Tiruvarur Meet – 91 Batch Avccp : Final episode

*3*

’91 Batch – AVCCP – Tiruvarur Meet – 2021′

13,14,15 Feb 2021

( நிறைவுப் பகுதி)

மதிய உணவு முடித்து டீ பார்ட்டீ ஹாலுக்கு வந்த போது, அலங்கரிப்பு மேடையில் கீர்த்தனாவோடு கவிதாவும் அழகாக நின்று ஃப்ரேம் ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஃபோட்டோ எடுத்துக் கொள்ள முயல, நாங்கள் உள்ளே நுழைய வெட்கி விலகி ஓட முயற்சித்த தருணம் ஒரு கவிதை. ‘அட… நீங்க நில்லுங்க, நாங்க எடுத்துத் தரோம் படம்!’ என்று முரளியும் நானும் ஒரே நேரத்தில் பாய்ந்து படமெடுத்துத் தள்ளியது ஓர் அனுபவம்.

( ஒரு ஃப்ளாஷ்பேக்: பாலிடெக்னிக் சீக்கிரம் முடிந்து விடும்,  மாலை ஹாஸ்டலிலிருந்து கல்லூரி வாசலுக்கு காப்பி குடிக்க வந்தால், கல்லூரி வாசல் மாணவர்களால் நிரம்பி வழியும். ‘வளர்மதி ஸ்டோர்ஸ்’ அருகில் நின்று பார்த்து கொண்டே நிற்போம். அதில் தவறவே விட முடியாதவராக மிக அழகானவராக இருப்பார் ஏவிசி ஆர்ட்ஸ் காலேஜ் கவிதா. ஒரு நாள் நம் வனிதாவோடு அவர் இருப்பதைப் பார்த்து வியந்த போது மாப்படுகையிலிருந்து வரும் ஆர்ட்ஸ் காலேஜ் நண்பர் சொன்னார், ‘அது கவிதா, வனிதாவின் அக்கா!’)

சனிக்கிழமை மாலை வனிதா வீட்டில் கேசரி பரிமாறியவரைக் கண்டு நேரடியாக ‘நீங்க கவிதாவா!’ என்று நான் கேட்டதை கண்டு திகைத்த அவருக்கு, இந்த ஃப்ளாஷ்பேக் தெரியாதுதானே (இப்ப சொல்லிட்டேன் நேரடியா!)

இப்பவும் அதே மாதிரிதான் இருக்கிறார் கவிதா.  வந்திருந்த அனைவரையும் பார்த்துப் பார்த்து கவனித்துக் கொண்டார். நன்றி!

….

‘ஸ்ரீதர் அட்ராசிட்டீஸ்’:

‘அவரு பேரு என்ன, ஓ ராம் கண்ணனா? பரமன்… எனக்கு ராம் கண்ணனை தனியா தெரியும், மீனாட்சி சுந்தரியை தனியா தெரியும். இவர்தான் அவங்க ஹஸ்பெண்டுன்னு எனக்கு தெரியாது! ஹிஹ்ஹிஹ்!’

( கார்குலத் தலைவனுக்கு யமலோகத்தில் சித்திர குப்தனுக்கு கணக்கெழுத பேப்பர் சப்ளை தருபவனைக் கூடத் தெரியும். பேனா ராஜவேல் சப்ளை பண்ணுவான்!)

‘அந்த மாதம் வளர்ச்சி இதழ்ல அந்த கட்டுரை அருமை’ என்ற கணக்கில் கட்டுரைகளை குறிப்பட்டு என்னை திக்குமுக்காடச் செய்தார் திரு மாதவன், வசுமதியின் கணவர். கோவை மண்டல அரசு வேளாண்மை துறை பொறியாளர்.
நாம் கொண்டாடிய தருணங்கள் சிலவற்றை அவராகவே படமெடுத்து ‘அண்ணா மாதவன் (வசுமதி)’ என்ற குறிப்போடு அனுப்பி வைத்து அசத்தினார்.  கணவரைக் கூட்டி வந்த இந்தப் பெண்களுக்கும், அவர்களோடு திருமணத்திற்கு வந்த இந்த ஆண்களுக்கும் பெரும் பாராட்டுகள்!

….

பெயருக்கு ஏற்ற படி அழகாகச் சிரித்தபடியே இருந்த ஜகதீஸ்வரியின் மகன் சந்தோஷ், ஓடி ஓடி வந்து தன் கேமராவிலும், எங்கள் செல்லிடப்பேசியிலும் படமெடுத்து உதவி செய்த ‘உயர்ந்த பிள்ளை’
….

பத்தரைக்கெல்லாம் கண்கள் செருகி பதினொன்றுக்கு உறங்கிய பாலமுருகனை பார்க்கையில் நல்ல உணர்வு. (அதுவும் மிக அருகில் இத்தனை பேர் அமர்ந்து ரகளையில் இருக்கும் போதும்!) கடந்த கால ஏர்ஃபோர்ஸ் வார்ப்பு போல. 

…..

நீண்ட நாளுக்குப் பிறகு ராஜ்குமாரையும் மெய்கண்டனையும் நண்பர்களோடு சந்தித்தது நிறைவு. மெய்கண்டன் தோற்றத்திலும், வைத்தீஸ்வரன் கோவில் ஊரின் முக்கிய புள்ளியாகவும் மாறி விட்டார்.

….

ஆர்ட் ஆஃப் லிவிங் டீச்சர் கேரளத்து சேச்சி அமுதாவோடு ஆர்ட் ஆஃப் லிவிங் அனுபவங்கள் கொஞ்சமே கேட்க முடிந்தது. பையன் ஜெகஷோடு வீடியோ கால் போட்டு அனைவரையும் பேச வைத்துவிட்டார் சேர தேச சேச்சி!

….

முரளியும் அமிர்தலிங்கமும் கிட்டத்தட்ட கல்லூரிக் காலத்துக்கே போய் விட்ட சிறுபிள்ளைகளாக மாறி ஏதோ ஒரு கவிதைக்காக சண்டை போட்டு கலாய்த்து எங்களை சிரித்து குலுங்க வைத்தார்கள்.

இன்னமும் பஞ்சாயத்து முடியவில்லை!

….

சுந்தரராஜனின் ‘கிருஷ்ணகிரி கிசுகிசு’க்களை இங்கே பகிர முடியாது.

….

மலேசியா வாசுதேவன் பாடல்கள் 80களின் படங்கள் என
மாலைக்கருக்கலில் அந்தி சாய்கையில் கேட்டீ செய்த கொஞ்சூண்டு அட்ராசிட்டீஸ் ரசிக்கத்தக்கவை. காலேஜ் ஹாஸ்டல்ல இருந்த அதே மனுஷன், அப்படியே இருக்காரு!

(ஒரு பக்கம் கலாட்டா கச்சேரி நிகழ்த்திக் கொண்டே மறுபக்கம் கிஃப்ட்டுக்கான அவரவர் பங்குத்தொகையை ஏறக்குறைய எல்லாரிடமும் வசூலித்து விட்டார் மனுஷர்! கார்ப்பரேட் கிங்க்ஸ்!)

….

திருவண்ணாமலையிலிருந்து மயிலாடுதுறைக்கு அம்மாவை காரில் கொண்டு வந்து விட்டுவிட்டு, மனைவியோடு மணநிகழ்வுக்கு வந்திருந்தார் சபாநாயகம். சபாநாயகத்தின் மனைவி நம் ‘வளர்ச்சி’ இதழின் வாசகர் என்பது கூடுதல் மகிழ்ச்சி செய்தி.

….

நப்பின்னையின் கணவரான என்எல்சி இஞ்சினியரை சந்தித்தோம்.

….

க்ரூப் ஃபோட்டோவிற்கு எல்லோரையும் முகம் தெரியும் படி வரிசையாக ஒழுங்கு படித்தி நிறுத்திவிட்டு கேப்டன் தோனி போல ஓரமாய் போய் நின்ற மணிமாறன் ஒரு தியாகி!
….

போன பதிவில் ராஜ்குமார் பெயரை விட்டுவிட்டோம் என்ற சபா சுட்டிக்காட்ட, இதோ சேர்க்கப்பட்ட பதிவு:

வந்திருந்தோர்:

1. Vanitha, Tiruvarur
2. Napinnai, Puducherry
3. Jagadeeswari, Puducherry
4. Amudha, Kochin, Kerala
5. Vasumathy, Tiruppur
6. Meenakshi Sundari, Chennai
7. Rajavel, Chennai
8. Manimaran, Sirkali
9. Muralunarayanan, Bengaluru
10. Balamurugan, Bengaluru
11. Sundararajan, Krishnagiri
12. Amirthalingam, Chennai
13. Chandramouli
14. K Thiruneelakandan
15. Prakash R, Chennai
16. Muthu, Chennai
17. Meikandan, Vaitheeswaran koil
18. Rajkumar, Mayiladuthurai
19. Sabanayakam, Thiruvannamalai
20. Sridhar, Chennai
21. Paraman Pachaimuthu, Chennai

…..

அனைவரையும் ஒன்று சேர்த்து, பெரிய காரியமான மகள் திருமணத்தோடு கல்லூரி நண்பர்கள் சந்திப்பையும் ஏற்பாடு செய்து பரபரப்பின்றி அழகாக கையாண்டு முடித்து மகிழ்ந்து மகிழச்செய்த வனிதாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் பூங்கொத்து.

…..

வர முயற்சித்த ரிச்சர்டு சாம்சன், ரமேஷ், விசாரித்த ரவி கணேஷ் ஆகியோருக்கு… நன்றி!

வந்து, கலந்து, கிளர்ந்து, மகிழ்ந்து மகிழச்செய்த  நண்பர்களுக்கு… மலர்ச்சி வணக்கம்!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
16.02.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *