மார்கழி மாலை

சென்னை நகரில்,
காற்றோட்டமான அமைப்பு கொண்ட வீடுகளில் பகல் நேரங்களில் மின்விசிறிகள் ஓடவில்லை. வயதானோர் இருக்கும் வீடுகளில் மாலை நான்கரை மணிக்கு சன்னல்கள் அடைக்கப்படுகின்றன, வேகமாய் வீசும் காற்றில் குளிரெடுக்கிறது அவர்களுக்கு என்பதால்.

அதிகாலையில் மெதுவாய் எழுந்து பின்பு தடதடவென்று புறப்பட்டு எட்டரைக்கு மேல் வீட்டுக்கு வெளியே வரும்படியான வாழ்வு முறையைக் கொண்ட நகரத்து மக்கள், என்ன நடக்கிறதென்பதை சுதாரித்து உணர்வதற்குள் கடந்து போய் விடப் போகிறது மார்கழிப் பனி.

மாலை ஐந்து மணிக்கு ஆர் ஏ புரத்தில் இருபத்தியாறு டிகிரி என்பது சுகமானது. சென்டையிலேயே இப்படியென்றால், ஊர்ப்புறங்களில் இன்னும் பனி இறங்கி அடிக்குமே!

– பரமன் பச்சைமுத்து
மெரினா,
21.12.2018

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *