர்க்க எவ்வளவு உழைத்திருப்பார் இந்த எஸ்.ராமகிருஷ்ணன்? இரண்டு – சத்கர் நகரைப் போலத்தானே, ஒவ்வொரு ஊரும் எத்தனை மாறுதல்களுக்கு ஆட்பட்டிருக்கும்? ஊர்களெல்லாம் வேறாகத் தெரிகின்றன.எஸ். ராமகிருஷ்ணன் எழுதி முதலில் உயிர்மையிலும், இப்போது எஸ்ராவின் சொந்த பதிப்பகமான தேசாந்திரியிலும் வந்திருக்கிறது – ‘இடக்கை’இதை வாங்கி எனக்கு அனுப்பி வைத்த நண்பன் ராம்ஜீ நரசிம்மனுக்கும், முத்துவிற்கும் நன்றிகள்( இரண்டு பிரதிகள் வந்து விட்டன!)சிலருக்கு இந்நூல் பிடிக்கும்.- பரமன் பச்சைமுத்துசென்னை30.09.2018Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *