அம்மா – குளோபல்

ரேடியேஷன் டிபார்ட்மெண்ட்,
Dr வனிதா கிருஷ்ணமூர்த்தி அறை:

‘அமிர்தம் அம்மா, இந்த ஸ்கேன் படத்தப் பாருங்க. உள்ள எந்த பிரச்சினையும் இல்ல. நல்லா இருக்கீங்க.

சர்ஜரி பண்ணி ரேடியேஷன் மருந்து குடுத்து ஸ்கேன் பண்ண எல்லாருக்கும் ஒரு ரேடியேஷன் ட்ரீட்மெண்ட்டாவது குடுக்கற மாதிரி வரும். உங்களுக்கு எந்த ட்ரீட்மெண்ட்டும் தேவையில்லை.
உங்களுக்கு வந்த கட்டிய சர்ஜரி பண்ணி எடுத்த அந்த டாக்டர் டீம் அவ்ளோ நல்லா பண்ணிருக்காங்க. அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லுங்க! புற்று உடம்புல எங்கயும் இல்ல. நல்லா சாப்பிடுங்க! 3 வாரம் கழிச்சி கொரோனா வேக்ஸின் போட்டுக்கோங்க!’

‘தம்பி… நீங்க, உங்கம்மா ரெண்டு பேருக்கும் கடவுள் அருள் இருக்கு. ஜூலையில பாப்போம். சந்தோஷமா போயிட்டு வாங்க!’

டாக்டரின் அறையை விட்டு வந்ததும், அம்மாவும் நானும் நடு வழியிலேயே கட்டியணைத்துக் கொண்டு நின்றோம் கொஞ்ச நேரம். பெரும் நிம்மதியில் மகிழ்வில் அம்மாவின் கைகள் அதிர்வதை என் முதுகில் உணர்கிறேன்.

‘அம்மா, காப்பி குடிப்போமா? பரியை கேண்டீனுக்கு வரச் சொல்லிடறேன்!’

ஒரு மாத பத்தியத்திற்கு பிறகு முதல் காப்பியை குடிக்கப் போகிறார் அம்மா.

அம்மாவின் கையை பிடித்துக் கொண்டு கேண்டீன் நோக்கி நடக்கிறேன்.

‘இறைவா சரணம்!
‘அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ராஜசுந்தரம் சார்,நன்றி!’

  • பரமன் பச்சைமுத்து
    குளோபல் மருத்துவமனை, பெரும்பாக்கம்,
    சென்னை
    01.04.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *