ஜெயகாந்தன்

அடுத்தது என்ன என்ற விறுவிறுப்பு, கதை சொல்லலில் கீழே வைக்க முடியா வண்ணம் சுவாராசியம், ‘ப்பா!’ என்று வியக்க வைக்கும் செறிவுள்ள வாழ்வியல் கருத்துக்கள், ‘பொளிச்’ என்று அறையும் நிதர்சனங்கள், ‘உணர்க்கை’ போன்ற வித்தியாச சொல்லாடல்கள், எல்லா இலக்கணங்களையும் உடைக்கும் கதாபாத்திரங்கள்…

ஒவ்வொரு எழுத்தாளரும் இவற்றில் சிலவற்றைக் கொண்டிருப்பார்கள். ஒரே எழுத்தாளர் ஒரு நூலில் இத்தனையையும் வைத்திருந்தால்…

அதுவும் அந்த நூலை அவர் 1971ல் எழுதியிருந்தால்…

நான் அசந்து போய் விழுந்து கிடக்கிறேன்!

எழுத்தாளர் : ஜெயகாந்தன்
நூல்: ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    12.04.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *