இன்று நடந்த வளர்ச்சிப்பாதை பலரது பல நாளைய கேள்விகளுக்கு விடை பகன்றது,

கடைசி வரிசையில் இருந்த அருண் சுப்பு ரங்கன், பாலகிருஷ்ணன், ஹரிஹரன், தேவநாதன் எல்லாம் வெகு தூரத்தில் இருப்பது போல ‘அரங்கு நிறைந்த’ வளர்ச்சிப் பாதை இன்று மாலை, புதுச்சேரியில்.

சிதம்பரத்திலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும், விழுப்புரத்திலிருந்தும், சென்னையிலிருந்தும் மலரவர்கள் கூடியிருந்தனர். வள்ளி விலாஸ் ரமேஷ், சதீஷ் (விநாயக முருகன் பேக்கரி), வெங்கட லட்சுமி, சூர்யா என்டர்ப்ரைஸ்ஸ் ரமேஷ், நித்யரமா வெங்கடேஷ், சென்னை அனந்தலட்சுமி (காயத்ரி விஜய்யின் அன்னை), கோபிநாத், முருகவேள் என மலரவர்களின் எல்லாப் பகிர்வுகளும் நன்றே எனினும் சிதம்பரம் சுப்ரமணியின் பகிர்வு சிறப்பானது.

ஈராயிரத்து இருபதை எப்படி எதிர்கொண்டு சிறப்பாக உயர வேண்டும், அதற்கான நிலைகள், வழிகளை விளக்கியது வளர்ச்சிப் பாதை.

சபரியைக் காணவில்லை. பாலா – ஹரிஹரன் – சிவவேலன் செய்திருந்த ஏற்பாடுகள் சிறப்பு.

இன்று நடந்த வளர்ச்சிப்பாதை பலரது பல நாளைய கேள்விகளுக்கு விடை பகன்றது, பெரும் வளர்ச்சிக்கான பல்விதைகளை பலரின் உள்ளே ஊன்றியுள்ளது. இறைவனை வணங்கி, அகமகிழ்வோடு சென்னைக்குப் பயணிக்கிறேன்.

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
கிழக்குக் கடற்கரைச் சாலை.
11.12. 2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *