பாலாறு

தமிழகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கிலோ மீட்டர் அளவு அகலம் கொண்ட ஓர் ஆற்றைக் கடக்கிறோமென்றால், அதிக பட்ச வாய்ப்பு அது பாலாறாக இருக்கலாம்.

சென்னைக்கும் – இடைக்கழிநாடு, காத்தான்கடை மரக்காணம் பகுதிக்கும் இடையே எப்போதும் மணல்வெளியாகவே காட்சி தரும் பாலாற்றில் இன்று நீர் இருப்பதைக் கண்டு இறங்கி விட்டேன். ஆந்திரத்திலிருந்து வந்து ஓடும் நீரல்ல. கடந்த சில நாட்களாக அடித்து ஊற்றிய மழையால் தேங்கி நிற்கும் நீர். இருக்கட்டுமே! ‘தேங்கிய நீர், டெங்குக்கு வாய்ப்பு!’ என்று விஜயபாஸ்கர் வந்து அபராதம் விதிக்கப் போவதில்லை இங்கு.

தேங்கிய இந்த நீர், பூமிக்குள்ளே ஆழ இறங்கி நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தும். நிலத்தில் உயிர்கள் செழிக்கும். தேங்கிய இந்த நீருக்குள்ளே நீர் உயிர்கள் உயிர்த்தெழும்.

நீருக்கு மேலை நிறைய நாரைகள் தீபாவளி கொண்டாடுகின்றன மகிழ்ச்சியாய்.

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
கிழக்குக் கடற்கரைச் சாலை,
01.11.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *