இளநீர்… இளநீர்!

wp-15811451877651185453074450219831.jpg

இலங்கையின் கொழும்பு நகரில் கிடைக்கும் இளநீர், சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கிடைக்கும் மலேசியா இளநீர், தானே புயலுக்கு முன் கிடைத்த புதுச்சேரி இளநீர்,  தமிழகத்தின் பிற ஊர்களுக்கு அனுப்பப்பட்டு சில தினங்கள் கழித்துப் பருகப்படும் பொள்ளாச்சி இளநீர்,  பறித்த அன்றே குடிக்கும் போது ‘சுருக்’ என்று இருக்கும் பொள்ளாச்சி இளநீர் என ஒவ்வொரு இளநீரும் ஒவ்வொரு சுவையைக் கொண்டிருக்கிறது. 

இது சேலத்தில் கிடைக்கும் காங்கேயம் இளநீர்.

இரவில் இளநீரை வெட்டி சிறு துளையிட்டு வானம்  பார்த்து வைத்து விட்டு அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகப்படும் சித்த மருத்துவ முறை இளநீரும், நூற்றுக்கணக்கான தென்னைகள் சூழ இருக்கும்  தங்கள்  வீட்டில் அதிகாலையில் இளநீரை இறக்கி வெட்டி அப்படியே அதனுள்ளே பனைவெல்லத்தை கொட்டி குடிக்கச் சொல்லி தரும் அன்புமிகு பொள்ளாச்சி கவுண்டர்கள் தரும் கருப்பட்டி இளநீர் ஆகியவற்றின் சுவை ‘ஏவிடி கோல்ட் கப்’ டீயின் விளம்பர வரிகளில் வருவதைப் போல… ‘சொன்னால் புரியாது, சுவைத்தால் மறக்காது!’

– பரமன் பச்சைமுத்து
சேலம்
08.02.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *