ஆரூர் கோவிலில்…

ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்.

ராஜேந்திர சோழன் இறந்த பிறகு பரவை நாச்சியார் ஆரூர் கோவில் பணியிலே தன்னைக் கரைத்துக் கொண்டதாகவும், கிழக்குக் கோபுரமருகில் அவர் வாழ்ந்த இடம் இன்று நாச்சியார் மண்டபம் என்று இருப்பதாகவும் வரலாறு சொல்கிறது.  பரவை நாச்சியார் கேட்டுக்கொண்டதற்கிணங்க மகன் ராஜாதித்யன், தந்தை ராஜேந்திர சோழன் பெயரில் கட்டிய மண்டபம் இன்னுமிருக்கிறது.

தில்லை, தந்தையின் தஞ்சை கற்றளி, தான் கட்டிய தாராசுரம், கங்கை கொண்ட சோழ புரம் என்று வேறு கோவில்களில் ஈர்ப்பு கொண்டிருந்த போதிலும், தன் காதற் பெருமாட்டிக்காக ஆரூரிலும் பற்று கொண்டிருந்திருக்கிறான் அப் பெருவேந்தன்.

சுந்தரரும், பரவையாரும், சங்கிலியாரும் நடந்து திரிந்த ஆரூர் கோவிலில், ராஜேந்திரனும் பரவை நாச்சியாரும் நடந்த அதே ஆரூர் பெரிய கோவிலில், இன்று திருமணத்திற்காக வந்த நாங்களும் திரிந்தோம்.
….

கோவிலின் கோபுர முகப்பில் இருந்த மீசை தாடி கண்ணப்பரும், பின்புறமிருந்த சிற்பமும் ஈர்த்தன.

கவனியுங்கள், அது சிங்கமும் அல்ல, குதிரையுமில்ல…யாளி!

– பரமன் பச்சைமுத்து
திருவாரூர்
14.02.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *