சுமந்து செல்லும் சங்கதிகளால் கழுதைக்கும் மரியாதை வருகிறது

கோவையில் இறங்கிய விமானம் விட்டு இறங்கி பெட்டியை பெற்றுக் கொள்ளும் வரிசையில் நிற்கிறேன்.
யாரோ நம்மையே உற்றுக் கவனிப்பது போலொரு பிரஞ்ஞை வந்து அப்பக்கம் பார்க்கிறேன். சிரித்து கை நீட்டுகிறார் ஒருவர்.

‘பரமன் சார்… நான் @#*#@*#”, பொள்ளாச்சி நேச்சுரல்ஸ்!’

‘ஓ மகாலிங்கம் பார்க் கார்னர் ஹெச்டிஎஃப்ஸி பக்கத்துல!’

‘ஆமாங்க!’

….

கோவையில் தோசார்ட் திறப்பு விழா முடிந்து, ‘சீரகம் – நற்பொருள் குவியகம்’ செல்கிறேன். அங்காடியிலிருந்து பொருளை வாங்கிக் கொண்டு வெளியே போன இருவர் திரும்ப உள்ளே வருகின்றனர்.

‘வணக்கம். பேரண்ட்டிங் பத்தி வாட்ஸ்ஆப்ல வந்த ஒரு வீடியோல உங்கள பாத்திரிக்கேன். இங்க நேர்லயே பாத்ததும், வெளியே போனவன் திரும்ப வந்துட்டேன். உங்கள பாக்க!’ – என்றபடி கை நீட்டுகிறார்.

என் வாய் முணுமுணுக்கிறது,
‘பகவத் கீதையை, பைபிளை, குரானை சுமந்து செல்லும் கழுதைக்கும் மதிப்பும் மரியாதை கிடைக்கிறது, அது சுமந்து செல்லும் சங்கதிகளால்’

– பரமன் பச்சைமுத்து
கோவை விமான நிலையம்,
25.11.2018

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *