செப்பரம்பாக்கம் திறந்தால் நல்லது

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றி நகைப்பு மீம்ஸ் போடுவோருக்கும், அதைக் கண்டு பீதியடைவோர்க்கும்…

வணக்கம்.

ஏரியைத் திறந்து விட வேண்டும். திறந்து விடுவதே நல்லது.

2015ல்…
ஒரே நாளில் 50cm மழை பெய்து ஏரி நிரம்பி உடைந்தது.

இன்று 2020ல்…
தற்போது வரை 20cm பெய்துள்ளது. செம்பரம்பாக்கத்தை இப்போதே திறந்து கொஞ்சம் நீரை வெளியேற்றுவது நல்லது. ஏரியையும் மக்களையும் காக்கும் செயல் அது.

வெறும் 1000கனடிதான் திறந்து அடையாறு ஆற்றின் மூலம் வெளியேற்றுகிறார்கள்.

அடையாறு ஆற்றின் கரைகளிலிருப்போர், தாழ்வான / தரைப்பாலம் உள்ள பகுதியில் பயணிப்போர் எச்சரிக்கை கொள்ள வேண்டிய நேரம்.
( ஆற்றைக் கடந்து சிலர் வரவேண்டியிருப்பதால் அவர்களது குடும்பத்தின் மனநிலையை கருத்தில் கொண்டு இன்று மாலை நடைபெற இருந்த மலர்ச்சி வகுப்பை ஒத்தி வைத்துவிட்டோம்)

மற்ற படி பதற்றம் கொள்ள வேண்டாம்

ஒருவேளை இப்போது தொடங்கி புயல் கரையேறும் அதிகாலை வரை மழை அடியடியென்று அடித்தாலும், 1000 கனடிநீர் வெளியேறுவதால் செம்பரம்பாக்கம் ஏரியும் சுற்றி வசிப்போரும் பாதுகாப்பாகவே இருப்பர்.

நன்றி!

  • பரமன் பச்சைமுத்து
    ஆர் ஏ புரம்
    25.11.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *