சபாநாயக சந்திப்பு

சென்ற ஆண்டு ‘டிசம்பர் 28 – 91 பேட்ச் – சவேரா மீட்’டிற்குப் பிறகு ஓராண்டு கழித்து சபாநாயகத்தை சந்தித்தேன் இன்று.

திருவண்ணாமலை வருவதற்கு முன்பே சபாவோடு சில நிமிட சந்திப்பு என்பது முடிவு செய்யப்பட்டது.

‘ரத்தபூமி’ வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இருப்பதால் தினமும் தொடர்பிலிருப்பதால், ஓராண்டு கழித்தே சந்திக்கிறோம் என்ற உணர்வே இல்லை.

மன்னம்பந்தல் கல்லூரி நாட்கள், 3 நிமிடத்தில் போகக்கூடிய தூரத்திலிருந்த பாலவெளி, விவசாய நாட்கள், இறந்து போன நம் வகுப்புத் தோழன் (செட்டி)செந்தில், மயிலாடுதுறை Base computer centerல் வேலை செய்த நாட்கள், டிகே ( கார்த்திகேயன் சார்), லட்சுமணன், வகுப்புத் தோழி செல்வசுந்தரி, ராஜ்குமார் – ராஜவேலுவை சந்திக்க சென்னை வந்தது, திருவண்ணாமலை நுழைவு, திருக்கோவிலூரில் பணி, சொந்தமாக கம்ப்யூட்டர் சென்டர், Toy shop நடத்தல், காதல் திருமணம் என சபாநாயகம் நடந்து கடந்த வந்த பாதையை அறிந்தது ஓர் அனுபவம்.

இன்று அமர்ந்திருக்கும் இந்த இடத்தை அடைய, பல திருப்பங்கள் கொண்ட கடினமான பாதையில் எத்தனை போராட்டங்களோடு பயணித்து வந்துள்ளான் சபாநாயகம் என்று திரும்பிப் பார்த்தது பெரும் உத்வேகத்தைத் தந்தது.

இதுவரையில் துணை செய்த இறையருள் இன்னும் சிறக்க வரும் காலம் முழுக்க துணை செய்யட்டும். பிரார்த்தனைகள்!

அண்ணாமலைப் பல்கழகத்தின் ஸ்டடி சென்டராக தனது கணிணி மையத்தை நிர்வகித்து நடத்ததிக் கொண்டிருக்கும் சபா, திருவண்ணாமலையில் பெயர் பெற்ற தொழிலதிபன். அவனது பணியிடத்தில் திடீரென்று போய் சந்தித்ததனால், வீட்டிலிருக்கும் அவனது மனைவியையும் மகளையும் சந்திக்க முடியவில்லை.

நல்ல சந்திப்பு,
நிறைய கற்றல்,
நல்லனுபவம்!

நன்றி சபா!

வாழ்க! வளர்க!

  • பரமன் பச்சைமுத்து
    திருவண்ணாமலை
    12.12.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *