யிப் மேன் – பெரும் மாஸ்டர்

wp-16023323413513965127511241191532.jpg

யிப் மேன் மிகப்பெரிய மாஸ்டர்.

நம் தலைமுறையினரின் வாழ்வு தொடங்கிய காலத்தில், நெருப்புச் சக்கரமென சுழன்று வெம்மையும் ஒளியையும் தந்து அடங்கிங்கொண்டிருந்தார்.

தன்னுள் எழுந்த தீரா ஒளியினாலும் ஆர்வத்தாலும் தான் கற்ற பாரம்பரிய சீனக் கலையான வின்ச்சுன்னை உணர்வு வழியில் மெருகேற்ற முயன்றதில், தான் குருவாக மதித்தவராலேயே தனது மனமுவந்த பள்ளியிலிருந்து வெறுத்து விலக்கப் பட்டவர்.

நகரத்திற்கு யிப்மென் வந்த போது சமகால தற்காப்புக் கலை ஆசான்களால் சந்தித்த சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பணம் பண்ண கலை தந்தவர்கள் கலையை ஊற்றித் தந்தவரை எதிர்ப்பது இயல்புதானே.

யிப்மென்னால் பல முறை நிராகரிக்கப்பட்டு பின்பு திருத்தப்பட்டதில் உறுவாக்கம் பெற்றவரே நான் போற்றும் புரூஸ்லீ.

நல்லதை நல்லதுக்காகவே கற்றுத் தரும் ஆசிரியர்கள் பொருளாதாரத்தின் வாயிலில் வறியவர்களாகவே நின்றிருந்தார்கள் என்பதற்கு யிப்மென்னின் வாழ்க்கையும் இன்னுமோர் உதாரணம். யிப்மென்னின் மனைவி போற்றத்தக்கவர்.

‘பரமனுக்கு புரூஸ்லீ ரொம்பப் பிடிக்கும்!’ என்று சொல்லும் மாணவர்கள், புரூஸ்லீயின் யிப்மென்னை மிகப்பெரும் குருவாக மதிக்கிறேன் நான் என்றறிவதில்லை. கடந்த ஜனவரி 1 புத்தாண்டு பொது நிகழ்ச்சியின் மலர்ச்சி உரையில் யிப் மென்னைப் பற்றியும் பேசியிருந்தேன்.

யிப்மென்னின் வாழ்வை திரைப்படமாக்கி மிகச்சிறப்பாகத் தந்திருக்கிறார்கள். திரைப்படத்திற்காக நிறைய மசாலா தூவியிருக்கிறார்கள் என்றாலும், யிப் மென்னின் வாழ்க்கை வரலாற்றையே அடிப்படையாக வைத்து பின்னியிருக்கிறார்கள். நான்காம் பாகத்திற்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன்.

யிப் மென் நமது காலத்தின் மிகப்பெரிய மாஸ்டர்.

வாழ்க! வளர்க!

பரமன் பச்சைமுத்து
10.10.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *