மதுவில்லாத் தமிழகம்

மதுக்கடைகள் இல்லாமலிருந்தால் மடிந்துவிடுவார்கள் குடிமகன்கள், போதையில்லாமல் போனால் போதைக்குப் பழகியவர் பொலபொலவென விழுவார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்.

போதை தேடி ஜசோப்ரோபைல் ஆல்ஸகாலை, மருந்தக ஸபிரிட்டை குடிக்க முயன்று செத்தவர்கள் வெறும் பத்துப் பேருக்குக் கீழேதான் மொத்தத் தமுழ்நாட்டிலும். மீதி குடிமகன்கள் என்னவானார்கள்? முப்பத்தேழு நாட்களாய் குடியின்றிதானே முழுதாய் வாழ்கிறார்கள். அப்படியானால்… எந்த மருத்துவமும், எந்த ஆலோசனையும் எந்த சட்டமும் செய்ய முடியாத அதிசயத்தை இந்த நோய்த்தொற்று ஊரடங்கு செய்திருக்கிறது.

தானாகத் தமிழ்நாட்டுக்குக்கு வந்த மதுவிலக்கை தொடர்வது தலைமுறைகளை காப்பாற்றும். இயற்கையே ஏற்படுத்திய மதுவிலக்கை அப்படியே தொடர்வது இன்பத்தை விளைவிக்கும் இன்னும் வரும் தலைமுறைகளுக்கெல்லாம்.

தகப்பன்கள், கணவர்கள், தம்பிகள், அண்ணன்கள் மீட்டெடுக்கப் படுவார்கள் குடும்பங்களுக்கு, வேர்வையில் விளைந்த ஊதியம் விரயமாகமல் செல்வமாக திரும்பும் குடும்பத்திற்கு. ‘தறுதலைகள்’ ஆகாமல் தலைசிறந்தவர்களாக மாறும் அடுத்த தலைமுறை.

எதற்கும் தீர்வும் ஆய்வும் செய்யும் அரசு, வருவாய் ஈட்ட மாற்று வழி பார்க்கட்டும். பொருளாதார தொழிற்துரை மேதைகள் ஆலோசனைகள் வழங்கட்டும். அப்படிச் செய்யும் போது இவ்வரசு தமிழகத்தின் வரலாற்றில் தன் பெயரை கல்வெட்டில் எழுதிப் போகும், நல்லரசு என்று நானிலம் போற்றும், நல்வாழ்க்கையில் மாநிலம் உயரும்.

நல்லது நடக்கட்டும், நம் மக்கள் வாழ்வு செழிக்கட்டும்!

நற்பவி! நற்பவி! நற்பவி!

வாழ்க! வளர்க!

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    01.05.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *