ஆ….!

‘வயின்ஷாங் ஹா!’

‘தம்பீ, என்னாட சொல்றே!’

‘அம்மா… இந்த ஊர் பாஷையில மாலை வணக்கம்ன்னு அர்த்தம்மா. ஃபோன எடுத்தாலே ‘வயின்ஷாங் ஹா, வைன்ஷாங் ஹா’ன்னு சொல்லி சொல்லி பழகி, உன்கிட்டயும் அப்படியே பேச்சுல வந்துருச்சிம்மா!’

‘பொண்ணு பாத்திட்டுருக்கோம் தம்பீ. கும்பகோணம் போற வழியில நாச்சியார் கோயிலுக்கு முன்னால உள்ள போனா இருக்காம் ஒரு ஊரு. அங்கேருந்து ஒரு தகவல் வந்துது. சொந்தம் இல்ல. நம்ம சாதிக்காறங்கதான். பொண்ணு படிச்சிருக்காம். செவப்பா கலரா இருக்குமாம். அப்பா அந்தக்கால மணியகாரராம். காரை வூடாம். தம்பி உன்ன மாரியே வெளிநாட்டுல வேல செய்யறானாம். ஏதோ துப்பாயோ, துப்பாயோ அங்க இருக்கானாம்’

‘துபாய்ம்மா!’

‘அது என்னவோ எனக்கு வரல தம்பீ! நீ நல்லா இருக்கியா?’

‘லீவு கேட்ருக்கன்மா. எனக்கு மாத்து ஆளுங்க யாராவது வந்தாதான் நான் இந்தியா வர முடியும். கம்பெனிகிட்ட கேட்ருக்கேன். இப்ப ஒரு பத்து நாளு கடைங்கள்லாம் மூடிட்டாம். பள்ளிக்கூடம், ட்ரென்யின், ஓட்டல்ன்னு ஒண்ணுமே இல்ல. எல்லாம் மூடிட்டாங்க. எல்லாம் ஒரு மாஸ்க்க போட்டுட்டுத்தான் போறாங்க. இங்க வந்து ஒரு மாசம்தானே ஆச்சு, பாஷை இன்னும் முழுசா புரியல. ஏதோ பந்த், ஸ்ட்ரைக் பண்றாங்கன்னு நெனைக்கறேன்.’

‘தம்பீ, ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?’

‘திடீர்ன்னு சளி பிடிச்சிக்கிச்சு, மூக்கடைப்பு, தொண்டை ஒரு மாதிரி இருக்கு, மூச்சுக்கூட திணற மாதிரி இருக்கு!’

‘தம்பீ பாத்துக்கப்பா!’

‘அம்மா, குரோசினையும் டோலோ 650ஐயும் ஊர்லேருந்தே கொண்டு வந்திருக்கேன். போட்டுட்டு படுக்கப்போறேன். நாளைக்கு பேசறேன்ம்மா. வச்சிடறேன். ஓக்கே!’

அழைப்பைத் துண்டித்து விட்டு, அந்த அறையின் கட்டிலில் படுத்து கண்ணை மூடினான் தமிழ்நாட்டிலிருந்து சென்ற மாதம் சீனாவுக்கு வந்த வசந்த்.

சீனாவின் ‘வூகான்’ பகுதியின் மையப் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில்  இருந்தது அவனது அறை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *