கோழியைப் போலக் குறுநடையிலேயே ஓடிக் கடந்த கால்கள்



கருவமரத்து சாலை பனஞ்சாலை
சோளக் கொல்லை ஈச்சம்புதர் அடர் ஒத்தயடிப்பாதையென

மணக்குடிக்கும் புவனகிரிக்குமான இடைவெளியை கோழியைப் போலக் குறுநடையிலேயே ஓடிக் கடந்த கால்கள்

மக்களித்துக் கொண்டதால் மாவுக்கட்டில் புகுந்திருக்கு

தூளியிலிருந்த பிள்ளையை
தூக்கையில்
தரை வழுக்கிய போதும்
தம்பியை விடாமல் தாங்கியதில்
தடம் பிசகி மடங்கின கால்கள்

சில நாட்கள் சங்கடம்
சில வாரங்கள் பறந்தோடும்
சீக்கிரமே குணம் வரும்

ஒரே இடத்தில் நீ
வீடு முழுக்க திரிய அவன் என
பாட்டியும் பேரனும் இடமாற்றம் கொள்ளும் காலமதில்

ஓய்வெடு உமாக்கா…
ஒரேயிடத்தில் ஓய்வெடு!

நைட்டியிலிருந்து புடவைக்கு மாறும் நாள் நாளையே வரும்
‘சிக் சிக்’கென்று சீக்கிரமாய் நடக்கும் உன் நடை சீக்கிரமாய் தொடரும்

அதுவரை
ஓய்வெடு உமாக்கா…
ஒரேயிடத்தில் ஓய்வெடு!

  • பரமன் பச்சைமுத்து
    குயப்பேட்டை
    25.03.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *