விவசாயப் பொருட்களுக்கு தடை விலக்கல் – நல்ல செய்தி!

இன்று விவசாயப் பொருட்களுக்கு தடை விலக்கல் செய்திருக்கிறது அரசு. மிக மிக நல்ல செய்தி.  தர்ப்பூசணிப் பழங்களை, வெள்ளரிக்காய்களை இனி மனம் நொந்து வீதியில் கொட்ட மாட்டார்கள் விவசாயிகள். தவிர, தோட்டங்களில் விளைவது மக்களுக்குத் தொடர்ந்து சென்றால்தான் விவசாய உற்பத்தியாளர்கள் நுகரும் பொது மக்கள் என இருபுறங்களிலும் தொடர்ந்த சீரான இயக்கம் இருக்கும். பொருட்களும் கிடைக்கும் பதுக்கல் குறையும் விலையும் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். வரும் நாட்களுக்கு இது மிக மிக முக்கியமானது. 
….

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடைக்காக காத்திருந்த 60 ஏக்கர் நெற்பயிற்களைக் குறித்து செய்தி வெளிட்டு மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு போன அந்த செய்தியாளருக்கும் (தினமணி), அதைக் கண்டு உடனே தடையை நீக்கி திருவள்ளூரிலிருந்து அறுவடை இயத்திரங்களை வரவைத்து அறுவடையை நடத்திய மாவட்ட ஆட்சியரையும் பாராட்டுகிறோம்.

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
30.03.2020

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *