ஆதலினால் அன்பு காட்டுங்கள்…

IMG-20150214-WA0013

IMG-20150214-WA0013

 

அன்பு காட்டுங்கள்,

அன்பு காட்டுங்கள்,

அடுத்தவர் மீது அன்பு காட்டுங்கள்.

 

ஒன்றாயிருந்ததை பிரித்து வைத்து இரண்டாய் செய்யும்  ஆசை,

இரண்டாயிருந்ததை இணைத்து ஒன்றாய் ஆக்கும் உயிர் சிமென்ட் அன்பு.

 

அருகில் இருப்பவரை தூரமாக்கி விடுவது ஆசை,

தூரத்திலிருப்பவரை

அன்மையில் உணரவைப்பது

அன்பு.

 

அன்பு ஊறும் அகத்தில்

அழுக்குகள் அகற்றப்படும்.

கழுவித் துடைத்துக் கடவுள் வரும் இடமாய் மாற்றப்படும்.

 

அதிகம் காயப்பட்டவரா நீங்கள்?

அப்படியானால்,

அன்பு காட்டுங்கள்

அன்பு காட்டுங்கள்,

எவரிடமாவது அன்பைக் காட்டுங்கள்!

அன்பு ஊறும் இடத்தில்

ரணங்கள் குணமாகும்.

காயங்கள் போய்  மாயங்கள் வரும்.

 

‘நீ இதையெல்லாம் செய்தால், இப்படியெல்லாம் நடந்துகொண்டால், எனக்கு உன்னைப் பிடிக்கும்,’ என்பது அன்பு அல்ல, அடிமை சாசனம்,

வியாபார பரிவர்த்தனை ஒப்பந்தம்.

 

அன்பென்பது அடுத்தவரின்

உணர்வை புரிந்து கொள்ளுதல்.

 

அன்பென்பது வெறும்

ஆரத்தழுவுதல் அல்ல,

அடுத்தவர் வாழட்டும் என்ற விழைதல்.

 

அன்பென்பது அகம்பாவம் துறந்து என்னோடு இரேன் என்று யாசித்தல்,

என்னை விட்டுப் போனபின்னும்

எங்கிருந்தாலும் வாழட்டும் என பிரார்த்தித்தல்.

 

ஆனோ, பெண்ணோ, ஆட்டுக்குட்டியோ, ஆரோ…

அன்பு காட்டுங்கள்,

அன்பு காட்டுங்கள்.

அடுத்தவரிடம் அன்பாயிருப்பது,

உண்மையில் உங்களுக்கே

நன்மை பயக்கும்.

உங்களை உயர் நிலைக்கு

எடுத்துப் போய் சேர்க்கும்!

உள்ளே ‘அவனை’ இழுத்து வந்து உட்கார வைக்கும்.

 

ஆதலினால்

அன்பு காட்டுங்கள்.

 

அகம் + அன்பு = சிவம்

அகம் – அன்பு = பாவம், பரிதாபம்.

 

+பரமன் பச்சைமுத்து

 

Facebook.com/MalarchiPage

7 Comments

  1. மிக அருமையாக உள்ளது. நன்றி

    அன்புடன்
    முத்து

    Reply
  2. Vani Pradeep

    Awesome. Amazing. Im wonderstruck!! Never read an indepth poem like this ever till date. Gives ne an awakening Guru!!! I am beyond the worldly feeling of love, affection. It has shown me the divine perspective of ‘Affection’… what it can cure/ heel and build. Beautiful…

    Reply
  3. சிவ இராஜேந்திரன்

    மகிழ்ச்சி வாழ்க வாழ்வாங்கு

    Reply
  4. gopi

    sir super

    Reply
  5. Geetha

    Very very super sir

    Reply
  6. Nithya Rama Venkatesh

    அருமை. நன்றி!

    Reply
  7. Krishnamoorthy

    அனைவரின் மீதும் நீங்கள் வைத்துள்ள அன்பு புரிகின்றது. அந்த அன்புக்கு நன்றி.

    Reply

Leave a Reply to Nithya Rama Venkatesh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *