ஏவிசிசிபி அலுமினி மீட் – குறிப்பு 2

wp-15776884944681882161469791835393.jpg

AVCC Polytechnic 91 Batch Alumni Meet’

குறிப்பு – 2:

பத்தாம் வகுப்பே படித்த பெண்கள் பத்தாம் வகுப்பு முடித்த பல – பன்னிரண்டாம் வகுப்பு முடித்த சில ஆண்கள் என்றளவிலேயே பக்குவம் கொண்ட சிறு பிள்ளைகளாக இருந்த நாங்கள், ‘இருபத்தியெட்டு ஆண்டுகள் கழித்து முதல் முறையாக சந்திக்கிறோம்!’ என்ற நிலையில் இந்த எண்ணமே இதயத்தை ‘ரன்வே’யில் விரையும் விமானத்தைப் போல் விரைவாக ஓடச்செய்தது.

கலவையான உணர்வுகள் பொங்க நாற்பத்தியைந்து நிமிடம் முன்பே ஹோட்டல் சவேராவுக்கு வந்து ‘பைன் ஹால்’லில் முரளி நாராயணனுக்குக் காத்திருந்த போது, ‘ஹாய் பரமன்!’ என்று அழகாகச் சிரித்துக் கொண்டே வந்து இன்ப அதிர்ச்சி தந்தது பெங்களூருவிலிருந்து வந்த பாலமுருகன்.
….
டெல்லியில் ஏர்ஃபோர்ஸில் இருந்த பாலமுருகன் பெங்களூருவுக்கு வந்த போது (13.12.2007) நான் பெங்களூருவில் இருந்தேன். பெரும் நிறுவனமான ‘யூனிஸிஸ்’ஸில் சிஸ்டம் ஆர்க்கிடெக்ட் என்ற உயர்பதவியில் இருக்கும் பாலமுருகனோடு நிறைய பேச முடிந்தது. அதே பாலமுருகன், அதே சிரிப்பு! ( முதல் பெஞ்ச், படிக்கிற பிள்ளை!). அருள்மொழி அதே யூனிஸிஸ்ஸில் இவர் இருக்கும் அதே கட்டிடத்தில்தான் பணியாற்றுகிறாராம்.(நம்பர் கொடுங்கள் ஐயா. இந்தப் படங்களை, பதிவுகளைப் பகிருங்கள் அவரிடம்)
….

அடுத்த சில நிமிடங்களில், கருகரு முடியோடு கட்டம் போட்ட சட்டை அழகான கண்ணாடி என கார்ப்பரேட் கம்பீர முரளிநாராயணப் பிரவேசம்.
…..
டெல் ஈஎம்சியின் பல மில்லியன் கணக்குகளை ஆசிய – ஐரோப்பிய – பசிபிக் – அமெரிக்க வர்த்தகத்தை நிர்வாகத்தை ஊழியர்களை மேலான்மை செய்யும் முக்கிய இயக்குனர் என்பதும், முதுகலைப் பட்டம், மேகக்கணிணி, மெய்நிகர் தொழில்நுட்பம் என்று கலக்குவதும், அதைவிட மிக மிக முக்கியமாய் அமெரிக்க கழகத்தில் தனது பெயரில் சில ‘பேட்டன்ட்’களை வைத்திருக்கும் வல்லுஞர் என்பதும் பெரும் பெருமைக்குரிய சங்கதிகள்.

(‘வெளியில் வரும் போது 12 பேப்பர்’ என்று தொடங்கி இன்றைய நிலை வரை முரளி விவரித்தது ஓர் உற்சாக டானிக்காக இருந்த்து)

‘நெற்றியில் அதே திருமண், நான் அதே நாதமுனிதான்!’ என்று வந்து அசத்தினார் நாதமுனி.

…..
சிங்கப்பூர், மலேசியா என்று முரளிப்பிரகாஷோடு பல இடங்களில் இருந்து பின்பு பெங்களூரில் இருந்து, சென்னைக்கு மாற்றலாகி வந்து இங்கேயே குடியமர்ந்து விட்ட நாதமுனி மேலாளராக இருக்கிறார். வசிப்பது காரப்பாக்கம். தனது செல்லப்பிராணி நாய் பற்றி நாதமுனி சொன்னது நெகிழ்ச்சி
…..

திருவண்ணாமலையிலிருந்து பயணித்து நேராக சவேராவில் வந்து இறங்கிய சபா, அன்று போல் இன்றும் அதே மாதிரி மழிக்கப்பட்ட முகத்தோடு இருந்தார்.

திருவண்ணாமலையில் வசிக்கும் சபாவின் மகள் பெங்களூரில் படிக்கிறார். தனது எம்ஐடி கம்ப்யூட்டர் சென்டர் உருவான விதம், அது பல்கலைக்கழகங்களுக்குச் செய்யும் பங்கு, திருவண்ணாமலைக்கு அவர் வந்த கதை என அவர் சொன்ன அத்தனையும் சுவராசியம். அதிலும் அவர் திருமணம் பற்றிச் சொன்னது கூடுதல் சுவராசியம்.

கல்லூரியின் இறுதியாண்டு கலைக்கழக நிகழ்ச்சிகளில் தான் எழுதி இயக்கி நடித்த அந்த நாடகம் பற்றியும், அதில் என் (பரமன்) பாத்திரம் பற்றியும் நினைவு கூர்ந்து அதை இன்றைய நிதர்சன வாழ்வோடு இணைத்துக் கட்டிக் காட்டியது ‘அட…!’ தருணம்!

……

ராஜவேல்… அதே ராஜவேல். தனது நிறுவனம் பற்றியும் பழைய கூட்டாளிகளைப் பற்றியும், மனைவியைப் பற்றியும், திருவாவடுதுறையைப் பற்றியும் விளக்கிய போது… அதே பழைய ராஜவேல் தெரிந்தான்.

ராஜவேல், சமீபத்தில் இருபத்தியைந்தாவது ஆண்டு விழாக் கொண்டாடிய ‘மாஸ் கம்ப்யூட்டர்’ என்ற திறுவனத்தின் நிறுவனர். தாய் தந்தையரோடு சென்னை கொளத்தூரையடுத்த பூம்புகார் நகரில் வசிக்கிறான்.
……

( தொடரும் – என்று நினைக்கிறேன்)
குறிப்பு – 2

– பரமன் பச்சைமுத்து
சென்னை
28.12. 2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *