சோப்பு நுரை

கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து பரந்துள்ள, வீராணத்தை விடப் பெரிதான ஏரியொன்றின் மேற்பரப்பில்
எவரோ சோப்பு நுரையைப் போட்டு வைத்தது போல் இருக்கிறது விமானத்திலிருந்து வான வெளியைக் காண்பதற்கு.

கீழே எல்லாமும் எறும்பைப் போல் தெரியும் இந்த உயரத்தில் இருக்கையில், உயரப் பறக்கும் ராஜாளிப் பறவையின் ஆற்றலின் மீது பெரும் மரியாதை வருகிறது. உயரப் பறக்கும் கழுகிற்கும் ஊர்ந்து நகரும் பாம்பிற்கும் கணக்கை வைத்த இயற்கையின் சக்தியை எண்ண பிரபிப்பு வருகிறது.

– பரமன் பச்சைமுத்து
சென்னை – கோவை – வானில்
28.02.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *