ஓதுவாரோடு வீதியில் நடந்தது

இரண்டாண்ணுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வில் என்னை அதிரச் செய்த காஞ்சிபுரத்து நிகழ்வு, இன்று திரும்பவும் அதிர வைக்கிறது.

மலர்ச்சி மாணவர் கீர்த்திநாதனின் கந்தன் எஸ்டேட்டின் புதிய லே அவுட் திறப்புவிழா மரம் நடுதலுக்கு போனபோது,
நீரணிந்த சிவநெறி ஓதுவார்கள் இருவர் திருமுறைகளை ஓதிய படியே நம் இருபக்கமும் நடந்து வரும் படி செய்திருந்தார். ‘ஐய்யோ, இது ஓவர். வேண்டாம்!’ என்றாலும் கேட்கவில்லை.
‘திருமுறைகள் ஓதுவது பரமனுக்கு பிடிக்கும். இவங்கதான் தமிழ்நாட்டின் சிறந்தவர்கள்! கூட்டிட்டு வந்துட்டேன்!’ என்று கீர்த்திநாதன் சொல்ல கூசி குணிந்து கும்பிட்டேன் அவர்களை. சில நிமிடம் பேசிவிட்டு விடைபெற்றார்கள்.

இன்று ஃபேஸ்புக் ‘3 years ago’ என்று காட்டிய அந்தப்படங்களைப் பார்த்துவிட்டு, ‘அண்ணா, கூட நடக்கற ஓதுவார் யாரு தெரியுதா, கலைமாமணி சீர்காழி ஞானசம்பந்த ஓதுவார் மூர்த்தி அவர்களின் குமாரர் திரு கதிர்வேல் சுப்பிரமணியன் ஓதுவார் மூர்த்திகள். இவர்களின் தாத்தாவிடம் தான் தருமை 26 வது சன்னிதானம் தேவாரம் பயின்றார். தலை சிறந்த ஓதுவார்கள் திருவாய் மலந்தருள மலர்மாலை சூடி வரும் பேறு யாருக்கும் வரும்…🙇🏼’ என்று வாட்ஸப்பில் அனுப்பி வயிறு கலங்க வைத்துவிட்டான்!

ஐயா! எங்கப்பா, வாட்ஸ்ஆப்பில் இல்லாததால, இதையெல்லாம் நல்ல வேளை பாக்கவே இல்லை!

சிறந்த ஓதுவார்கள் பாட, வணங்கியிருக்கவேண்டியவன் அவர்களோடு வீதிகளில் நடந்து வந்து அனுப்பி விட்டேனே!

😞😞😞

நிறைய சங்கதிகள் தெரியவில்லை எனக்கு!

🙏

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *