‘Tiruvarur Meet – 2021’ – 91 batch -Avccp

2

2

’91 Batch – AVCCP – Tiruvarur Meet – 2021′

13,14,15 Feb 2021

( சென்ற பகுதியின் தொடர்ச்சி)

‘செம்மனார் கோவில்’ பிரகாஷை பாராட்டியே ஆக வேண்டும்.
( முன்கதை: சென்ற ஆண்டு டிசம் 28 நம் ‘சவேரா மீட்’ படங்களை நான் ஃபேஸ்புக்கில் பகிர, அதைப் பார்த்து விட்டு ‘அடடா… மிஸ்டு ஆன் ஆப்பர்ச்சூனிட்டி!’ என்று வந்தவொரு கமெண்ட்டைப் பார்த்து விட்டு, யார் என்று கவனித்து, சாட் செய்து நம்பரை வாங்கினேன். அப்படி திரும்ப இணைப்பில் வந்தவரே பிரகாஷ். ரமேஷும் அதே வழியில்தான்!)
இந்த முறை பிரகாஷுக்கு தனியே ஒரு டெக்ஸ்ட்டை அனுப்ப, ‘விவரம் சொல்லு, வரேன்!’ என்று பதில் வந்தது. சொன்ன மாதிரி மதியம் வந்து நின்னான் மனுஷன். சூப்பர் பிரகாஷ்! வி லவ் யூ!

கேட்டீயும் ஸ்ரீதரும் மதியம் வர,
மெய்கண்டனாரும் சபாநாயகம் தம்பதியும் மாலை வந்தனர்.

( சுந்தர்ராஜனும் அமிர்தலிங்கமும் செருப்பு வாங்க போன நேரத்தில, குர்த்தாவை அயன் பண்ண ஏசி ஆன்ல இருக்கும் போதே அயர்ன் பாக்ஸை ஆன் பண்ணி மொத்த ஃப்ளோருக்கும் பவர் இல்ல ட்ரிப் ஆக வைச்ச புண்ணியவான் நாந்தான்! அப்புறம் அழைச்சி விளக்கி விவரம் சொல்லி சரி பண்ண பரிகாரம் செஞ்சதும் நாமே, மணிமாறன் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில வந்த அந்த வேளையில! )

….

சென்னையிலிருந்து வாங்கி வந்த கிஃப்டை மண்டபத்தின் எதிரிலிருந்த ஃபேன்சி கடையில் வ்ராப்பர் பண்ணி வருவதற்குள், 91 பேட்ச் நண்பர்களைக் காணோம். மண்டபம் முழுக்கத் தேடியும் காணோம்.

‘ஹலோ பரமன்! நான் மோனிகா! தெரியல? அனீஷ், தீப்தியோட ஃபேமிலி ஃப்ரெண்ட். தோசார்ட் ஓப்பனிங்க்ல பாத்தோமே! ஒரு ஸெல்ஃபி எடுக்கனும். என்ன தேடறீங்க?’

‘நீ எப்படிம்மா இங்க?’

‘மாப்பிள்ளை வீடு சைட் ரிலேட்டிவ். என்ன தேடறீங்க?’

‘என் காலேஜ் மேட்ஸ். கூட்டமா வந்த அங்கிள்ஸ்!”

‘மேல ஒரு ஃப்ளோர் இருக்கு பாருங்க. அதோ அங்க உட்காந்திருக்காங்க!’

‘அட.. அங்க ஒரு கேலரியா! சரி!’

அவர்களை கூட்டி கீழே வந்து ‘மலரே மௌனமா, மௌனமே…’ வாசித்துக் கொண்டிருந்த நாதஸ்வர தவில்காரர்களுக்கு அருகில் அமர்ந்தோம்.

மணமகனும் மணமகளும் வர, துவக்கத்திலேயே சந்தித்து விட முடிவு செய்து மணமேடைக்குப் போனோம். 91 பேட்ச் எல்லோரும் வந்து விட்டோம் என நினைத்து கிஃப்டைத் தந்துவிட்டு ஃபோட்டோவுக்கு நின்றால்… மேலே கேலரியில் 91 பேட்ச்சின் தோழிகள். ‘அடப்பாவி பொண்ணுங்களே, அங்க உட்கார்ந்திருந்த இவங்கள எழுப்பி அங்கேருந்து கூட்டிட்டு வந்தா, இங்க கீழ இருந்த நீங்க மேல அங்க போய் உட்காந்திட்டீங்களே! வாங்க, வாங்க, எறங்கி வாங்க. மேடைக்கு வாங்க!’ என்று கத்தியும் கையை ஆட்டியும் கூவினோம். புரிந்து கொண்டு முதலில் எழுந்த ஜெகதீஸ்வரிக்கும் வசுமதிக்கும் நன்றி சொல்ல வேண்டும். சில நிமிடங்களில் அவர்கள் அனைவரும் மேடையில் எங்களோடு இருக்க, ‘என்னை மட்டும் வுட்ருவீங்களா!’ என வனிதா எங்கிருந்தோ ஓடி வர, மணமக்களோடு 91 பேட்ச் க்ரூப் ஃபோட்டோ எடுக்கப் முக்கிய சம்பவம் நடந்தேறியது.

அமுதா மட்டும் மணமேடைக்கு அருகிலேயே நின்று கொண்டு பொறுப்பாய் பணியாற்ற, மற்றவர்கள் இருக்கைகளில் அமர்ந் தோம்.

மூணு ஸ்வீட்ஸ், சிறு இட்லி, மினி கீரை ஊத்தாப்பம், இடியாப்பம், ரொமாலி ரொட்டி, வடைகறி, கட்லட், தயிர்சாதம் என வகை வகையாய் வந்து கொண்டே இருந்தது இரவு உணவு. சுவையான உணவு. 250மிலி பிஸ்லரி வாட்டர் குடுவை நன்று. வழக்கமான 500 மிலி பாட்டிலில் பாதி வீணாகும்.

உணவு முடித்து மறுபடியும் மணமேடை பக்கம் சென்று வனிதாவை பார்த்து ‘மத்தவங்கல்லாம் இருப்பாங்க. நானும் அமிர்தலிங்கமும் கெளம்பறோம்!’ என்றதும், ‘கெளம்பனுமா?!’ என்ற வனிதாவின் கண்கள் பனித்திருந்தன. (மதியம் மேடையில் ஏறி எல்லோரையும் ஒருங்கிணைத்து மணமக்களுக்காக பிரார்த்தனை செய்த போதும் வனிதாவின் கண்கள் பனித்து கலங்கியிருந்தன.)

ஹோட்டல் செல்வி நண்பர்களைப் பார்த்து விட்டு அவர்களுக்கு 2021ஆம் ஆண்டின் மலர்ச்சி காலண்டர் கொடுத்து விட்டு புறப்பட்டோம்.

நாங்கள் தங்கியிருந்த அறை சபாவுக்கு, மணிமாறன் தங்கியிருந்தது ஸ்ரீதருக்கும் கேட்டீக்கும் என முடிவாக, முரளி – பாலா – சுந்தரராஜன் அதிகாலை புறப்படுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு, மணிமாறன், ராஜ்குமார், மௌலி, மெய்கண்டன் ஒரு காரில் மயிலாடுதுறை பக்கம்,
நானும் அமிர்தலிங்கமும் சென்னை பக்கம் புறப்பட்டோம்.

‘கும்பகோணம் வரைக்கும் என் கார்ல வாயேன்!’ என்று முத்து சொல்ல, நானும் அமிரும் முத்துவின் காருக்குத் தாவினோம். என் டிரைவர் என் காரை ஓட்டி வர கும்பகோணம் நோக்கி பயணித்தோம்.

கும்பகோணம் புறவழிச் சாலையில் முத்துவிடம் விடை பெற்று சென்னை நோக்கி புறப்பட்டோம்.

‘அமிர்தலிங்கம்! நம்ம க்ளாஸ் பொண்ணுங்க கலக்கனாங்க இல்ல. வனிதா வீட்டோடு கலந்து, தன் வீட்டு கல்யாணம் மாதிரி பொறுப்பெடுத்து எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சாங்க இல்ல!’

‘ஆமாம் பரமா! எவ்வளோ நல்ல பொண்ணுங்க இல்ல!’

‘ரெண்டு நாளு முன்னாடியே வந்து சேர்ந்து, பொறுப்பேத்துக்கிட்டு… பாக்கவே நல்லா இருந்தது மச்சி!’

‘ஆமாம் பரமன்… ரொம்ப நாளு கழிச்சி நம்ம ஃப்ரெண்ட்ஸ்களோட, போகவே மனசு இல்ல பரமா!’

‘டாய் மச்சீ! இது என்ன கதை ஓட்டற!’

‘ஆமாம் பரமா! முரளி நாராயணனோட, உன்னோட,நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாரோடயும் ஒரே ஃபீலிங்க் பரமா! அடுத்து யாரு வீட்டு கல்யாணம் பரமா?’

‘ம்..’

‘பரமா… இப்பயே சொல்லிடறேன். அஎன் பொண்ணு கல்யாணத்துக்கு சிதம்பரத்தில ரூம் போட்டு எல்லாரையும் இதே மாதிரி வரவைக்கறேன் பரமா. வந்துடனும்!’

பல நல்ல நினைவுகளோடு, காரின் முன் சீட்டை சாய்த்து கொண்டு, வந்திருந்த தலையணையில் தலை வைத்து போர்வையை விரித்து போர்த்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.(காரின் முன் சீட்டில் சீட்பெல்ட் அணிந்தே சாய்ந்து போர்த்திக் கொண்டு இரவுப் பயணத்தில் உறங்குவது என் வழக்கம்).

பின் சீட்டிலிருந்து என் போர்வையை இழுத்து நன்றாக எனக்குப் போர்த்திவிட்டு உதவிய அமீர் உறங்கவே இல்லை, காலை திருமணம் முடிந்து புறப்படப் போகும் நண்பர்களையும், இரு தினங்களில் நிகழ்ந்த நினைவுகளையும் மனதில் ஓட்டியபடியே, அதிகாலை 03.30க்கு மேடவாக்கம் வந்து சேரும் வரை.

அங்கே விழித்த நான், அமிரைப் பற்றி நினைத்துக்கொண்டே ஆர்ஏ புரத்திலிருக்கும் என் வீடு வந்து சேர்ந்தேன்.

வணக்கம் சென்னை!

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    15.02.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *