உள்ளே ஒரு மாணவன்…

Ulley oru

1424586453799

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான ‘மாடர்ன் டீச்சர் – நியூ ஐடியாஸ் ஆன் எஜுகேஷன்’  போட்டியில், தேசிய அளவில் 700க்கும் மேற்பட்ட கல்லூரி, பள்ளி ஆசிரியர்களிடையே நடந்த பங்கேற்பில், ஆன்ட்ராய்டை வைத்து ஆங்கிலம் கற்பிப்பது எப்படி என்று காண்பித்து முதலிடத்தை வென்றுள்ளார்,

விழுப்புரம் சத்தியமங்கலம் அரசுப் பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப்.

நம் மாநிலத்து அரசுப் பள்ளி ஆசிரியர் தேசிய அளவில் முதலிடம் வந்தது பெருமை தருவதோடு பல விஷயங்களையும் நமக்குக் கற்பிக்கிறது.  நாளைய இந்தியா பற்றிய நம்பிக்கை துளிர்க்கிறது. திறமை என்பது எல்லா மனிதர்களிடமும், வாழ்வின் எல்லா நிலைகளில் இருக்கும் மனிதர்களிடமும் பொதிந்து கிடக்கிறது. வெளிக் கொணர்வோரே வெற்றி பெருவோர்.

ஆசிரியன் என்பவன் வெறும் ஆசிரியனல்ல. முதலில் அவன் ஓர் மாணவன். உள்ளே ஒரு மாணவனை உயிர்ப்புடன் வைத்திருப்பவனே உண்மையான ஆசிரியன் என்று உரத்து ஒலிக்கிறது.

திறமையை வெளிக்கொணர்ந்தால் திசை எட்டிலும் வெற்றிக் கொடி கட்டலாம்.  கோடிட்டுக் காட்டிய ஆசிரியர் திலீப்பிற்கு நன்றி!

வாழ்க ஆசிரியர்குலம்!   வளர்க பாரதம்!

+பரமன் பச்சைமுத்து

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *