‘நெல்’ ஜெயராமனுக்கு மலர் அஞ்சலி

‘அரிசிதான் உங்களது உடல் பருமன், சர்க்கரை என எல்லா நோய்களுக்குமான காரணம்!’ என்றொரு பிரச்சாரம் ஒரு பக்கமாய் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மறுபக்கம் ‘இந்தா கருப்பு கவுனி, இதோ மாப்பிள்ளைச் சம்பா, இதோ குழியடிச்சான், இத சாப்டுட்டு அப்புறம் சொல்லு!’ என்று பாரம்பரிய ரக நெல்களை மீட்டுத்தந்து இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்தவர் ‘நெல்’ ஜெயராமன்.

174 வகை பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்து சமூகத்திற்கு அளித்தவர். அதிகம் படிக்காமல் தனது பங்களிப்பின் மூலம் படித்தவர்களை விவசாயத்திற்கு வரச் செய்தவர்.

‘நெல்’ ஜெயராமனுக்கு மலர் அஞ்சலி!

நம்மாழ்வாரின் பணியினால் கவரப்பட்டு நெல் ஜெயராமனால் உயிர்ப்பூட்டப்பட்டு வளர்ந்த பாரம்பரிய விவசாயம், அவரால் நேரடியாக உருவாக்கப்பட்ட அந்த 40,000 விவசாயிகளின் வழியே தொடரட்டும், பல்கிப் பெருகட்டும்.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
06.12.2018

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *