காவலர்களுக்கு ஒரு நாள் ஓய்வு…

காவல்துறையில் பணி புரிவோருக்கு சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்று சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் செய்துள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

(சேலத்திலோ எங்கோ ஒரு காவல் ஆணையர் இதை முன்பு முயன்று பார்த்ததாக நினைவு)

காவல்துறையினரின் மனவழுத்தத்தைக் குறித்து எழுதி மனு தாக்கல் செய்த அந்த மனிதருக்கு நன்றி.
அதை விசாரித்து சுழற்சி முறையில் ஒரு நாள் ஓய்வு என்பதை பரிந்துரைத்த நீதிபதி கிருபாகரன் அவர்களுக்கு…  மலர்ச்சி வணக்கம்.

மியுசிக் அகாடமி சிக்னல் அருகில் மேம்பாலத்துக்கு அடியில் உடல் சோர்வில் சீருடையோடு நகரின் வாகன இறைச்சல்களுக்கிடையே  உட்கார்ந்து உறங்கும் அந்த சகோதரிகள் தங்கள் வீட்டில் ஓய்வெடுப்பார்கள்.

– பரமன் பச்சைமுத்து
20.11.2020
சென்னை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *