வையம் மேம்பட, வைக்கோலில் வந்துதித்தவனே…

Xmas1 - Copy

Xmas1

மாக்களாயிருந்தோரை,

மக்களாய்

மாற்றிடவே

மரதச்சன் வீட்டு

மாட்டுத்தொழுவத்தில்

மலர்ந்தவனே…

 

வையம் மேம்பட,

வைக்கோலில்

வந்துதித்தவனே

வணங்குகிறோம்!

 

தன் கருத்துக்களை நிலைநாட்ட

எவர் உயிரையும் எடுக்கலாம்

என்ற விதிகொண்ட உலகில்,

தன் உயிரையே கொடுத்து

உயர் கருத்துக்களுக்கு

உயிர் கொடுத்தவனே…

 

எபிரேயம் இயம்பிய

எருசலேமின்

ஏசுவே…

 

முப்பது வெள்ளிக்காக உன்னைக்

காட்டிக் கொடுத்த ஜுடாஸின் மீது

வெறுப்பில்லை எனக்கு.

இல்லையென்றால், இப்படி ஒரு அன்பு,

உயர்நெறி தெரியாமலே போயிருக்குமெங்களுக்கு.

 

சதைகள் பிய்யப் பிய்ய,

ரத்தம் சொட்டச் சொட்ட

துன்புறுத்தி சிலுவையில் அறைந்து

கொன்றவனுக்குக் கூடப் பிரார்த்தனை

செய்தவனே…

 

பாவி என்றிகழப்பட்டு

கல்லால் அடிக்கப்பட்ட

மேரி மேக்தலினுக்கு

மதிப்பளித்து என்

மனதைத் திருடியவனே…

 

அடிப்பவன்தான் ஆள்வான் என்ற

வன்முறை உலகில்

அன்பால் ஆள்பவனே…

 

வெள்ளியில் மரித்து

ஞாயிறில்

ஞாயிறாய் உயிர்த்தெழுந்தவனே…

 

மனித குலத்தின் மரித்துப்போன

கனவுகள்

உயிர்த்தெழ

உதவி செய்!

 

இதயங்கள்

நன்றியுணர்ச்சியாலும்

அன்பாலும்

நிரம்ப

அருள் புரி

 

மனங்கள்

மலர

மதங்கடந்து

இணைய

மகிழ்ச்சி நிரம்ப

மாற்றம் வர அருள் செய்!

 

அன்பின் வடிவமே

அற்புதங்கள் செய்தவனே

சந்தேகங்கொண்டவனைத் தேடிபோய்

காயங்கள் காட்டியவனே

மாயங்கள் செய்தவனே

 

உன்னை, நீ உதித்த பூமியைப் பார்த்ததில்லை.

நீ காட்டிய ‘அடுத்தவரை நேசி’ அன்பு வழியில்

பயணிக்கிறேன்!

 

Happy Birthday!

Merry Christmas!

பிரியமுடன்,

பரமன் பச்சைமுத்து

ParamanIn.com

4 Comments

  1. Mahalakshmi Swaminathan

    “Blessed are the peacemakers,for they will be called children of God”.. Nd u r one amongst them!! God bless u paraman uncle 🙂 :* Merry christmas 🙂

    Reply
    1. paramanp (Post author)

      We don’t need to be in any religion to pray, thank, love God. We are just HIS children. Illaihyaa? Loving you

      Paraman

      Reply
      1. Mahalakshmi Swaminathan

        Soo true uncle!! (y)

        Reply
  2. SUBRAMANIYAN.T

    மதங்களை கடந்து அன்பை முன்னிலைப்படுத்திய அற்புத வரிகள், வாழ்த்துக்கள்
    பரமன்

    Reply

Leave a Reply to Mahalakshmi Swaminathan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *