‘சீதக்காதி’: திரைவிமர்சனம்: பரமன் பச்சைமுத்து

seethakathi_151607775300

seethakathi_151607775300

இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது ஒரு புறம் இருக்கட்டும், மற்றவர்கள் எவரும் தொடக் கூட அஞ்சும் ஒரு கதையை எடுத்துக் கொண்டு முயற்சித்துப் பார்க்கும் அந்த துணிச்சலுக்காகவே ஒரு பூங்கொத்துத் தரலாம் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும்.

ஐம்பது நிமிடத்திற்குக் குறைவாக வந்தாலும், நிறைவாக நிதானமாக கேட்டதை தந்திருக்கிறார் விஜய் சேதுபதி ‘எந்தப் படத்தில் எந்த ரோலில் ஏன் மணிரத்னம் படத்தில் நடித்தாலும் கூட, ஒரே மாதிரி மாடுலேஷனில் மோனோ டைப்பாகவே செய்கிறார் விஜய்சேதுபதி! என்று என் போன்றவர்கள் வைத்திருந்த குற்றச்சாட்டை உடைத்து விட்டார் தனது இருபத்தியைந்தாவது படமான இந்தப்படத்தில். குறிப்பாக அந்த ஒரு நீளமான ஷாட்டில் அந்திம காலத்து ஔரங்கசீப்பாக வரும் இடம், (மூச்செல்லாம் இரைக்கும் வயோதிகம்!) நம்மை ஒன்றிப் போக வைக்கிறார்.

மௌலி அட்டகாசமாக செய்திருக்கிறார்.

முற்றிலும் வேறான இரண்டாம் பாதி நீளமாக இருந்தாலும் சிரிக்க வைக்கிறது.

‘ஔரங்கஜீப்’, ‘விசாரணை’, சுஜாதாவின் ‘ஊஞ்சல்’ என்று பெரியவர் நடித்தகாலங்களில் ‘ஐயா’ என்றும், அவரது மறைவுக்குப் பின்னே சினிமா பெயரில் ‘அய்யா’ என்றும் வருவது போல சீர்திருத்த எழுத்துகளின் காலகட்டம் வரை பார்த்து பார்த்து செய்தவர்கள், இன்னும் கொஞ்சம் நறுகென்று தந்திருக்கலோமே என்று எண்ணுவதை தவிர்க்க முடியவில்லை.

எல்லோருக்கும் பிடிக்குமா என்று தெரியவில்லை. ‘2.0, சீதக்காதி என தமிழ் சினிமாவிற்கு இது ‘ஆன்மா’ சீசன் போல!’ என்று கடந்துவிடாமல், இந்த முயற்சியை பாராட்டலாம்.

வி டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘சீதக்காதி’ : வித்தியாசகளம். சிலருக்கு பிடிக்கும்.

  • திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *