போகி – முதல் மாற்றம்!

பெங்களூருவில் வாழ்ந்த காலங்கள், சென்னையில் வசிக்கும் காலம் என எங்கிருந்தாலும்  மார்கழியின் கடைசிநாளான போகியன்று சொந்த ஊருக்குப் பயணிப்பது இருபத்தியொன்பதாண்டுகளாக இறையருளால் தொடரும் வழக்கம்.

கர்நாடக பெங்களூருவாக இருந்தாலும் சரி, சென்னையாக இருந்தாலும் சரி. போகி அன்று நடத்தப்படும் சம்பிரதாய முறைகளால் மூச்சுத்திணற வைப்பதையே கண்டிருக்கிறேன்.  விடிந்த பிறகும் விலகாத மூட்டமாக போகி கொளுத்திய புகை நகரைச் சூழ்ந்து மேலேறாமல் நிற்கும். ‘டேய்… பழைய துணிங்களை, குப்பைய கொளுத்தறது கூட பரவாயில்லடா, இப்படி டயரைப் போட்டு கொளுத்தி அழும்பு பண்றீங்களேடா! எவ்வளோ பொல்யூஷன். வயசானவங்க, குருவிங்க எல்லாம் சாகறாங்க!’ என்று குமுறலும் கதறலும் வரும்.

இதை நிறுத்தச் சொல்லி வலியுறுத்தியே மலர்ச்சி போஸ்டர்கள் செய்வோம் ஒவ்வோர் ஆண்டும்.

இன்று… அதிசயம்! காலை சென்னையிலிருந்து மணக்குடிக்குப் புறப்பட்டுப் பயணிக்கிறேன். போகி கொண்டாடப் பட்டிருக்கிறது. ஆனால் காத்திரமான புகை மூட்டம் இல்லை. ஆகா… அருமை!

‘போகியைக் கொண்டாடுங்கள், டயர்களை பிளாஸ்டிக்கைக் கொளுத்தாதீர்கள்!’ என்று அறிவுறுத்தி கண்காணித்த அதிகாரிகளுக்கும், விழிப்புணர்வு பெற்ற மக்களும் சேர்ந்து செய்த மாற்றம் இது.

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
கிழக்குக் கடற்கரைச்சாலை
13.01.2021

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *