நடிகர் விஜய்யின் அப்பா, ஆளுஞர் தமிழிசை அவர்களோடு பயணித்தத் தருணங்கள்

நேற்று இரவு மலர்ச்சி பட்டமளிப்பு விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் பற்றி ஒரு குறிப்பை சொல்லிவிட்டு, அதிகாலை தூத்துக்குடி விமானத்தில் ஏறி அமர்ந்தால், எனக்கு முன்னிருக்கையில் மேதகு ஆளுநர் – தெலுங்கானா திருமதி தமிழிசை சௌந்த்தரராஜன் அவர்கள்.

உள்ளே நுழைந்த உடனேயே குட்மானிங் மேடம், யு ஆர் இன்ஸ்பயரிங்!’ என்று நான் சொன்னதை புன்னகைத்து தலையசைத்து ஏற்றுக் கொண்டார். (ஸ்ட்ரெயினிங் செய்து அழகாகத் தலை வாரியிருந்தார்!)

‘இப்போ… ஜிஎஸ்டி ஃபார்ட்டி லாக்ஸ் என்பது ட்ரான்சாக்‌ஷன்லயா, இல்ல ப்ராஃபிட்லயா? புரியல!’ என்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து அவரிடம் கேட்டவரின் குரல் தெரிந்த குரல். அட… இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர்.

இறங்கியதும் தூத்துக்குடி விமானநிலையமே பரபரத்தது. எங்கும் பாதுகாப்புப் படையினர். இறங்கும் போதே இருவரும் புன்னகைத்துக் கொண்டோம் மரியாதை நிமித்தமாக.

விஜய் ரசிகர் மன்ற கொடி கட்டியிருந்த காரில் எஸ்ஏ சந்திரசேகர் ஏறிப் போய்விட்டார்.

‘ச்சே… ச்சே… பேட்டி குடுப்பாங்கன்னு பாத்தேன். அப்படியே போயிட்டாங்க’ என்று யாரிடமோ செல்லிடப் பேசியில் சொல்லிக் கொண்டிருந்தார் கழுத்தில் கேமரவை மாட்டியிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர்.

‘போட்டி தர்லியா அவங்க!: என்ற என்னிடம், ‘ஆமாண்ணே. அப்படியே போயிட்டாங்க!ச்சே!’ என்றார்.

முகம் கழுவியபடியே நினைத்துக் கொண்டேன், ‘என் முன்னாடி சீட்லதான் ஒரு மணி நேரம் இருந்தாங்க. சும்மா உட்கார்ந்திருந்தாங்க. இந்த பத்திரிக்கைக்கார ர் ஒரேயொரு ஃபைளைட் டிக்கெட் எடுத்திருந்தா, ஒரு மணி நேரம் முழு இண்டர்வ்யூ பண்ணி பெரிய கவரேஜ் பண்ணிருக்கலாமே! இங்க நிண்ணு காத்திருந்து உட்டுட்டாரே!’

மலர்ச்சி அன்பர்கள் எனை வரவேற்க அவர்களை நோக்கி நான் குத்தாலிங்கத்தோடு நடக்கிறேன்.

வணக்கம் தூத்துக்குடி

– பரமன் பச்சைமுத்து
தூத்துக்குடி
28.09.2019

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *