போன நிமிடம் வரை பறவையாயிருந்தது…

wp-1594258658641659303361867114202.jpg

போன நிமிடம் வரை பறவையாக
பலகனியின் தரையிலிப்போது சிறகாக

எந்தப் பறவை அஞ்சல் செய்ததோ
என் வீட்டு முகவரியில்

‘வூகான் இறைஞ்சிச் சந்தையில் புறாவிடமிருந்து பரவியது புதிய வைரஸ்’ 

ஒரு வைரல் செய்தி வரலாம் நாளை
புறாக்கள் புறக்கணிக்கப்படலாம் அவ்வேளை

அதற்குள் சிறகைக் கையிலெடு

சிறுவர்களைப் போலச் சிறகை சிலாகி
சிவப்பிந்தியனைப் போல சிறகை அணி

வாழ்வோம் வா!

– பரமன் பச்சைமுத்து
09.07.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *